You are here
Home > Uncategorized > இந்தியா (Page 2)

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் முஸ்லிம் பெண் வேட்பாளர்!

எதிர்வரும் மாதங்களில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை காங்கிரஸ் முன்னதாக வெளியிட்டது. இதனையடுத்து பாஜக சார்ர்பில் பாத்திமா ரஸூல் சித்திக் என்ற முஸ்லிம் பெண் வேட்பாளரை வடக்கு போபால் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க தனது வேட்பாளராக களமிறக்கிறது. முன்னதாக அவரது தந்தை ரசுல் சித்திக் ஒரு மூத்த காங்கிரஸ்  கட்சி தலைவர். 1980 மற்றும் 1990களில் இரண்டு முறை மாநில அமைச்சகத்தில்

புதிதாக நியமிக்கபட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களே!

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மகளிர் ஆணையத்தின் ஆணையத்தலைவர் ரேகா ஷர்மா வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த சில வருடங்களாக காலியாக இருந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவிகள் மூன்று நபர்களை கொண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து தீர்வளிக்கும் வழிவகையில் உருவாக்கப்பட்டது தான் தேசிய மகளிர்

ட்விட்டர் நாட்டின் ஜனநாயகத்திற்கே கேடு! – மாணவி ராஷித் குற்றச்சாட்டு!

ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்திலிருந்து எல்லோரையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் தான் ஆய்வுபடிப்பு மாணவி ஷீஹ்லா ராஷித். இப்போது காஷ்மீர் அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார். சமீபத்தில் ட்விட்டரிலிருந்து வெளியேறியவர், “மதம், அரசியல் சிந்தனையின் அடிப்படையில் அத்துமீறி பின்னூட்டம் இடுவது ட்விட்டரில் அதிகரிக்கிறது” என்கிறார். மேலும் இதுமாதிரியான நடவடிக்கைகல் நாட்டின் ஜனநாயகத்துக்கே கெடுதலானது என்று ட்விட்டரைச் சாடியிருக்கிறார் ஷீஹ்லா ராஷீத். “ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது வெறுப்பைக் கக்கும் ட்வீட்டுகள், பின்னூட்டங்களைப் பார்க்க நேர்கையில் மனது சோர்ந்துவிடுகிறது. இது

நரேந்திர மோடி குஜராத் கலவரம் வழக்கில் இருந்து விடுவிப்புக்கு எதிராக ஜக்கியா ஜஃப்ரி மேல் முறையீடு

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட பல முக்கிய குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. கோத்ரா வன்முறைக்கு காரணமானவர்கள் பட்டியலில் இருந்து நரேந்திர மோடியின் பெயர் நீக்கம் செய்ப்பட்டது. 2002ம் ஆண்டு குல்பர்க் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது

மதவாத மோதல்களில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்கவில்லை ! – கேரள முதல்வர் பேச்சு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கோயில் நிர்வாக சட்டப்படி கோயில் உள்ளே செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை

பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரும் ஹிந்து மகா சபாவின் மனு நிராகரிப்பு

புது டில்லி: இன்று (திங்கள் கிழமை) உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்ட பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே கவுல் ஆகியோர் முன்பு அறிவித்தபடியே ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற பென்ச் முன்பு விசாரணைக்கு வரும் என்று தீர்ப்பளித்தனர். " நாங்கள் முன்னரே இது குறித்து உத்தரவிட்டுள்ளோம். இந்த வழக்கு ஜனவரியில் தான் விசாரணைக்கு

கடந்த ஒரு வருடத்தில் 25கிராமம் மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்!

கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு 25நகரம் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது என்றும் வெஸ்ட் பெங்கால் என்ற பெயரை வெஸ்ட் பங்களா என மாற்றும் திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு இதுவரை ஒப்புதலும் வழங்கவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்றுவதற்கு

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் கலந்து கொள்ள தடை விதிப்போம் – காங்கிரஸ் !

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் இருந்த சட்டத்தை சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் இருந்த மத்திய பிரதேச மாநில பாஜக அரசு 12 வருடங்களுக்கு முன்னர் நீக்கியது. இந்நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் இந்த தடை நீக்கத்தை அகற்றுவோம் என காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவிக்கையில்

திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்த கூடாது!- பாஜக அராஜகம்

இன்று (சனிக்கிழமை) கர்நாடக மாநிலத்தின் உள்ள மடிகெரியில் 18ம் நுற்றாண்டின் மைசூர் ராஜஜியத்தின்  அரசர் திப்பு சுல்தானின் பிறந்தநாள் நிகழ்ச்சி அரசு ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிராக மதவாத சக்திகள் சார்பாக ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த தொடங்கியது. இந்த அமைப்புகளினால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தது.அதிக மக்கள் கூடுவதற்கு தடை செய்யபட்டிருந்தது. இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை தொடர்ந்து JDP மற்றும்

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12-ம் தேதி இரவுக்குள் திரும்பி வரவும்!

நுங்கம்பாக்கத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “நேற்று அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுவடைந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14

Top