You are here
Home > Uncategorized > இந்தியா

குஜராத் கலவரத்தின் போது, அரசமைப்புச்சட்டம் 355 பிரிவு ஏன் பயன்படுத்தப்படவில்லை?

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றபோது,அங்கு அப்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இருந்தபோதிலும்கூட ஏன் அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு அமல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு என்பது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரம், பிரச்சினை, குழப்பம் ஆகியவற்றால் மாநிலஅரசு கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது மத்திய அரசு தலையிட்டு அதைக் கட்டுப்படுத்தி மாநில அரசைப்

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து தவறி விழுந்த பெண்!

டெல்லியை நோக்கிப் பயணிக்கத் தயாராக நின்றிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் தவறி விழுந்ததால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியாவின் போயிங் ரக 777 விமானம் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு டெல்லியை நோக்கிச் செல்லத் தயாராக இருந்தது. அப்போது விமானத்துக்குள் இருந்த 52 வயதான ஹர்ஷா லோபோ என்னும் பணிப்பெண் எதிர்பாராமல் தடுமாறி விழுந்தார். இந்தச் சம்பவம் காலை 6.15 மணிக்கு நடந்துள்ளது. இதனையடுத்து 6.18

2014 தேர்தலில் வெற்றிபெற​ பொய்யான​ வாக்குறுதிகள் அளித்தோம்: மத்திய​ அமைச்சர் கட்காரி

தேர்தலில் வெற்றிபெற​ பொய்யான​ வாக்குறுதிகளை பிஜேபி அளித்ததாகவும், தேர்தலில் வெற்றிபெற்ற​ பிறகு தற்போது அவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற​ எந்த​ஒரு திட்டமும் இல்லை என​ மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மராட்டிய​ நேரடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: "நாங்கள் வெற்றிபெறுவோம் என​ நினைக்கவில்லை. ஆகவே பெரிய​ பெரிய​ வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டோம். தற்போது ஆட்சியிலிருக்கும்போது மக்கள் அவற்றை பற்றி நினைவுபடுத்துகிறார்கள். ஆனால் தற்போது நாங்கள்

நக்கீரனுக்காக வாதாடிய இந்து!

ஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் ஆஜராகி வாதாடினேன் என்று இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் பேட்டி அளித்தார். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் இந்து குழுமத் தலைவர் என்.ராம் நேரில் வந்தார். வழக்கு நடக்கும் போது

27 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு மனைவியை சந்தித்த கைதி!

கோவை சூலூரில் ரூ.500 பணம் பறித்ததாக 1990-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற சுப்பிர மணியன், இதே வழக்கில் முன் விடுதலை பெற்ற தனது மனைவி பக்கா விஜயாவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சந்தித்தார். கணவரின் கைகளை பற்றிக்கொண்டு பக்கா விஜயா அழுத காட்சி அங்கிருந்த வர்களின் கண்களை கலங்க வைத்தது. ஒரு கொலையால் ஆயுள் சிறை தண்டனை பெற்ற காதல் தம்பதியினரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவத்தில்

உளவு நிறுவனங்கள் குறித்து விமர்சனம்:ஆம்னஸ்டி இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய மத்திய உள்துறை அமைச்சகம்!

புதுடெல்லி:சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் இந்திய பிரிவுக்கான நிதியுதவியை மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்து வைத்துள்ளது.3.10 கோடி ரூபாய் நிதியுதவியை அமைச்சகம் தடுத்துநிறுத்தியுள்ளது. இந்திய உளவுத்துறை ஏஜன்சிகளை மனித உரிமை மீறல்களின் பெயரால் பல வேளைகளில் ஆம்னஸ்டி விமர்சித்து வந்தது.இந்நிலையில் உளவுத்துறை ஏஜன்சிகளின் அறிக்கையின் பெயரால் அவ்வமைப்புக்கான நிதியுதவையை மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்து வைத்துள்ளது. அதேவேளையில் ஒரு லட்சம் பவுண்ட் நிதியுதவி வாக்குறுதி அளித்த பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் குசுமா ட்ரஸ்ட்

49 நாட்களில் முடிவுக்கு வந்த முதல்வர் பதவி!

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனதை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற டெல்லி துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்ய முற்பட்டார். இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த

நரசிம்மராவுக்கு பா.ஜ.க பாராட்டு!

புதுடெல்லி:முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பதவி விகித்த காலத்தில்தான் நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பாராட்டியுள்ளார். "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விரைந்து விசாரிக்கவில்லை என்று சோனியா காந்தி கருதிய காரணத்தால், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து பாஜக இவ்வாறு கூறியுள்ளது. "மோடிநாமிக்ஸ்' என்ற புத்தகத்தை

கொளத்தூர் மணி விடுதலை!

சென்னை: திராவிடர் விடுதலை இயக்கத் தலைவர் கௌத்தூர் மணி சேலம் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  கொளத்தூர் மணி காவல்துறையால் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றபோது இந்தியா பங்கேற்கக்

குஜராத்: காதலர்கள் மீது ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பினர் அழுகிய தக்காளி வீச்சு!

அஹ்மதாபாத்: குஜராத் மாநிலம் அஹ்மதபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் குழுமியிருந்த காதலர்கள் மீது வெள்ளிக்கிழமை பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் தொண்டர்கள் அழுகிய தக்காளிகளை வீசினர். இச்செயலால் அதிர்ச்சியடைந்த காதலர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். காதலர்கள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சபர்மதி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான காதல் ஜோடிகள் கூடி, காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

Top