You are here
Home > Uncategorized > விளையாட்டு (Page 3)

இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி!

ஷார்ஜா: பாகிஸ்தான் வீரர் அஸார் அலீயின் சதத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1  1 என்ற கணக்கில் தொடரை டிரா செய்தது பாகிஸ்தான் அணி. ஷார்ஜாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசிப் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணி தனது முதல்

முழுமையான ஃபலஸ்தீன் மேப்புடன் ஆடும் சிலி கால்பந்து க்ளப்!

கெய்ரோ : ஜெர்ஸியில் முதல் நம்பருக்கு பதிலாக ஃபலஸ்தீனின் முழுமையான வரைபடத்தை வரைந்து சிலியின் டிப்போர்டிவோ ஃபலஸ்தீனோ க்ளப் மைதானத்தில் ஆடுகிறது. 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாவதற்கு முந்தைய ஃபலஸ்தீனின் வரைபடத்தை இந்த கிளப் ஜெர்ஸியில் வரைந்துள்ளது. அதிகமான ஃபலஸ்தீன் அகதிகள் வாழும் நாடுகளில் ஒன்றான சிலியின் தலைநகரமான ஸாண்டியாகோவில் 1920-ஆம்ஆண்டு இந்த க்ளப் துவக்கப்பட்டது . ஃபலஸ்தீன் கொடியின் நிறம்தான் சிலியின் அதிக பிரபலமான அணிகளில் ஒன்றான இக்கிளப்பின் ஜெர்ஸியில்

டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார் காலிஸ்!

“இந்த முடிவை நான் இலகுவாக எடுக்கவில்லை. அதே நேரத்தில், தென் ஆப்பிரிக்க அணியை தொடர்ந்து பசியில் தள்ள விரும்பவில்லை; 2015 உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியும், திறமையையும் தயார்படுத்த வேண்டி இருக்கின்றது.”  - ஜேக்ஸ் காலிஸ் தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற வீரரான காலிஸ் சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ளவர். கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது அவரது பெரிய கனவாகும். அதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தென் ஆப்பிரிக்காவில்

EIFFன் விளையாட்டு விழா! ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேரா. மன்சூர் சிறப்பு விருந்தினர்!

அமீரகத்தின் 42-வது தேசிய தினத்தை முன்னிட்டு EIFF நடத்திய விளையாட்டு விழா! அஜ்மான்: அமீரகத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) அமீரகத்தின் 42-வது தேசிய தினத்தை முன்னிட்டு விளையாட்டு விழா ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. கடந்த 30.11.2013 சனிக்கிழமை அன்று அஜ்மாநிலுள்ள ஹம்ரியா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில் கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி, ஓட்டப் பந்தயம் உட்பட பல

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் விஸ்வநாத் ஆனந்தை வீழ்த்தி நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். முன்னதாக முந்தைய 9 சுற்றுக்களின் முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகளுடன் முன்னிலையிலும், விஸ்வநாதன் ஆனந்த் 3 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலையிலும் இருந்தனர். சாம்பியன் பட்டம் வெல்ல 6.5 புள்ளிகள் பெற வேண்டும். இதையடுத்து நேற்று நடைபெற்ற 10வது சுற்று உலக செஸ் சாம்பியன்ஷிப் ஆட்டம்

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3வது தடவை தங்க ஷூவை வென்றார்!

பார்சிலோனா: அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மூன்றாவது தடவையாக  தங்க ஷூ (Golden Shoe) விருது வென்றார். இவர் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2012-2013ல் நடந்த ஐரோப்பிய சுற்றில் 46 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்சிலோனா அணி வீரர்கள் மற்றும் ஸ்பானிஷ் லீக் சாம்பியன் தலைவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொண்டார். இது பற்றி அவர் கூறும்போது,

மனிதர்களின் முழங்காலில் இதுவரை கண்டறியப்படாத புதிய தசை நார்!

லண்டன்: மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர். தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லெமன்ஸ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இருவரும் கண்டறிந்துள்ளனர். நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களை திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள்தான் கால்களுக்கான பாதுகாப்பு

வெற்றிச் சின்னம் காண்பித்த கால்பந்து வீரர் நீக்கம்!

கெய்ரோ: கோல் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியவாதிகளை ஆதரிக்கும் வெற்றிச் சின்னத்தை கையால் காண்பித்த ஸ்ட்ரைக்கர் அஹ்மது அப்துல் ஸாஹிரை எகிப்திய கால்பந்து க்ளப் நீக்கம் செய்துள்ளது. ராணுவ சதிப்புரட்சி மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் போது காட்டுவது போல தனது நான்கு விரல்களையும் உயர்த்திக் காட்டியதால் ஸாஹிர் நீக்கம் செய்யப்பட்டதாக எகிப்தின் பிரபல கால்பந்து கிளப்பான அல் அஹ்லியின்

இந்திய அணி 57 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி !

பெங்களூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.  7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் புனே, மொகாலியில் நடந்த முதலாவது 3–வது ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், ஜெய்ப்பூர், நாக்பூரில் நடந்த 2–வது மற்றும் 6–வது ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4–வது, 5–வது ஒரு நாள் போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இதையடுத்து இந்த தொடர் 2–2 என்ற கணக்கில்

சுவிஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு: போபண்ணா-வாசலின் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

பசல்: சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி, போலந்தின் லுகாஸ் குபாட், இத்தாலியின் ஆன்டிரியாஸ் செப்பி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 5-7 என போராடி கோட்டை விட்ட போபண்ணா ஜோடி, 2வது செட்டில் எழுச்சி கண்டு 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் "சூப்பர் டை பிரேக்கரில்" அசத்திய இந்திய-பிரான்ஸ் ஜோடி 10-7 என வென்றது. இறுதியில் போபண்ணா-ரோஜர்

Top