You are here
Home > Uncategorized > உலகம் (Page 3)

மோடிக்கு விசா மறுப்பு:கொள்கையில் மாற்றம் இல்லை-அமெரிக்கா மீண்டும் உறுதி!

வாஷிங்டன்:"குஜராத் முதல்வர் நநேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவருடனான சந்திப்பு, இந்தியத் தலைவர்களுடன் நட்புறவை அதிகரித்து வருவதன் ஒரு பகுதி தான்'' என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமைதாங்கிய நரேந்திரமோடிக்கு அமெரிக்கா, விசா அளிக்க மறுத்துவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம், காந்திநகரில், வியாழக்கிழமை, நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பு, இந்திய

ஈரானில் இஸ்லாமிய புரட்சி நினைவு தினம்:டெஹ்ரானில் பிரம்மாண்ட பேரணி!

டெஹ்ரான்:இஸ்லாமிய புரட்சியின் 35-வது நினைவு தினத்தையொட்டி ஈரான் முழுவதும் பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடந்தது. ஆஸாதி சதுக்கத்தில் பேரணியில் கலந்துகொண்டு அதிபர் ஹஸன் ரூஹானி உரையாற்றினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரானின் அதிபராக பதவியேற்ற பிறகு ரூஹானி ஆற்றும் முதல் பொது உரை இதுவாகும். அமெரிக்க எதிர்ப்பு பாடலை பாடி ரூஹானி தனது உரையை துவக்கினார்.மேலும் அவர் கூறுகையில்,’வெளிநாட்டு சக்திகள் ஈரானில் தங்களது தலையீட்டை நிறுத்தியதற்கு காரணம் நமது கொள்கையாகும்.அமெரிக்கர்கள் ஈரானை தங்களுக்குரியது என்று கருதினார்கள்.ஈரானின்

அல்ஜீரியா:விமான விபத்தில் 99 பேர் பலி!

அல்ஜீர்ஸ்:வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 99 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வானொலி அறிவித்துள்ளது. சி-130 ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். தலைநகர் அல்ஜீர்ஸூக்கு 500 கி.மீ. தொலைவிலுள்ள ஓம் எல் பவ்காய் என்னுமிடத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

சர்ச்சைக்குரிய புத்தகத்தை திரும்பப் பெற்றது பென்குயின்!

லண்டன்:"இந்து சமயத்தின் வரலாறு" எனும் தலைப்பில் முன்னணி அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் எழுதி இந்தியாவில் வெளியான புத்தகங்களை திரும்பப் பெறுவது என அதன் பதிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வெண்டி டானிகர் எனும் அந்தப் பெண் எழுத்தாளர் இந்து மத விஷயங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்று கருதப்படுகிறது. சிக்ஷா பச்சாவ் அந்தோலன் எனும் அமைப்பினர், இந்தப் புத்தகம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றும், அதில் பல தவறுகள் உள்ளன

முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கு: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. இந்த விசாரணையின்போது முஷாரப் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தன்னை தாக்க முயற்சித்ததாக அரசு தரப்பு முதன்மை வழக்கறிஞர் அக்ரம் ஷேக் கூறியுள்ளார். அது தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவாகியுள்ள வீடியோவை பார்த்த பிறகு முடிவு செய்வதாக நீதிபதி பைசல் அராப் கூறினார். முஷாரபின் உடல் நலம்

காபூலில் போலியோ!

காபூல் :ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், போலியோ தலைதூக்கியிருப்பதை அடுத்து, அங்கு போலியோ தடுப்பு மருந்து தரும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்றுக்கு இளம்பிள்ளைவாத நோய் ஏற்பட்டதை அடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தாலிபான்கள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் காபூலில் நடந்துள்ள முதல் போலியோ சம்பவம் இதுதான். சமீப ஆண்டுகளில் ஆப்கன் மக்களுக்கு மேம்பட்ட போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டுவந்த நிலையில், போலியோ வியாதி ஏற்படுவது அங்கு குறைந்திருந்தது. போலியோ வியாதி

அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது விபத்தினால் ஏற்படும் மரணத் தின்போது அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்படும்போது நிதி அளித்தல் ஆகிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களுக்கு காப்பீடு அளிக்கும் மகாத்மா காந்தி பிரவாஸி சுரக்சா என்ற திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் சேர தொழிலாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் மத்திய

அமெரிக்காவை எச்சரிக்கு​ம் வடகொரியா!

கொரிய வளைகுடாவில் அமெரிக்க - தென் கொரியத் துருப்புக்களின் இணைந்த பலம் வாய்ந்த வருடாந்தர இராணுவ போர்ப்பயிற்சி இந்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்நடவடிக்கையானது வட கொரிய அமெரிக்க உறவில் நிலவி வரும் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வட கொரிய சிறையில் கடும் துன்பத்தை அனுபவித்து வரும் அமெரிக்கப் பிரஜையான கெனித் என்பவரை விடுவிக்கும் முகமாக வட கொரியா வரவிருந்த அமெரிக்க ராஜதந்திரியின் பயனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்ற

இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை!

இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியோ கௌரோ இந்தியா வந்துள்ளார். கொல்லம் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மஸிமிலியானோ லாட்டோர் மற்றும் சால்வடோர் கிரோன் மீது கடற்கொள்ளையர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு படை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச

நேபாள பிரதமராக சுஷில் கொய்ராலா தேர்வு

நேபாளத்தின் புதிய பிரதமராக, நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலா சுஷில் கொய்ராலா (75) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாளத்தின் அரசியல் சாசன நிர்ணய சபைக்கு கடந்த நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 601 பேர் கொண்ட இந்த சபைக்கு 240 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமும் 335 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் விகிதாச்சாரத்தின்படியும் மீதமுள்ள 26 பேர் நேரடி நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ்

Top