You are here
Home > Uncategorized > உலகம் (Page 2)

அக்டோபர் 31ல் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி

ஐக்கிய அரபு அமீரகம்- ஷார்ஜாவில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும். அதே போல இந்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் பங்கெடுக்கும் இந்த புத்தக கண்காட்சியில் இம்முறை தமிழ் பதிப்பகங்களும் இடம் பெறுகின்றன. கடந்த முறை புத்தக கண்காட்சிக்கு தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  மற்றும் 

தோல்வியில் முடிந்த சிரியா அமைதிப் பேச்சு வார்த்தை!

ஜெனீவா:சிரியாவுடன் ஐ.நா.சபை நடத்திய 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சிரியாவுக்கான ஐ.நா. தூதர் லக்தர் பிராஹிமி சனிக்கிழமை ஜெனீவாவில் தெரிவித்தார். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 1,36,000 பேர் வரைகொல்லப்பட்டுள்ளனர். இதனால் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 2வதுகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அடுத்தகட்டபேச்சுவார்த்தைக்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் லக்தர் பிராஹிமி கூறினார். அவர் மேலும்

ஆப்கனில் 65 போராளிகள் விடுவிப்பு: அமெரிக்கா அதிருப்தி!

பக்ராம்: ஆப்கானிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 65 தலிபான் கைதிகளை அந்நாட்டு அரசு வியாழக்கிழமை விடுவித்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் 32 ஆப்கன் வீரர்களையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 23 வீரர்களையும் சுட்டுக் கொன்றவர்கள். அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. விடுவிக்கப்பட்டவர்களில் முஹம்மது வாலி என்பவர் வெடிகுண்டுகளை

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 போலீஸார் பலி!

கராச்சி: கராச்சி, ஷா லடிஃப் டவுன் பகுதியில் ரசாக்காபாத் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று பூட்டோ குடும்பத்துக்கு சொந்தமான பிலாவல் இல்லத்துக்கு பாதுகாப்பு பணிக்கு பஸ்ஸில் புறப்பட்டனர். இந்நிலையில் பயிற்சி மைய வளாகத்தில் இருந்து இவர்களின் பஸ் வெளியேறும்போது, வெடி பொருள் நிரப்பிய வாகனத்தில் வந்த ஒருவர் பஸ் மீது மோதி வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார். குண்டுவெடிப்பில் 10 போலீஸார் இறந்தனர். மேலும் 30

வெனிசூலாவில் மக்கள் புரட்சி: 2 பேர் பலி; 23 பேர் படுகாயம்!

காரகாஸி: வெனிசூலாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நிகழ்ந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசூலாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிபர் நிகோலஸ் மதுரோவின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து காரகாஸில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் அருகே அரசு எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களுக்கு எதிராக அரசின் ஆதரவாளர்களும் பேரணி நடத்தி கோஷமிட்டனர். அப்போது அடையாளம் தெரியாத சிலர், கூட்டத்தினரை நோக்கி

ரோஹிங்கியா முஸ்லிம்களை கணக்கெடுக்க வங்கதேச அரசு உத்தரவு!

டாக்கா: அண்டை நாடான மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்குள் எல்லை தாண்டி வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை அடையாளம் கண்டு கணக்கெடுக்கும் பணியை நடத்த வங்கதேச அரசு தீர்மானித்துள்ளது. மியான்மரின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இரண்டு அகதி முகாம்களில் தற்போது சுமார் முப்பதாயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பதிவு செய்யப்பட்டு தங்கியுள்ளார்கள் என்றாலும், இந்த முகாம்களுக்கு வெளியே பதிவு செய்யப்படாமல் மூன்று லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  கடந்த இருபது வருடங்களில் வங்கதேசத்துக்குள் வந்து குடியேறி வாழ்கின்றனர்

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் கண்டனம்!

டெல் அவிவ்: ஃபலஸ்தீன் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். யூதர்கள் ஆக்கிரமித்த பகுதியில் உள்நாட்டு மக்களான ஃபலஸ்தீனர்களுக்கு தண்ணீரை தடை செய்த இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை ஷூல்ஸ் சுட்டிக்காட்டினார். காஸாவுக்கு எதிராக தடை ஏற்படுத்திய தடையை ஷூல்ஸ் கண்டித்தார். ஃபலஸ்தீன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 17 லிட்டர் நீரை மட்டுமே இஸ்ரேல் வழங்குகிறது. ஆனால், இஸ்ரேல் குடிமக்களுக்கு 70 கியூபிக் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஃபலஸ்தீன் இளைஞர்

ட்ரோன் தாக்குதல்களுக்கு தொலைபேசி பதிவுகளை உபயோகிக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்:ட்ரோன் தாக்குதல் நடத்துவதற்கு உளவுத்துறை தகவல்களை விட தொலைபேசி பதிவுகளை அமெரிக்கா அதிகமாக உபயோகித்து வருகிறது.பிரபல பத்திரிகையாளர் க்ளென் க்ரீன்வார்டின் தலைமையில் அண்மையில் துவக்கப்பட்ட பத்திரிகையான இண்டர் செப்ட் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் இதர நாடுகளின் ரகசியங்களை திருட்டுத்தனமாக அமெரிக்க உளவு ஏஜன்சியான என்.எஸ்.ஏ சேகரித்து வரும் தகவலை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடனுடன் பணியாற்றிய லாரா பெட்ராஸ் இண்டர் செப்டில் பணியாற்றுகிறார்.பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் என்.எஸ்.ஏ அதிகாரியை மேற்கோள்காட்டி இண்டர் செப்ட் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. தாலிபான் தலைவர்கள்

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் குடிமக்களாக பதிவுச் செய்ய முடியாது – அரசு!

யங்கூன்:மார்ச் 30-ஆம் தேதி துவங்கும் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை மியான்மர் நாட்டு குடிமக்களாக பதிவுச் செய்யமாட்டோம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மியான்மர் நாட்டின் குடியேற்ற துறை அமைச்சர் யு கீன் யி இத்தகவலை தெரிவித்தார்.ஆனால், ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவுச் செய்யப்படுமாம். வங்காளதேச எல்லையையொட்டிய ராக்கேன் மாநிலத்தில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள்.இவர்கள் வெளிநாட்டினர் என்று கூறி மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்துவருகிறது.இவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் அமைதியும், ஸ்திரத்தன்மையும் கெட்டுவிடும் என்று

மதக் கலவரத்தால் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிளவுபடும்:பான் கீ மூன் எச்சரிக்கை!

நியூயார்க்:மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிகழ்ந்து வரும் மதக் கலவரத்தால் அந்நாடு இரண்டாக பிளவுபட்டுவிடும்; எனவே, அங்கு மதக் கலவரம்தீவிரமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை உலக சமுதாயம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தினார். இதுகுறித்து பான் கீ-மூன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய ஆப்பிரிக்காவில் நிகழ்ந்து வரும் மதக் கலவரம் அந்நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்துவிடும். மேலும், மத்திய ஆப்பிரிக்கா இரண்டாக பிளவுபடும் அபாயமும் உள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்து வருவதற்கேற்ப, சர்வதேச நாடுகள் இதுவரை எவ்வித

Top