You are here
Home > Uncategorized > சீனாவுக்கு அச்சுறுத்தல் ஊழல்: வென் ஜியபாவோ!

சீனாவுக்கு அச்சுறுத்தல் ஊழல்: வென் ஜியபாவோ!

பீஜிங்:சீனாவில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது ஊழல் என்று பிரதமர் வென் ஜியபாவோ கூறியுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அவர் குஷி பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் போ ஸிலாய் மீதான நடவடிக்கையை ஆதரிக்கும் விதமாக ஜியாபாவோவின் கட்டுரை அமைந்துள்ளது.

அரசு செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மையை உறுதிச்செய்தல், அரசு துறையில் அதிகாரம் குவிவதை தடுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள இக்கட்டுரையில் போ ஸிலாய் குறித்து தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

Leave a Reply

Top