You are here
Home > Uncategorized > ஈரான் அதிபர் தேர்தல்:முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஹஸன் ரவ்ஹானி முன்னிலை!

ஈரான் அதிபர் தேர்தல்:முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஹஸன் ரவ்ஹானி முன்னிலை!

தெஹ்ரான்: கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியிருக்கிறது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஹஸன் ரவ்ஹானி முன்னிலை வகிக்கிறார். 18 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் 45.8 சதவீத வாக்குகள் பெற்று ஹஸன் ரவ்ஹானி முன்னிலை வகிக்கிறார் என்று உள்துறை அமைச்சகத்தின் தேர்தல் துறையின் தலைவர் ஸலாத் முர்தஸாவி தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட தெஹ்ரான் மேயர் முஹம்மத் பாகெர் கலீபஃப் 17.6 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் உள்ளார். மற்றொரு போட்டியாளரான ஸஈத் ஜலீலி 14.1 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் நிலையில் உள்ளார்.

ஈரானில் மொத்தம் 5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

Leave a Reply

Top