You are here
Home > Posts tagged "ஆரோக்கியம்"

பெரிய உணவு வர்த்தக நிறுவனங்கள் நச்சுத்தன்மையை மூடி மறைக்கின்றன – அறிக்கை!

புதுடெல்லி:கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ)  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் உடல் பருமன், நீரழிவு(சர்க்கரை வியாதி) நோய்களுக்கு(obesity and diabetes) காரணமான ட்ரான்ஸ் ஃபேட், இனிப்பு மற்றும் உப்பின்(rans-fats, salts

இந்தியாவில் புற்றுநோய்க்கு இளைஞர்கள் அதிகம் பேர் பலி!

புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர்

இரத்தக்கட்டை போக்க நாட்டு வைத்தியம்

உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள மெல்லிய 'முடிவு இரத்த நாளங்கள்’ மற்றும் தசை செல்களில் சிதைவு ஏற்படும். இதனால், தோல் பகுதியைக் கிழித்துக்கொண்டு இரத்தம் வெளியேற முடியாமல் தோலுக்கு உள்ளேயே தேங்கி நின்றுவிடும். இதைத்தான் இரத்தக்கட்டு என்கிறோம். விளையாடும்போதோ, எங்கேயாவது இடித்துக் கொள்ளும்போதோ அல்லது தவறி விழும்போதோ வெளிப்புறமாக ஏற்படுவதுதான் இந்த இரத்தக்கட்டு. பொதுவாக காயம் ஏற்பட்டவுடன் அதைக் குணப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்தில் நிணநீர்(Lymph)  வந்து சேரும்.

ஆஸ்பிரின் உபயோகம் கான்ஸரை தடுக்கும் – ஆய்வில் தகவல்!

லண்டன்:வலி நிவாரணியான ஆஸ்பிரினை தினமும் உபயோகிப்பது புற்றுநோய் பீடிப்பதை தடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. விஞ்ஞான பத்திரிகையான த லான்ஸெட்டில் வெளியான இதுத்தொடர்பான 3 கட்டுரைகளில் ஆஸ்பிரினை தினமும் குறைந்த அளவில் உட்கொள்வது புற்றுநோயை தடுக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கூடுதல் பிரபலமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆஸ்பிரினை தினந்தோறும் உபயோகிப்பது பக்கவிளைவுகளை அதிகரிக்கச் செய்யும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ரோத்வெல்லும், குழுவினரும் ஆஸ்பிரின் உபயோகம்

ரூ.2.84 லட்சம் மதிப்புடைய புற்று நோய்க்கான மருந்து இனி 8,880 ரூபாய்!

புதுடெல்லி:2.84 லட்சம ரூபாய் மதிப்புடைய புற்று நோய்க்கான மருந்து ரூ.8880 க்கு விற்பனைச் செய்ய மத்திய அரசு ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் நாட்கோ ஃபார்மாவுக்கு(Natco Pharma)  அனுமதி அளித்துள்ளது. ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமான பேயர் கார்ப்பரேசன்(Bayer Corporation)  தயாரிக்கும் நெக்ஸாவர்(Nexavar 200mg)  200 எம்.ஜி என்ற மருந்து தற்பொழுது கிடைக்கும் விலையில் 30 மடங்கு குறைந்த விலைக்கு தயாரிக்கவும், விற்பனைச் செய்யவும் ஹைதராபாத்தில் உள்ள மருந்து கம்பெனிக்கு மத்திய அரசு

கோலாக்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனம்!

புதுடெல்லி:புற்றுநோயை உருவாக்கும் இரசாயன பொருளை அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக கோலாக்களில் கலந்திருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவில் சந்தையில் அளிக்கப்படும் கோலாக்களின் சேர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவர பெப்ஸியும், கோக்கோ கோலாவும் தீர்மானித்துள்ளன. ஆனால் இக்கம்பெனிகள் இந்தியாவில் சேர்மானங்களின் மாற்றத்திற்கு தயாராகுமா என்பது கேள்விக்குறியாகும். கோக்கோ கோலாவிலும், பெப்ஸியிலும் தவிட்டு நிறத்திலான 4-மீதைலிமிடாசோல்(4-methylimidazole, or 4-MI) என்ற இரசாயன பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் செண்டர் ஃபார் ஸயன்ஸ்

சிறுநீரக சிகிச்சைக்குத் தடையாகும் பொருளாதாரம்!

டெல்லி:சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. டயாலிசிஸ் (இடைச்சவ்வூடு மூலம் சிறுநீர் கலவை பிரித்தல்),

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்

லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள்

மூட்டுவலியும்(Arthritis) முடக்காத்தானும்(Balloon Vine)

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும்

குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்

சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது. அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும். சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின்

Top