You are here
Home > Uncategorized > மங்களூர்:பேராசிரியர் முகத்தில் சாணம் பூசிய பஜ்ரங்தள் பயங்கரவாதி!

மங்களூர்:பேராசிரியர் முகத்தில் சாணம் பூசிய பஜ்ரங்தள் பயங்கரவாதி!

பெங்களூர்:சுதந்திரம், நீதி, மனித உரிமைகள், வளர்ச்சி இவையெல்லாம் சங்க்பரிவார ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு வேப்பங்காயை விட கசப்பானவையாகும். அவர்களுக்கு பிடித்ததெல்லாம் மூடத்தனம், கலவரம், இன அழித்தொழிப்பு போன்ற மனித குலத்திற்கு எதிரான பாதக செயல்களாகும். இதனை பல முறை அவர்கள் நிரூபித்து வருகின்றார்கள்.

அதன் ஒருபகுதியாக மங்களூரில் மனித உரிமை ஆர்வலரும், பேராசிரியருமான சோமய்யாஜியின் முகத்தில் சாணத்தை பூசி தங்களது கயமைத் தனத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்.

கர்நாடகா மாநிலம் மங்களூர் பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் சோமய்யாஜி மனித உரிமை ஆர்வலர் ஆவார். நக்ஸல் வேட்டை என்ற பெயரால் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற முஸ்லிம் அமைப்புகளின் மேடைகளில் மனித உரிமைகள் குறித்து உரையாற்றி வருபவர் சோமய்யாஜி.

இவரது மனிதநேய நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிராகவே சிந்திக்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பஜ்ரங்தளத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மஹாவீர் சர்க்கிளில் ஒரு ஹோட்டலில் மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பஜ்ரங்தளைச் சார்ந்த தீவிரவாதி ஒருவன் சோமாய்யாஜியின் முகத்தில் சாணத்தை பூசினான். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கான பொறுப்பை பஜ்ரங்தள் ஏற்றுக்கொண்டது.

கடந்த சில நாட்களாக சோமய்யாஜியை தங்களின் உறுப்பினர்கள் பின் தொடர்வதாகவும், பஜ்ரங் தளைச் சார்ந்த பரத் சோமய்யாஜியின் முகத்தில் சாணத்தை புரட்டியதாகவும் பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் சரண் பம்ப்வெல் கூறினார்.

Leave a Reply

Top