You are here
Home > Uncategorized > காஸ்ஸாவில் கழிவுகளை அகற்ற தடைபோடும் இஸ்ரேல்!

காஸ்ஸாவில் கழிவுகளை அகற்ற தடைபோடும் இஸ்ரேல்!

காஸ்ஸா:காஸ்ஸாவில் கழிவுகளை அகற்ற இஸ்ரேல் தடைவிதிப்பதாக ஃபலஸ்தீன் மனித உரிமை ஆர்வலர் அம்ஜத் அல்ஷவ்வா தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தடையால் காஸ்ஸாவில் கழிவுகளை அகற்றுவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுகாதார கேடு உருவாகிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

இப்பிரச்சனையை தீர்க்க சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை என அம்ஜத் கோரிக்கை விடுத்துள்ளார். கழிவுகள் அகற்றாமல் குவிந்து கிடப்பதால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நோய் பரவுவதாக காஸ்ஸாவில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக இஸ்ரேலின் அநீதமான தடையால் கடுமையான இன்னல்களை சந்தித்துவரும் காஸ்ஸா மக்கள் மீது சியோனிச அரசு கடுமையான மனித உரிமை மீறல்களை நடத்தி வருகிறது.

Leave a Reply

Top