You are here
Home > Uncategorized > இந்தியா > VHPயின் கூட்டத்தால் அயோத்தியில் பரபரப்பு! – காவல்துறை குவிப்பு!

VHPயின் கூட்டத்தால் அயோத்தியில் பரபரப்பு! – காவல்துறை குவிப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பினர் சார்பில் நாளை தர்மசபை கூட்டம் நடைப்பெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூட்டத்தில்  கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிவசேனா கலந்துகொள்ளாமல் விலகி நிற்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிரச்சனைக்குரிய இடத்தை சுற்றி ஏற்கெனவே நிரந்தர 144 தடை உத்தரவு இருப்பதால் அங்கு எவரும் கூட்டம் சேராதபடி தடை நீடிக்கிறது. இதை உறுதிபடுத்த வேண்டும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தனது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து VHPயின் செய்தி தொடர்பாளரான சரத் சர்மா கூறும்போது, ‘இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ராமபக்தர்கள் தர்மசபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தங்க அயோத்தியில் அனைத்து கோயில்கள் மற்றும் மடங்களில் உணவுடன் இலவசமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

500 பேருந்துகள், 1000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 20,000 பைக்குகள் நிறுத்தவும் நிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளது. எங்கள் கூட்டத்தால் அயோத்தி முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையில், உபியின் பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏவான சுரேந்திரசிங் 5000 ஆதரவாளர்களுடன் நாளை ராமர் கோயில் பணியை அயோத்தியில் தொடங்குவதாக சர்சைக்குரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Top