You are here
Home > Uncategorized > கொளத்தூர் மணி கைது!

கொளத்தூர் மணி கைது!

சென்னை: சேலம் வருமான வரி அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டிருக்கிறார். சேலம் போலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், அஸ்தம்பட்டி போலிஸ் நிலையத்தில்விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

சேலம் வருமான வரி அலுவலகத்தில் தீப்பந்தம் வீசி எரிப்பதற்கான முயற்சி ஒன்று சில நாட்களுக்கு முன்னதாக நடந்திருந்தது.இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று கோரி, தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே, இந்தத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக  கூறி கொளத்தூர் மணியை போலிஸார் கைதுச் செய்துள்ளனர்.

கொளத்தூர் மணியை கைதுச் செய்துள்ள சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடையே கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Top