You are here
Home > Uncategorized > ஈரான் தற்பொழுது கூடுதல் பலம் பெற்றுள்ளது – காம்னஈ!

ஈரான் தற்பொழுது கூடுதல் பலம் பெற்றுள்ளது – காம்னஈ!

டெஹ்ரான்:மேற்கத்திய நாடுகள் ஒவ்வொரு நாளும் தடைகளை விதித்து வரும்பொழுது ஈரானின் பலம் முன்பை விட நூறு மடங்கு கூடுதல் பலம் பெற்றுள்ளது என்று ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.

1979-ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி நடந்த உடனேயே அமெரிக்கா ஈரானின் மீது தடையை துவக்கியது. தடையின் சிறிய அளவிலான தடுப்பு ஊசியை போட்டுள்ள ஈரான் மக்களுக்கு தற்பொழுது கடுமையான தடைகளை எதிர்கொள்ளும் பலம் கிடைத்துள்ளது என்று காம்னஈ கூறியுள்ளார்.

Leave a Reply

Top