You are here
Home > Uncategorized > தொழில்நுட்பம்

தமிழகத்தில் அணு துகள் (நியூட்ரினோ) ஆராய்ச்சி மையம் – பிரதமர் அறிவிப்பு!

ஜம்மு: தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் அணு துகள் (நியூட்ரினோ) ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். மேலும் 4,500 கோடி ரூபாய் தேசிய உயர் செயல்திறன் கணினிசார் அறிவியல் திட்டமும் ரூ. 3,000 கோடியில் தேசிய புவியியல் தகவல் முறை திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கஷ்மீர் மாநிலம், ஜம்முவில் 101-வது தேசிய அறிவியல் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த

Technology – Asus தரும் மிகச் சிறிய டெக்ஸ்டாப் கணனி!

Asus : மிகவும் சிறிய அளவுடையதும் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மினி டெக்ஸ்டாப் கணனியினை Asus நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Eee Box EB1037 எனும் வியாபாரக் குறியீட்டினைக் கொண்ட இக்கணனியானது 2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 8GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும் சாதாரண கணனிகளை விடவும் 70 சதவீதம் மின் சக்தி சேமிப்பைக் கொண்ட இக்கணனியில் சேமிப்பு நினைவகமாக 320GB இருந்து

பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண்களை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கண்பார்வையற்ற இருவருக்கு விழித்திரை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா, டேவிட் என் ஸாக்ஸ் ஆகிய மருத்துவர்கள் பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி தங்களது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். தங்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயசுந்தரா, நோயாளிகளின் முன்னேற்றமும் தங்களுக்குத் திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சிகிச்சை மூலம் அவர்கள்

மைக்ரோஸாஃப்டின் டாப்லெட் கம்ப்யூட்டர் அறிமுகம்!

வாஷிங்டன்:ஆப்பிள் ஐபாடிற்கு போட்டியாக ஸாஃப்ட்வெயர் உலகில் கொடிக்கட்டிப் பறக்கும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் டாப்லெட் கம்ப்யூட்டரை தயாரித்து வெளியிட்டுள்ளது. மைக்ரோஸாஃப்டின் மிகவும் புதிய ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ்-8 உபயோகிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள டாப்லெட்டின் பெயர் ஸர்ஃபஸ்(surface) என்பதாகும். டாப்லெட் கம்ப்யூட்டர் சந்தையில் ஆப்பிளுடன் நேரடியாக மோத மைக்ரோஸாஃப்டிற்கு பலம் தரும் வகையில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய ஸர்ஃபஸால் இயலும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கையாகும். ஸாஃப்ட்வெயர் துறையில் மட்டும் ஒதுங்காமல் ஹார்ட்வெயர் துறையிலும் ஆதிக்கம்

ஆங்கிலத்தில் மின்னஞ்சலா? இனி உங்க மொழியிலேயே படிக்கலாம் – ஜி மெயிலின் புது வசதி!

ஹைதராபாத்:ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது. ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் 'டிரான்ஸலேட்' என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க

ஆன்லைனில் தகவல்களை பாதுகாக்க கூகிள் ட்ரைவ்

வாஷிங்டன்:இணையதள உபயோகம் தவிர்க்க முடியாத காரியமாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் பயனீட்டாளர்கள் ஆன்லைனில் தகவல்களை ஸ்டோரேஜ் செய்யும் வசதியை கூகிள் உருவாக்கி வருகிறது. ஃபோட்டோக்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆன்லைனில் சேகரிக்கும் விதத்தில் வசதி கூகிள் ட்ரைவ் என்று அழைக்கப்படுகிறது. இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இதனை உபயோகிக்கலாம். மைக்ரோ சாஃப்டின் ஸ்கை ட்ரைவிற்கு கூகிள் ட்ரைவ் பலத்த போட்டியை கொடுக்கும் என கருதப்படுகிறது. ஐந்து ஜிகா பைட் வரை சேகரிக்கும் வெர்ஸனை பயனீட்டாளர்கள் இலவசமாக உபயோகிக்க கூகிள்

கனடாவில் டிஜிட்டல் கரண்சி(Mintchip)

ஒட்டவா:மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் வேளையில் நாணயங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் புதிய டிஜிட்டல் கரண்சியை(mintchip) உருவாக்கியுள்ளது கனடாவின் ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனம். கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மிண்ட்சிப்(mint chip) குறித்த  வீடியோவில் எப்படியெல்லாம் இந்த மிண்ட் சிப்பை உபயோகிக்கலாம் என்று விளக்கப்பட்டது. 'மிண்ட் சிப்' வடிவமைப்பு இன்னும் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டது. பணத்தை விட மிகவும் எளிதாக உபயோகிக்கும் விதமாகவும்; குழந்தைகள் கூட கஷ்டம் இல்லாமல்

உ.பி:தேர்தல் களத்தில் 109 கிரிமினல்கள்

லக்னோ:உ.பி சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் முதல் கட்ட தேர்தலில் 109 கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த 867 வேட்பாளர்களில் 287 பேரின் மனுவை பரிசோதித்த பொழுது இவர்களில் 109 பேர் மீது கொலை, கடத்தல், வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. உத்தரபிரதேச மாநில தேர்தல் கண்காணிப்பு குழு வேட்புமனுக்களை பரிசோதித்தது. கிரிமினல் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு முதலிடம். 28 பேர் இக்கட்சி சார்பாக

நோ மொ ஃபோபியா(No-mo-phobia)

நோ மொ ஃபோபியா என்றால் நோ மொபைல் ஃபோபியா என பொருள். மொபைல் ஃபோனை உடன் எடுத்துச் செல்ல மறத்தல், மொபைல் ஃபோனின் பேட்டரி ரிப்பயர் ஆகுதல், சார்ஜ் தீர்ந்து போதல் ஆகிய வேளைகளில் ஏற்படும் கவலைதான் நோ மொ ஃபோபியா ஆகும். இக்கவலை வளர்ந்து வளர்ந்து மனோ நோயாக மாறிவிடுமாம். சாதாரணமாக இதற்கெல்லாம் யாரும் சிகிட்சையோ, கவுன்சிலிங்கோ பெறுவதில்லை. என்ன டெக்னாலஜி என்றாலும் அதில் நன்மையும், தீமையும் உண்டு. மனிதர்களின் குணநலனின்

மிக வேகமான இணைய உலாவி எது?

Compuware’s  எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது. 1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது. இந்த கணிப்புக்கள் தனிப்பட்ட லேப் கணினிகளில் டெஸ்ட் செய்யப்பட்டவையில்லை எனவும் உண்மையான கணினி மற்றும் இணைய பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளாகும். மேலும் இவை குறிப்பிட்ட உலாவியின் தொடக்க வேகத்தை 

Top