You are here
Home > Uncategorized > எகிப்துடன் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம்: துருக்கி!

எகிப்துடன் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம்: துருக்கி!

கெய்ரோ:பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கும், அமைதிக்கும் எகிப்துடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புவதாக துருக்கி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கெய்ரோவில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியுடன் சந்திப்பை நடத்திய துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லு இதனை தெரிவித்தார்.

எகிப்தும், துருக்கியும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய தாவூத் ஓக்லு, வலுவான எகிப்து நாடு உருவாவது உலகத்தின் தேவையாகும் என்று தெரிவித்தார்.

எகிப்தின் புதிய தலைமையின் மீது பூரண நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த அவர், முர்ஸியை துருக்கிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Top