You are here
Home > Uncategorized > பிரணாபுக்கு சிவசேனா ஆதரவு!

பிரணாபுக்கு சிவசேனா ஆதரவு!

புதுடெல்லி:குடியரசு தலைவருக்கான வேட்பாளர் குறித்து என்.டி.ஏவில் கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா காங். தலைமையிலான ஐ.மு வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.மு வேட்பாளர் பிரணாபுக்கு எதிராக வேட்பாளரை தேடுவதில் விருப்பமில்லை என்று ஐக்கிய ஜனதாதளம் அறிவித்துள்ள நிலையில் சிவசேனாவும் பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் சிவசேனாவின் பால்தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், ’தேசிய விருப்பத்தை முன்னிறுத்தி பிரணாபை ஆதரிக்கும் முடிவை எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக குடியரசு தலைவர் அந்தஸ்தை பணயம் வைத்துவிடக் கூடாது. வாள் கையில் இல்லாவிட்டால் போருக்கு களம் இறங்க கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்து நாம் ஒன்று என்பதை உலகிற்கு காண்பிக்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

Leave a Reply

Top