You are here
Home > Uncategorized > பல மணிநேரங்கள் வீடியோ கேம் விளையாடிய நபர் கஃபேயில் மரணம்!

பல மணிநேரங்கள் வீடியோ கேம் விளையாடிய நபர் கஃபேயில் மரணம்!

தைபே:தொடர்ச்சியாக 40 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய பதினெட்டு வயது இளைஞர் இண்டர்நெட் கஃபேயில் வைத்து மரணித்தார். தெற்கு தைவானில் தய்னன் நகரத்தில் சுவாங் என்ற இளைஞர் டியாப்லோ-3 என்ற கேமை தனது மரணம் வரை விளையாடிக்கொண்டிருந்தார். 2 தினங்களாக உணவு கூட சாப்பிடாதது மரணத்திற்கு காரணம் என போலீஸ் கூறுகிறது.

காலையில் கஃபேயின் பணியாளர் கதவை திறக்கும் பொழுது சுவாங் மேஜை மீது கவிழ்ந்து படுத்திருந்ததை கண்டுள்ளார். பணியாளர் சுவாங்கை தட்டி எழுப்பி ஏதேனும் சில அடிகள் நடந்தபொழுதே சுவாங் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

சுவாங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு அவர் மரணித்துவிட்டதாக உறுதிச்செய்யப்பட்டது. உணவையும், உறக்கத்தையும் தொலைத்துவிட்டு வீடியே கேமை விளையாடியது இளைஞரின் உடலும், உள்ளமும் சோர்வைய காரணமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தைவானில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது மரணிக்கும் 2-வது நபர்தாம் சுவாங். கடந்த பிப்ரவரி மாதம் நியூ தைபேயில் தொடர்ச்சியாக 23 மணிநேரங்கள் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் மரணமடைந்திருந்தார். மரணிக்கும் வேளையிலும் இவருடைய ஒரு கை கீ போடில் இருந்தது.

Leave a Reply

Top