You are here
Home > கட்டுரைகள் (Page 2)

தேர்தல் ஜுரத்தில் உளறும் மோடி!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்ற முயற்சி சாத்திப்படுமா என்ற கேள்வியும் நம் முன் எழுந்துள்ளது. இடது சாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அசாம் கண பரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக உருவாகியுள்ளன. இது போதிய

மோடி மந்திரம் இனி பலிக்காது!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில் மோடி, தான் பிரதமராக வரவேண்டும் என்பற்காக தன்னுடைய மோடி மஸ்தான்  வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் மட்டும் அல்ல. உலக நாடுகள் கூட குஜராத் வேலைவாய்ப்பில் கல்வி, வாழ்வாதாரத்திலும், சமூக  முன்னேற்றத்திலும் அனைத்து தளங்களிலும் முன்னேறியதாக செய்தியை கூறுவதற்கு அனைத்து மீடியாக்களும், விலை பேசப்பட்டு வாங்கப்பட்டது. அதன் மூலம் அனைத்து அரசியல் தலைவர்களும் நம்ப வேண்டும் என்ற வேலையை இப்போதே

“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்

பெயர் : “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” ஆசிரியர்:   பே. சாந்தி வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 136 விலை: 80/- தொடர்புக்கு: +91 99408 38051 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளில் முக்கியமான ஊர் மேலப்பாளையம். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களின் அத்துமீறல்கள் 1990களின் காலக்கட்டத்தில் மேலப்பாளையம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசின் நெருக்கடிகள் சொல்லில் அடங்கா துயரத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் சுற்றி மேலப்பாளையம், கடையநல்லூர், தென்காசி,

முளை கட்டிய தானியங்களின் மகத்துவங்கள்!

முளை கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானியங்கள், பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளை கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளை கட்டப்பட்ட தானியங்களே. என்சைம்கள் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு

இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை

பேறு காலம் முடிந்த பெண்களே… இதச் சாப்பிடுங்க! பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். அதே போல் குழந்தை பிறந்த பிறகு ஒரு சில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும். அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக் கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்குப் பின் பெண்கள்

நோ ஆஃபீஸ் டென்ஷன் ப்ளீஸ்! – மனஅழுத்தத்தைக் குறைக்கும் எளிதான வழிகள்!

அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சில சமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டி வரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்து விடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இந்த மனஅழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி

பத்திரிகைத்துறை ஒரு பார்வை

அன்றாடம் மக்களின் அசைவுகள் நகரத் தொடங்குவதே பத்திரிகைகளிலிருந்துதான். ஒரு சாதாரண இந்திய குடிமகனிலிருந்து (Citizen), நாட்டின் தலைவர் (President) வரைக்கும் பத்திரிகை இல்லாமல், அன்று அவர்களுடைய வாழ்க்கை தொடங்காது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட, நம்முடைய அதிகாலை வேளையில் நாம் கேட்கக்கூடிய குரல் இதுவாகத்தான் இருக்கும்: “சார்! பேப்பர்.” அன்று பத்திரிகை வந்தவுடன், சிறுவர்கள் தங்களுடைய கல்வி தொடர்பாக தேடுவார்கள். இளைஞர்கள் தங்களுடைய வேலை தொடர்பான விஷயங்களை தேடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தேவையான

இனிக்கும் இல்லறம் – 13

ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவம்! “சலிப்பாக இருக்கு! ஒரு புதுமையும் இல்லை! என்னடா வாழ்க்கை இது?” - திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் பலரும் உள்ளுக்குள்ளேயே அலுத்துக்கொள்வார்கள். அல்லது தங்களது அங்கலாய்ப்பை பிறரிடம் வெளிப்படுத்துவார்கள். நம்மில் பலரும் கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறோம். திருமணப் பேச்சு எடுக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு சிலிர்ப்பு எல்லோருக்கும் உருவாகும். அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள், திருமணம், விருந்துகள், வைபோகங்கள், சுற்றுலா என திருமணம் முடிந்து முதல் சில

“தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” ஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 72 விலை: 45/- இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பதுதான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாததே. இது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற

Top