You are here
Home > Uncategorized > விளையாட்டு

‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று வரலாறு சாதனை படைத்தார் பி.வி.சிந்து!

சீனாவின் குவாங்ஸோ நகரில் நடந்த சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் பட்டம் வெல்பவர்கள் ‘உலக சாம்பியன்’ என அழைக்கப்படுவார்கள். மகளிர் ஒற்றையர்

விராட் கோலி் பிராட்மேன் சாதனையை முறியடிக்க முடியாது!

கிரிகெட்டில் பல ஜாம்பவானின் சாதனைகளை தகர்த்து வரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை தென் ஆப்பிரிக்கா முன்னால் கேப்டன் கிரேம் ஸ்மித் ”சூப்பர்ஸ்டார்” என்று புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹீம் கோலியை புகழ்ந்துள்ளார்.   இதுக்குறித்து அவர் கூறும்போது அனைவரும் விராட் கோலியைப் புகழ்வதற்குக் காரணம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், கிரிக்கெட்டில் சாதிக்கும் வெறியுமாகும். மேலும் காயம் ஏதும் ஏற்படாமல்

ஐபிஎல் சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல். சூதாட்டத்தில் இந்திய அணித் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி மற்றும் ரெய்னாவுக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை செய்த அறிக்கை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 170 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை

வாசிம் அக்ரமுக்கு அபராதம்!

லாகூர்:பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம். இவர் லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் அருகே உள்ள சாலையில், தனது காரில் 78 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவர், அக்ரமின் காரை தடுத்து நிறுத்தி, இந்த சாலையில் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே காரை ஓட்ட வேண்டும். நீங்கள் அதை

குருநாத் மெய்யப்பன் குற்றவாளி! விசாரணை கமிட்டி

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பன் குற்றவாளியே என விசாரணை குழு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. கிரிக்கெட் வீரர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் என பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒரு வரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. கிரிக்கெட்

தோல்வி துரதிர்ஷ்டவசமானது: தோனி கவலை!

வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் அணித் தலைவர் தோனி கூறுகையில், பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் இப்படி ஒரு சிறப்பான பந்துவீச்சை நான் இதற்கு முன்பு பார்த்து இல்லை. விக்கெட்டுக்கு நேராக நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். தொடர்ந்து இது மாதிரி அவர்கள் பந்து வீசியது அவசியமாகிறது.

டெஸ்டிலும் இந்தியா தோல்வி!

வெல்லிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 202 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி ‘பாலோ-ஆன்’ ஆன போதிலும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்கவில்லை. மாறாக 301 ஓட்டங்கள்

ஷூமாக்கர் இறந்து விட்டாரா? – இல்லை என்று கூறுகிறது மருத்துவமனை!

பிரான்ஸ்:பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் இறந்து விட்டதாக வந்த தகவலில் உண்மையில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்ததால், தற்போது பிரான்சில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் இருக்கும் ஷூமாக்கருக்கு, மருத்துவர்கள்

குளிர்கால ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் கொடிகளை ஏந்தவில்லை!

சோச்சி:ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் சிவ கேசவன், நதீம் இக்பால், ஹிமன்சு தாகூர் ஆகிய 3 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தி போட்டியில் பங்கேற்காமல், ஒலிம்பிக் கொடியின் கீழ் அணி வகுத்தனர். இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதுவே

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்!

சோஷி:ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. 23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ஜனாதிபதி புடின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இராணுவத்தினருடன் 37,000 பொலிசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியை சீர்குலைக்க விமான பயணிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Top