You are here
Home > Uncategorized > கூடங்குளம்:கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!

கூடங்குளம்:கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!

சென்னை:கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதாக மத்திய அரசால் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் மீண்டும் உள்துறை அமைச்சகத்தின் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ச் பிஷப் இவான் அம்புரோஸின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொஸைட்டி (டி.எம்.எஸ்.எஸ்.எஸ்) அலுவலகத்தில்தான் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

உள்துறையில் அக்கவுண்ட்ஸ் கண்ட்ரோலர் ஜிதேந்திரகுமார் ஜாவின் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் ரெய்டை நடத்தினர். பிஷப் ஹவுஸிலும் சோதனை நடத்தப்பட்டது. ரெய்டு வருகிற ஜூலை 7-ஆம் தேதி வரை தொடரும் என கூறப்படுகிறது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதாக குற்றம் சாட்டி டி.எம்.எஸ்.எஸ்.எஸ் உள்பட 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான லைசன்ஸை மத்திய அரசு ரத்துச் செய்திருந்தது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் நடத்திய ரெய்டில் முறைகேடுகளை கண்டுபிடித்ததாக கூறி லைசன்ஸ் ரத்துச் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து டி.எம்.எஸ்.எஸ்.எஸ் சென்னை உயர்நீதிமன்ற கிளையான மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் முதல் உலையில்(ரியாக்டர்) இருந்து வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டமும் தீவிரமடைந்துள்ள வேளையில் மத்திய அரசு இந்த ரெய்டு மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Top