You are here
Home > Uncategorized > ஸஈத்:அமெரிக்க தீர்மானத்திற்கு நாங்கள் பொறுப்பு அல்ல – பாக்.அரசு!

ஸஈத்:அமெரிக்க தீர்மானத்திற்கு நாங்கள் பொறுப்பு அல்ல – பாக்.அரசு!

இஸ்லாமாபாத்:ஜமாஅத்து தஃவா தலைவர் ஹாஃபிஸ் ஸஈத் மற்றும் அவரது மனைவியின் சகோதரர் அப்துற்றஹ்மான் மக்கி ஆகியோரின் தலைக்கு பரிசு அறிவித்த அமெரிக்காவின் தீர்மானத்தில் நாங்கள் பொறுப்பு அல்ல என்று பாகிஸ்தான் அரசு லாகூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் தீர்மானங்களையும், பிரகடனங்களையும் நடைமுறைப்படுத்துவது மட்டும்தான் எங்களது கடமை என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஹாஃபிஸ் ஸஈத் சமர்ப்பித்த மனுவில் நீதிமன்ற உத்தரவின் படி தெரிவித்த பதிலில் அரசு தமது நிலைப்பாட்டை கூறியுள்ளது. அமெரிக்கா சொந்தமாக தீர்மானம் எடுத்துள்ளது. ஸஈதிற்கு பாதுகாப்பை உறுதிச்செய்வது மாகாண அரசின் வரம்பில் வரும் விவகாரமாகும் என பாக்.அரசு கூறியுள்ளது. இவ்வழக்கு மே மாதம் 7-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

Leave a Reply

Top