Thoothu Online - Daily Tamil News Portal

கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!
தோஹா:உலக நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப் பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது. மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ் வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு உணர்த்துகிறது.

கத்தரின் அரசு பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்ஃப் தேஜஸின் நான்காவது பதிப்பின் வெளியீடு துவக்கப்பட்டது.

தோஹா நகரின் தாரிக் இப்னு ஸியாத் இண்டிபெண்டண்ட் ஸ்கூலில் அரங்கு நிறைந்து காணப்பட்ட அவையில் கத்தரின் கலை-கலாச்சார துறை அமைச்சரின் ஆலோசகர் பேராசிரியர் மூஸா ஸைனல் கத்தர் தேஜஸ் பதிப்பின் வெளியீட்டை துவக்கி வைத்தார்.

கத்தர்-இந்தியா இடையேயான ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்தும் அடிக்கல்லாக மாற தேஜஸிற்கு சாத்தியமாகட்டும் என அவர் தனது உரையில் வாழ்த்து தெரிவித்தார்.

கத்தர் தேஜஸ் பதிப்பின் முதல் பிரதியை அல்ஜஸீரா சேனல் கரஸ்பாண்டண்ட் தய்ஸீர் அலூனிக்கு தேஜஸ் நாளிதழின் முன்னாள் மேனேஜிங் இயக்குநரும், எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவருமான இ.அபூபக்கர் ஸாஹிப் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பி.கோயா தலைமை வகித்தார்.

பல்வேறு சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடக வல்லுநர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காவல்துறையினர் பதிவுச்செய்யும் மரண வாக்குமூலம் செல்லும்: உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி:காவல்துறையினர் பதிவுச்செய்யும் மரண வாக்குமூலம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மஹராஷ்ட்ரா மாநிலத்தைச் சார்ந்த சலீம் குலாப் என்பவர் தனது மனைவி நஷாபீயை எரித்துக் கொலைச் செய்ததாக குற்றம் சாட்டி அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் மேல்முறையீடு செய்திருந்தார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், போலீஸ் காவலர் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படும் நேரத்தில், அவர் சுய நினைவில் இல்லை என்றும் சலீம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, சலீமின் மனுவைத் தள்ளுபடி செய்து, ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

“வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அந்தப் பெண் சுய நினைவுடன் இருந்தார் என்பதற்கு டாக்டர் தெளிவாகச் சான்றளித்திருக்கிறார்” என்று நீதிபதிகள் கூறினர்.

மாஜிஸ்திரேட்டுக்குப் பதிலாக போலீஸ் காவலர் பதிவு செய்தார் என்பதற்காக மட்டுமே மரண வாக்குமூலம் அதன் தன்மையை இழந்துவிடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ராம்தேவின் ட்ரஸ்டுகளுக்கு இனி வருமான வரி விலக்கு கிடையாது! – மத்திய அரசு அதிரடி!
புதுடெல்லி:ஹைடெக் யோகா குருவும், குறுகிய காலத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணத்தை குவித்து விட்டு கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் கேலிக்கூத்தை நடத்துபவருமான பாபா ராம்தேவின் அறக்கட்டளைகளுக்கு அளித்து வந்த வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்துச்செய்துள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் ரூ.58 கோடியை வரியாக செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி யோகபீடம், திவ்ய யோக மந்திர், பாரத சுவாபிமான் ஆகிய அறக்கட்டளைகளுக்கு வருமான வரித்துறை இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளது. இந்த அறக்கட்டளைகள் ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்று வருகின்றன.

இதன்மூலம் 2009-10 காலகட்டத்தில் ரூ.120 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே இதை வர்த்தக நடவடிக்கையாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆயுர்வேத மருந்துகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அவரது அறக்கட்டளைகள் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்று வந்தன. ராம்தேவ் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டனர். ராம்தேவின் அறக்கட்டளைகள் அன்னியச் செலாவணியில் முறைகேடுகள் செய்ததான புகார் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வருமான வரித்துறையினரின் ஆய்வு அந்த விசாரணைக்கும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ராம்தேவின் அறக்கட்டளைகள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த பின்பு இந்த தணிக்கையை சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

ரூ.7 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் ராம்தேவின் அறக்கட்டளைகள் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்தேவ் தனது வர்த்தக நிறுவனங்களின் வருவாய் மதிப்பு ரூ.1,100 கோடிக்கும் மேல் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

அவரது நான்கு அறக்கட்டளைகளிலும் ரூ.426.19 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் அவற்றின் செலவு ரூ.751.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல்:சங்மாவுக்கு பிஜு ஜனதா தளம் – அ.இ.அ.தி.மு.க ஆதரவு!
புவனேஷ்வர்/சென்னை:குடியரசு தலைவர் வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மாவை ஆதரிப்போம் என பிஜு ஜனதா தளமும், அ.இ.அ.தி.மு.கவும் அறிவித்துள்ளன. பழங்குடி இனத்தைச் சார்ந்த சங்மாவை குடியரசு தலைவர் பதவிக்கு தனது கட்சி ஆதரிக்கும் என்று பிஜு ஜனதா தளம் தலைவரும், ஒடிஸா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தமிழ முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களவை முன்னாள் தலைவரான பி.ஏ. சங்மா, குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். கடிதம் மூலமாகவும், கடந்த 15-ம் தேதி என்னை நேரிலும் சந்தித்து அவர் ஆதரவு கோரினார். இதுதொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடமும் விவாதித்தேன்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவளிக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இதுவரை குடியரசுத் தலைவர் ஆனதில்லை.

பி.ஏ. சங்மா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தகுதியும் திறமையும் படைத்தவர். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிப்பதில் அ.தி.மு.க. பெருமை கொள்கிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக் கூறுகையில், ‘ஒடிசா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் நான்கில் ஒரு பங்கு உள்ளனர். எனவே, சங்மா போன்ற ஒரு பழங்குடியினத் தலைவரை ஆதரிப்பது பொருத்தம் எனக் கருதுகிறோம்’ என்றார்.

முன்னதாக, வியாழக்கிழமை காலை சங்மாவின் மகளும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சருமான அகதா சங்மா, நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். சில நாள்களுக்கு முன் பி.ஏ. சங்மாவும் அகதாவும் ஜெயலலிதாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜெயலலிதாவுக்கும் நவீன் பட்நாயக்குக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பி.ஏ. சங்மா கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பி.ஏ. சங்மா சார்ந்துள்ள தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எங்களிடம் சங்மா ஏதும் பேசவில்லை. குறைந்த அளவே பலமுள்ள நிலையில் இதுபோன்ற மிக உயர்ந்த பதவிகளுக்கு நாம் ஆசைப்படக் கூடாது என்று பவார் கூறினார்.

குடியரசு தலைவர் பதவிக்கு தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. குடியரசு தலைவர் பதவி வேட்பாளர் குறித்து அடுத்த மாதம் முடிவு தெரிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திடீரென நவீன் பட்நாயக்கும், ஜெயாவும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.ஏ.சங்மாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை: மமதாவிற்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம்!
புதுடெல்லி:மேற்கு வங்காள மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம்(என்.சி.டபிள்யூ) தெரிவித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மமதா சர்மா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று(வியாழக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியது:

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசின் கீழ் இந்த வன்முறை அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த இரு மாதங்களில் இது மேலும் கூடியுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றங்களை நிரூபிக்க முயலும் அதிகாரிகள் விசாரணை பூர்த்தியாகும் முன்னரே இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில், யார் பக்கமும் சாராமல் பொதுப்படையான விசாரணைகள் நடத்த மாநில அரசு உறுதியளித்திருக்கிறது. ஆயினும், அது போன்ற நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

வழக்கு விசாரணை துரிதமாகவும் குறிப்பிட்ட காலவரையறை வகுத்தும் நடைபெற வேண்டும். விசாரிப்பு தடைபடக் கூடாது. விசாரணை செய்யும் அதிகாரி பாதி விசாரணையில் இடமாற்றம் செய்யப்படக் கூடாது. குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

தேசிய அளவில் உள்ள பாலியல் பலாத்கார அளவைவிட மேற்கு வங்கத்தில் இரு மடங்கு உள்ளது. ஆயினும் மமதா பானர்ஜியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று நான் கூறவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை: தீர்ப்புக்காக காத்திருக்கும் 1 லட்சம் வழக்குகள்!
புதுடெல்லி:இந்தியாவில் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. இத்தகவலை சமூகநீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இத்தகைய வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த தற்போதைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

1989-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தொடர்புடைய மாநிலங்களின் கருத்துக்களை ஆராய அம்மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 19,939 வழக்குகளும், மத்திய பிரதேச மாநிலத்தில் 13,590 வழக்குகளும் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளன. ராஜஸ்தானில் 11,524 வழக்குகள், குஜராத்தில் 9,437 வழக்குகள் ஆகியன தீர்ப்புக்காக குவிந்துள்ளன என்று தெரிவித்த முகுல் வாஸ்னிக், சட்டத் திருத்தங்கள் குறித்து விளக்கமாக தெரிவிக்கவில்லை.

ஆறு மாநிலங்கள் தங்கள் பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

போஸ்னியா இனப்படுகொலை: மிலாடிச் மீதான விசாரணை துவங்கியது!
த ஹேக்:போஸ்னியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பிற்கு தலைமை வகித்த ராட்கோ மிலாடிச் மீதான விசாரணை த ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்(ஐ.சி.சி)துவங்கியது.

பழைய யூகோஸ்லாவியாவுக்காக தனியாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயம் முன்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று  வழக்கு பற்றிய ஒலி-ஒளி விவரணப் பதிவொன்றை வெளியிட்டனர்.

கைது செய்யப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிவுறும் வேளையில் முன்னாள் செர்பியா ராணுவ தலைமை தளபதி மீதான விசாரணை துவங்கியுள்ளது.

போர்க்குற்றம், மனித இனத்திற்கு எதிரான குற்றம் உள்பட 11 குற்றங்கள் மிலாடிச் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஐ.நா அமைதிப்படையின் அங்கமான டச்சு படை வீரர்கள் பாதுகாவலுக்கு நின்றிருந்த வேளையில் 1995-ஆம் ஆண்டு ஸ்ரெப்னிகாவில் ஐ.நா அகதி முகாமில் நடத்திய கூட்டுப் படுகொலைதான் போஸ்னியா இன அழித்தொழிப்பில் மிகவும் கோரமானதாகும்.

பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 8 ஆயிரம் பேர் அநியாயமாக கொலைச் செய்யப்பட்டனர். ஒவ்வொரு குற்றத்திலும் மிலாச்சின் பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது என்று வழக்குரைஞர் தெர்மோத்க்ரூம் கூறினார்.

இதுத் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். திட்டமிட்டு முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மிலாடிச்சும், அவரது கூட்டாளிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளை நடத்தியதாக க்ரூம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணையை பார்க்க பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நீதிமன்றம் வருகைத் தந்தனர். போஸ்னியா இன அழித்தொழிப்பிற்கு தலைமை தாங்கிய செர்பிய தலைவனும், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொலிட் பீரோ உறுப்பினருமான ஸ்லோபோதான் மிலாசெவிச் விசாரணை பூர்த்தியாகும் முன்னரே 2006-ம் ஆண்டு மாரடைப்பில் மரணமடைந்தார்.

அதேவேளையில் ‘ஸ்ரெப்னிகாவில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை தேடுகிறார்கள்’ என்ற வாசகம் அடங்கிய பேனர்களை ஏந்தி ஏராளமானோர் நீதிமன்றத்தின் வெளியே திரண்டிருந்தனர்.

1992-ஆம் ஆண்டு போஸ்னியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துவங்கிய முஸ்லிம் இனப் படுகொலையில் குறைந்தது 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொலைச் செய்யப்பட்டார்கள் என்பது அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரமாகும்.

இறந்த உடலின் அடியில் படுத்துக்கொண்டு ப்ரெவிக்கின் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பினேன்!
ஓஸ்லோ:நார்வே நாட்டின் உட்டோயா தீவில் ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டாக்களில் இருந்து இறந்த உடலில் கீழே படுத்திருந்து தப்பியதாக அச்சம்பவத்தில் உயிர் தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ப்ரெவிக்கிடம் விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்றத்தில் 17 வயதான இங்வில்ட்லாரின் தனது பீதி நிறைந்த அனுபவத்தை விவரித்தார்.

ப்ரெவிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய உடன் தனது மீது கிடந்த இளம்பெண்ணின் மொபைலை எடுத்து எமர்ஜென்சி பிரிவை தொடர்புகொள்ள முயற்சித்ததாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியது:மொபைல் ஃபோன் சார்ஜர் வாங்கச் சென்ற நான், துப்பாக்கிச் சத்தம் கேட்டபொழுது ஏன் என்று எனக்கு புரியவில்லை. பின்னர் ஆட்கள் ஓடுவதை கண்டபொழுது நானும் அவர்களுடன் ஓடினேன். அடுத்துள்ள ஒரு கஃபேயில் நான் நுழைந்தேன். நானும் இன்னொரு இளம்பெண்ணும் ஒரு பியானோவின் பின்னால் சென்று மறைந்து நின்றோம். ஆனால், எங்களை கண்டவுடன் ப்ரெவிக் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இரண்டு பேர் மீதும் தோட்டா தாக்கிய பொழுதும், என்னுடன் இருந்த பெண் தோட்டா பாய்ந்து இறந்து என் மீது விழுந்தாள்.

துப்பாக்கிச்சூடு முடியும் வரை உடலை அசைக்காத நான், இறந்த பெண்ணின் அடியில் அசையாமல் கிடந்தேன். சம்பவம் நடந்து முடிந்து, தலையை உயர்த்திய பொழுது, உயிர் தப்பிய இதர இரண்டு பேரையும் அந்த அறையில் கண்டேன். மரணித்த பெண்ணின் செல்ஃபோனை எடுத்து எமர்ஜென்சி செல்லுடன் தொடர்புகொள்ள முயன்றபொழுதும் தொடர்பு கிடைக்கவில்லை. பின்னர் எனது தாயாரை அழைத்து நான் ஆபத்தில் சிக்கியிருப்பதை தெரிவித்தேன்’ என்று இங்வில்ட் கூறினார்.

கூட்டுப் படுகொலையில் உயிர் தப்பிய இதர நபர்களும் தங்களது அனுபவத்தை நீதிமன்றத்தில் விவரித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தின் படத்தை நீதிமன்றத்தில் காட்டியபொழுது, தான் ஒருபொழுதும் நினைவுகூற விரும்பாத நிமிடங்கள் அவை என்று இங்வில்ட் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நார்வே நாட்டில் வலதுசாரி பயங்கரவாதியான ப்ரெவிக், உட்டோயா தீவில் 69 பேரையும், ஓஸ்லோவில் 7 பேரையும் கொடூரமாக சுட்டுக் கொன்றான். ப்ரெவிக் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் தான் செய்தது குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டான்.

உலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை! – WHO
உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

மக்கள் கூடுதலாக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொண்டு, குறைவான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மக்கட் தொகையில் 12 சதவீதமானவர்கள் உடல் பருமனுடையவர்களாக கருதப்படுகிறார்கள்.

இதேவேளை, குழந்தை பேறு காலத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள் இப்போது பெருமளவில் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதே போல தடுப்பூசி போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிறார்களின் உயிரிழப்பு வீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புஷ் நிரபராதிகளை சித்திரவதைச் செய்தார், ஒபாமா கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்துகிறார் – நோம் சோம்ஸ்கி!
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் பிரபல அமெரிக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான நோம் சோம்ஸ்கி.

ஆஃப்கானிஸ்தானிலும், யெமனிலும் அமெரிக்க ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல்களை கடுமையாக கண்டித்த சோம்ஸ்கி, புஷ் அரசு நிரபராதிகளை சித்திரவதைச் செய்து கடத்திய பொழுது, ஒபாமா மக்களை கொன்றொழித்து வருகிறார் என குற்றம் சாட்டுகிறார்.

புஷ்ஷிற்கு எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் கடத்திச்சென்று சிறைக்கூடங்களில் வைத்து சித்திரவதைச் செய்வார். ஒபாமாவோ, ஆட்களை கொலைச் செய்வதால் சிறைக்கூடங்களுக்கு தேவையில்லை. என்று சோம்ஸ்கி ஒரு நேர்முகத்தில் கோபத்துடன் கூறினார்.

அமெரிக்க அறிஞர் அன்வர் அல் அவ்லாகியின் யெமனில் வைத்து கொலைச் செய்ததை சோம்ஸ்கி வன்மையாக கண்டித்தார். யெமனில் அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவ்லாகியை கொலைச் செய்தது தவறு என கூறிய சோம்ஸ்கி, இச்செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ரீதியையும் கண்டித்தார்.

சிரியாவில் 15 சிவிலியன்கள் படுகொலை: ராணுவம் அட்டூழியம்!
பெய்ரூத்:வடக்கு சிரியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் 21 க்கும் மேற்பட்ட மக்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ஸம்மாஸ் நகரில் 15 சிவிலியன்களை ராணுவம் கொலைச் செய்துள்ளது.

ஐ.நா கண்காணிப்புக் குழுவைச் சார்ந்த 4 பேர் எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பில் உள்ளனர். தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ராய்ட்டர் செய்தி நிறுவன பிரதிநிதிகளிடம், தாங்கள் சிறைவைக்கப்படவில்லை என்றும், ஃப்ரீ சிரியா ஆர்மியின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஐ.நா கண்காணிப்பாளர்கள் தற்பொழுது ஃப்ரீ சிரியா ஆர்மியின் பாதுகாப்பில் உள்ளனர். ராணுவம் நடத்திய ஒரு குற்றச்செயலை அவர்கள் நேரடியாக கண்டதால், வெளியே வந்தால் அவர்களை ராணுவம் கொலைச் செய்துவிடும்’ என்று ஃப்ரீ சிரியா ஆர்மியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா கண்காணிப்பாளர்கள் பயணித்த ட்ரக், தாக்குதலில் சேதமடைந்தது. இத்லிப் நகரத்தில் கான் சைக்கூன் நகரத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐ.நா கண்காணிப்பாளர்களின் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது.

‘மோகன் பாகவத்தை சந்தித்தது கூட கிடையாது’- அன்னா ஹஸாரே!
நாக்பூர்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட கிடையாது என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்னா ஹஸாரே கூறியது: ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஒருபோதும் நாடியது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட கிடையாது.ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு மோகன் பாகவத் ஆதரவு அளிப்பதாக அறிவிக்க கூடாது.

ஊழல் புரிந்துள்ள 14 அமைச்சர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பதில் கிடைத்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அரசிடம் முறையிடுவோம். எதுவும் நடக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிரசாரத்தைத் தொடங்குவோம்’ என்றார் ஹஸாரே.

ஒரே நாளில் 25 கோடிக்கு விளம்பரம்: ஜெயாவின் புதிய புரட்சி!
சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது. தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.

ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.

ஒருவருட சாதனைகள் தாம்(சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெரும்பாலான இந்திய பதிப்புகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த ஹிந்து, எக்கணாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், மிண்ட், பிசினஸ் ஸ்டாண்டர்ட்ஸ் ஆகிய பத்திரிகைகளில் நாட்டின் பெரும் நகரங்களின் அனைத்து பதிப்புகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது.

முதல் பக்கம் மட்டுமல்ல மூன்று உள்பக்கங்கள் முழுவதும் பல வர்ணங்களில் விளம்பரத்திற்காக பத்திரிகைகள் இடத்தை ஒதுக்கின. சென்னையிலும், மும்பையிலும் வெளிவராத கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மன், டெலிக்ராஃப் போன்ற பத்திரிகைகளிலும் கூட விளம்பரம் வெளியானது. வழக்கமாக பெரும் நிறுவனங்கள் தேச முழுவதும் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறியடிக்கும் விதமாக ஜெயாவின் விளம்பர சாதனை அமைந்துள்ளது.

தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

இஸ்ரேல் அமைச்சரின் இந்தியா சுற்றுப்பயணத்திற்கு தடை விதித்த பாதுகாப்பு அமைச்சகம்!
புதுடெல்லி:ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்கின் இந்திய சுற்றுப்பயணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் எதிர்ப்பு மூலம் நடைபெறவில்லை.

பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மாதம் ‘டிஃபெக்ஸ்போ’ என்ற பெயரில் டெல்லியில் ஏற்பாடுச்செய்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறும் வேளையில் இஸ்ரேல் அமைச்சரின் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு வர தயாராக இருந்தனர்.

தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி சர்ச்சை, தரைப்படையின் ஒரு பிரிவு டெல்லியை நோக்கி ரகசியமாக முன்னேறியது தொடர்பான செய்தி உள்நாட்டில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம் ஆகிய காரணங்களால் பாதுகாப்பு அமைச்சகம் பாரக்கின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இச்சூழலில் இஸ்ரேல் அமைச்சர் தலைமையிலான குழுவினரை இந்தியாவுக்கு அழைப்பது புதிய சர்ச்சைக்கு வழி வகுக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் கருதியது.

குறைந்த கால அளவிலேயே இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக மாறியுள்ள இஸ்ரேல், இச்சுற்றுப்பயணத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.

டிஃபெக்ஸ்போவில்(பாதுகாப்புத்துறை கண்காட்சி) கூடுதல் இடம் இஸ்ரேலின் 20 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கூட்டாளியாக கண்காட்சியில் இஸ்ரேல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகையதொரு சூழலில் இஸ்ரேலின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு வருவது மிகச்சிறந்த வாய்ப்பை உருவாக்கும் என இஸ்ரேல் கருதியது.

முன்னர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளும், ஊழலும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு கறுப்புப் பட்டியலில் சேர்த்த இஸ்ரேல் அரசின் ஆயுத தயாரிப்பு நிறுவனமான இஸ்ரேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீ(ஐ.எம்.ஐ) -ஐ கூடுதலான நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியும் இச்சுற்றுப்பயணத்தின் மூலம் நடத்தலாம் என இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு இச்சுற்றுப்பயணத்தில் விருப்பம் இல்லை.

1745 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததைத் தொடர்ந்து இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபடுவது தடைச் செய்யப்பட்டுள்ள ஐ.எம்.ஐ கட்டிய 224 கோடி ரூபாயின் வங்கி உத்தரவாத ஆவணத்தை(bank guarantee)  கடந்த மாதம் மத்திய அரசு பறிமுதல் செய்தது. இந்நடவடிக்கையை எதிர்த்து ஐ.எம்.ஐ டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 28,595 குழந்தைகள் கடத்தல் – மாநிலங்களவையில் தகவல்!
புதுடெல்லி:தேசிய குற்றவியல் ஆவண பதிவகத்தின் தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 28,595 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று(புதன்கிழமை) எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது: ‘தேசிய குற்றவியல் ஆவண பதிவகம் தந்த தகவலின் அடிப்படையில் 2008-ல் 7,862 பேரும் 2009-ல் 9,436 பேரும் 2010-ல் 11,297 பேரும் கடத்தப்பட்டுள்ளனர். 1.84 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை. காணாமல் போன குழந்தைகளை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பள்ளிகள், பள்ளிகளுக்குப் பயணம் செய்யும் வாகனங்களைக் கண்காணிக்கவும், குழந்தைகள் கூடி விளையாடும் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் ஆகிய பகுதிகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குற்றம் அதிகமாக நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு அப்பகுதியில் போதுமான கேமராக்கள் பொறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த ஊழல் வழக்குகள்!
புதுடெல்லி:கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1451 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ பதிவுச்செய்துள்ளது என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று(புதன்கிழமை) எழுத்துமூலம் பதில் அளித்த அவர் கூறியது: எத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் மத்திய அரசிடம் பராமரிக்கப்படுவதில்லை.

எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில், நடப்பு ஆண்டு மார்ச் 31-வரை, 8 வழக்குகளில், 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசு தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் முறைகேடாக செயல்பட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2010-ல் 4 பேர் மீதும், 2011-ல் 2 பேர் மீதும், இந்த ஆண்டு ஒருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு 2011-ல் 5,573 லஞ்ச குற்றச்சாட்டுகள் வந்தன. இதுவே 2010 மற்றும் 2009-ல் முறையே 5,327 மற்றும் 5,783 குற்றச்சாட்டுகள் பெறப்பட்டன.

2011, 2010 மற்றும் 2009 ஆண்டுகளில் பெறப்பட்ட குற்றச்சாட்டுகளில் முறையே 5,341, 5,522 மற்றும் 5,317 குற்றச்சாட்டுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

எடியூரப்பா:சி.பி.ஐ ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின!
பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பான வழக்கில் சிக்கிய எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று(புதன் கிழமை) நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதற்கு 2 நிறுவனங்களுக்கு எடியூரப்பா அனுமதி அளித்தது தொடர்பாக, உயர்நிலைக் குழுவின் (சி.இ.சி.) பரிந்துரையின்பேரில், சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நடத்தி ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன்குமார் ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. பதிவு செய்தது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 16 மணிநேரத்தில், புதன்கிழமை காலை 6.15 மணி முதல் பெங்களூர், ஷிமோகாவில் உள்ள எடியூரப்பாவின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலை, டாலர்ஸ் காலனி, ஷிமோகா விநோபா நகரில் உள்ள எடியூரப்பாவின் வீடுகளில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

எடியூரப்பாவின் மருமகன் சோகன்குமார் வசித்து வரும் ஆர்.பி.சி.லே-அவுட் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெல்லாரி மாவட்டம், சந்தூர் வட்டம், தோரணக்கல் நகரில் அமைந்துள்ள ஜிந்தால் சுரங்க நிறுவனம், அதன் முதன்மைச் செயல் அதிகாரி வினோத் பாண்டே, பெல்லாரியில் உள்ள சவுத்வெஸ்ட் சுரங்க நிறுவன அலுவலகம் மற்றும் அதன் முதன்மைச் செயல் அதிகாரி பிரவீண் சந்திராவின் வீடு, மாலூரிலுள்ள முன்னாள் அமைச்சர் கிருஷ்ணைய்ய ஷெட்டியின் அலுவலகம், பெங்களூர் ராஜாஜி நகரிலுள்ள வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதுதவிர, எடியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திராவுக்குச் சொந்தமான பெங்களூர் சேஷாத்ரிபுரத்திலுள்ள பிரேரணா சேம்பர்ஸ் வணிக வளாகம், பிரேரணா அறக்கட்டளை, தவளகிரி பிராப்பர்டீஸ், பகத் ஹோம் பிராப்பர்டீஸ் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது எடியூரப்பாவின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ. ஐ.ஜி. லட்சுமிநாராயணா தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் எடியூரப்பாவின் வீடுகளில் சோதனையிட்டனர். பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த 8 சி.பி.ஐ. குழுக்கள் பெங்களூர், ஷிமோகா, பெல்லாரியில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.

ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது எடியூரப்பா வீட்டில் இருந்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனை மாலை வரை தொடர்ந்தது.

எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அடுத்தடுத்த நாள்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரேஸ்கோர்ஸ் சாலை இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்ததும், பிற்பகல் 12.30 மணியளவில் அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஷோபா கரந்தலஜே, முருகேஷ் நிரானி, சி.எம். உதாசி, உமேஷ்கத்தி, எம்.எல்.ஏ.க்கள் ஹரீஷ், லட்சுமிநாராயணா ஆகியோர் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினர். சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஜெயாவின் ஓராண்டு ஆட்சி சாதனையின் லட்சணம் இது தான்..

கார்ட்டூனிஸ்ட் பாலா

ஹிமாயூனின் நாவலுக்கு பங்களாதேஷில் தடை!
டக்கா:பிரபல எழுத்தாளர் ஹிமாயூன் அஹ்மதின் அரசியல் நாவலான தையாலி(சுவர்) வெளியிடுவதற்கு பங்களாதேஷ் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

1975-ஆம் ஆண்டு ராணுவ புரட்சியில் பங்களாதேஷின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜீபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் வரலாற்று உண்மைகளை திரித்து கூறியிருப்பதால் தடை விதிப்பதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்களை திருத்தும் வரை இத்தடை தொடரும்.

முஜிபுர் ரஹ்மான் கொலை தொடர்பான சம்பவத்தைக் குறித்து முதன் முதலில் வெளியான நாவலான தையாலியில் கூறப்படும் தகவல்கள் எதிர்கால தலைமுறைக்கு தவறான செய்தியை அளிப்பதாக அட்டர்னி ஜெனரல் மஹ்பூபே ஆலம் வாதிட்டார்.

சட்டவிரோத சுரங்கத்தொழில்: எடியூரப்பாவின் வீட்டில் சி.பி.ஐ ரெய்ட்!
பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத் தொழில் ஊழல் தொடர்பாக முன்னாள் கர்நாடகா மாநில முதல்வரும், பா.ஜ.க தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பெங்களூர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியுள்ளது.

பெங்களூரில் எடியூரப்பாவின் டாலர் காலனியில் அமைந்துள்ள வீட்டில் 6 உறுப்பினர்களை கொண்ட சி.பி.ஐ குழு ரெய்ட் நடத்தியது.

எடியூரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்து நேற்று முன்தினம் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச் செய்தது.

எடியூரப்பாவின் மகன்களான பி.ஒய்.ராகவேந்திரா எம்.பி, பி.ஒய்.விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார், ஜிண்டால் க்ரூப்பின் கீழ் இயங்கும் சவுத் வெஸ்ட் சுரங்க நிறுவனம் ஆகியோர் 2 முதல் ஐந்து வரையிலான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு பெங்களூர் சி.பி.ஐ டி.ஐ.ஜி ஹிதேந்திரா டெல்லியில் சி.பி.ஐயின் தலைமையகத்தி வழக்கை பதிவுச் செய்துள்ளார்.

இந்தியாவில் நடந்த சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு ஏப்ரல் 20-ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையின் சிபாரிசின் அடிப்படையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்து விசாரணை துவங்கியதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் எடியூரப்பாவும், அவரது மகன்களும் விசாரணை உள்ளிட்ட காரணங்களால் கைது செய்யப்படலாம் என சூழல் உருவானது. இதனிடையே கைது செய்யப்படுவதை தடுக்க எடியூரப்பா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

எடியூரப்பாவின் உறவினர்களுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு 2006-ஆம் ஆண்டிலும், சவுத் வெஸ்ட் மைனிங் லிமிட்டட் நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய்க்கு 2010-ஆம் ஆண்டிலும் சுரங்கத் தொழிலுக்கு நில அனுமதி வழங்கியதில் கடுமையான விதி முறை மீறல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக உயர்மட்டக்குழு அறிக்கை கூறுகிறது.

மேலும் எடியூரப்பாவின் நெருங்கிய உறவினர் நடத்தும் ‘ப்ரேரணா எஜுக்கேஷன் சொசைட்டிக்கு’ 20 கோடி ரூபாய் சவுத் வெஸ்ட் மைனிங் லிமிட்டட் நன்கொடை வழங்கியது குறித்தும், கர்நாடகா லோக் ஆயுக்தாவுக்கு மூத்த போலீஸ் அதிகாரிகளை டெபுட்டேசனில் நியமித்தது குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தும்.

3 மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்கத்தியர்களின் ஈரானுடனான அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் – ஈரான்!
டெஹ்ரான்:ஈரானுடனான அணுகுமுறை மற்றும் நடத்தையை மேம்படுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக வேண்டும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

வருகிற மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகச்சிறந்த பலன் கிடைக்க வேண்டுமானால் அணுகுமுறையை மேற்கத்திய நாடுகள் மேம்படுத்த வேண்டும் என நஜாத் தெரிவித்தார்.

கூமான் நகரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு நஜாத் உரை நிகழ்த்தினார். அமைதியான காரணங்களுக்கு அணுசக்தியை உபயோகிப்பதற்கான உரிமையை ஈரான் மக்கள் கடுகு அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அத்தகையதொரு உரிமை ஈரானுக்கு கிடையாது என்று வாதிடும் செருக்கை மேற்கத்திய நாடுகள் கைவிட வேண்டும் என நஜாத் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரமின் மெஹ்மான் பெரஸ்த் கூறுகையில், நிர்பந்தமோ, முன் நிபந்தனைகளோ இல்லாத பேச்சுவார்த்தையை மட்டுமே நாங்கள் வரவேற்போம்.

இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுக்கும் சூழல் உருவானது. அதே சூழல் பாக்தாதிலும் உருவானால் பேச்சுவார்த்தை பலன் வாய்ந்ததாக அமையும் என்று பெரஸ்த் கூறினார்.

நக்பா நினைவில் ஃபலஸ்தீன் மக்கள்!
காஸ்ஸா/ராமல்லா:பிறந்த மண்ணில் இருந்து உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட துயர நிகழ்வின் 64-வது நினைவு தினத்தை(நக்பா) ஃபலஸ்தீன் மக்கள் அனுஷ்டித்தனர்.

1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற யூத சியோனிச அரசு முஸ்லிம்களின் புண்ணியஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் மண்ணில் ஏகாதிபத்திய சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நிறுவப்பட்டதன் மரணிக்காத நினைவலைகளை ஃபலஸ்தீன் மக்கள் தலைமுறைகளுக்கு பகிர்ந்து வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு இதே தினத்தில் சிரியா மற்றும் லெபனானில் இருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கூட்டுப் படுகொலைச் செய்தது. சிரியாவைச் சார்ந்த நான்கு பேரும், லெபனானைச் சார்ந்த 10 பேரும் பலியான வேளையில் சுய பாதுகாப்பு என தனது அட்டூழியத்தை இஸ்ரேல் நியாயப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் மே 15-ஆம் தேதி நக்பா தினத்தையொட்டி ஃபலஸ்தீன் மக்கள் காஸ்ஸாவிலும், ராமல்லாவிலும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், நினைவு நிகழ்ச்சிகளும் நடத்துவது உண்டு.

‘பாதுகாப்பின்’ பெயரால் இஸ்ரேல் கூடுதல் ராணுவத்தினரை நிறுத்துவதும் வழக்கமாகும்.

கிழக்கு ஜெருசலமில் இஸ்ஸாவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், இஸ்ரேல் போலீசாரும் மோதலில் ஈடுபட்டனர். பொறுமையிழந்த மக்கள் போலீசார் மீது கல்வீசினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

காஸ்ஸாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடந்ததாக போலீஸ் செய்தி தொடர்பாளர் மிக்கி ரோஸன்ஃபெல்ட் கூறுகிறார். மேற்குகரை நகரங்களான ராமல்லா, ஒஃபர், கலாந்தியா மற்றும் கிழக்கு ஜெருசலம், காஸ்ஸா ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன.

காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா மக்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார்.

அரப்-இஸ்ரேல் போரும், இஸ்ரேலின் உருவாக்கமும் சின்னாப் பின்னப்படுத்திய ஃபலஸ்தீன் மக்களில் 47 லட்சம் பேருக்கு வீடு இல்லை என்பது தற்போதைய புள்ளிவிபரமாகும். 1,60,000 ஃபலஸ்தீன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். எல்லைப்புற நாடுகளிலும் இதே எண்ணிக்கையிலான மக்கள் வசித்து வருகின்றனர். மீதமுள்ளவர் காஸ்ஸாவிலும், ராமல்லாவிலும் வசிக்கின்றனர். இஸ்ரேலில் அரபு வம்சா வழியைச் சார்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹயர் அரப் மானிட்டரிங் கமிட்டி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

ஃபலஸ்தீன் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களுக்கு திரும்பச் செல்லவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஸஆதத் ஹஸன் மன்டோ!
லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கும், புலன்பெயர்வுக்கும் காரணமான இந்திய பிரிவினை ஏன் மகத்தான இலக்கியங்களை உருவாக்கும் கருவாக மாறவில்லை? என்ற கேள்வி பல வேளைகளின் நம் மனங்களில் எழுவதுண்டு.

வரலாற்றாய்வாளர்களும் நுட்பமாக பிரிவினையின் சமூக-கலாச்சார எதிர்விளைவுகளை குறித்து ஆராயவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு என்பதால் அது குறித்து ஆராய்ச்சிகள் நடக்காமல் இருந்திருக்கலாம். எவ்வகையான பிரிவினையும், புலன்பெயர்வும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறது.

நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் உருது இலக்கியவாதி ஸஆதத் ஹஸன் மன்டோவின் நாவல்களும், சிறுகதைகளும் பிரிவினை ஏற்படுத்திய காயங்களையும், அதில் கண்ட மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்களையும் சித்தரிப்பதால் உருது இலக்கியத்தில் மாறுபட்டு நிற்கிறது.

அதிகார வெறிப்பிடித்த அரசியல்வாதிகள் வரலாற்றை புரிந்துகொள்ளாமல் பிரதமராகவும், அதிபராகவும் மாறுவதற்கு திடுதிப்பென எடுக்கும் தீர்மானங்கள் சில நிமிடங்களில் நண்பர்களையும் பகைவர்களாக எவ்வாறு மாற்றுகிறது? என்பது குறித்து அமிர்தரஸில் பிறந்த மன்டோ ஆராய்கிறார். அப்பொழுது மத போதனைகளும், மனித சமூகம் காலங்காலமாக வளர்த்து வந்த அன்பு, பாசம், கருணை போன்ற மிருதுவான உணர்வுகளும் காணாமல் போகின்றன.

பிரிவினைக்குப் பிறகு லாகூருக்கு தனது வசிப்பிடத்தை மாற்றிய மன்டோ, ஒழுக்க கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையும், மதுபானமும் பிற்கால கதைகளில் கண்ட பாலியல் கருத்துக்கள் காரணமாக பொது சமூகத்தில் காணாமல் போனார். ஆனால், பிரிவினையைக் குறித்து அசாதாரணமான நேர்த்தி மிகு கதைகளை எழுதிய ஒரே காரணத்தால் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

புதுக்கோட்டை: தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளராக ஜாகீர் உசேன்  போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். ஜாகீர் உசேன்  புதுக்கோட்டை தே.மு.தி.க. மாவட்ட செயலாளராக உள்ளார்.

அணுவிஞ்ஞானி கொலை: மொஸாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றம்!
டெஹ்ரான்:மூத்த ஈரான் அணு விஞ்ஞானியைக் கொலைச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மொஸாத் ஏஜண்ட் மாஜித் ஜமலி ஃபாஷிக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனை தலைநகர் டெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈரான் அணு விஞ்ஞானி மஸூத் அலி முஹம்மதியை கொலைச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபாஷி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மரணத்தண்டனை விதித்தது.

ஃபாஷிக்கு, இஸ்ரேலில் வைத்து மொஸாதின் பயிற்சியும், ஈரான் அணு விஞ்ஞானியைக் கொலைச் செய்ய 1,20,000 டாலரும் வழங்கப்பட்டதாக விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அஸர்பைஜானில் ஹைதர் அலியேவ் விமானநிலையத்தில் இருந்து டெல் அவீவிற்கு செல்ல போலி ஆவணத்தை தயாரித்ததை ஃபாஷி ஒப்புக்கொண்டார்.

போதைப்பொருளை கைவசம் வைத்திருந்தது தொடர்பாகவும் இவர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஈரான் அணு விஞ்ஞானி அலி முஹம்மதி, டெஹ்ரானில் தனது வீட்டிற்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கொலைச் செய்யப்பட்டார்.