You are here
Home > Uncategorized > லண்டன் ஒலிம்பிக்ஸ்:டோ கெமிக்கல்ஸ்க்கு எதிராக இந்தியா தூதரக ரீதியாக முயற்சி!

லண்டன் ஒலிம்பிக்ஸ்:டோ கெமிக்கல்ஸ்க்கு எதிராக இந்தியா தூதரக ரீதியாக முயற்சி!

புதுடெல்லி:வருகிற ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து அமெரிக்க நிறுவனமான டோ கெமிக்கல்ஸை நீக்குவதற்கு இந்தியா தூதரக ரீதியான முயற்சிகளை துவக்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான நபர்களின் மரணத்திற்கு காரணமான போபால் விஷவாயு விபத்திற்கு காரணமானவர்களான யூனியன் கார்பைடின் உரிமையாளர்களான டோ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்ஸ் போட்டி ஸ்பான்ஷர் ஷிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஒலிம்பிக்ஸ் கமிட்டி நிராகரித்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து தூதரக ரீதியான முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.

போபால் விஷவாயு விபத்தில் டோ கெமிக்கல்ஸின் பங்கினை குறித்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்கு நாடுகளுக்கு விளக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சகம் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் டோ கெமிக்கல்ஸிடமிருந்து பணம் வாங்கியதாக லண்டனில் இந்திய ஹைக்கமிஷனிடம் லண்டன் ஒலிம்பிக்ஸ் கமிட்டி விளக்கியிருந்தது.

சர்ச்சைக்குரிய கம்பெனியை நீக்க கோரிய இந்தியாவிற்கு இது பின்னடைவானது. இதனைத் தொடர்ந்து போபால் விஷவாயு துயரங்களை குறித்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளுக்கு புரியவைக்க தூதரக ரீதியான முயற்சியை இந்தியா துவக்கியது.

அதேவேளையில், இது மத்திய அரசின் நாடகம் என்றும், இம்முயற்சி பலனளிக்காது என்றும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Top