You are here
Home > Uncategorized > வழக்குகளை வாபஸ் பெற பிராட்லி மானிங் கோரிக்கை!

வழக்குகளை வாபஸ் பெற பிராட்லி மானிங் கோரிக்கை!

வாஷிங்டன்:விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க தூதரக ரகசியங்களை கசியச் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ பகுப்பாய்வாளர் பிராட்லி மானிங் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

2010 மே மாதம் கைதான பிறகு சிறையில் மோசமான சூழலை தான் சந்திப்பதாக மேரிலாண்டில் ராணுவ நீதிமன்றத்தில் மானிங் தெரிவித்தார். மரணத்தண்டனை கிடைக்கும் குற்றமான எதிரிகளுக்கு உதவுவது உள்பட 22 பிரிவுகளில் மானிங் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காமலும், நடவடிக்கைகளை தாமதப்படுத்தியும் அரசு வழக்குரைஞர்கள் வழக்கை நீட்டிச் செல்வதாக மானிங்கின் வழக்கறிஞர் டேவிட் குப்ஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Top