You are here
Home > கட்டுரைகள் > விமர்சனங்கள் (Page 2)

“தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” ஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 72 விலை: 45/- இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பதுதான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாததே. இது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற

“ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” ஆசிரியர்:   B. ரியாஸ் அஹமது MBA வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 152 விலை: 100/- ஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் நயவஞ்சக யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது. யூதர்களின் குறுமதியால் ஃபலஸ்தீன மக்கள் கைசேதப்பட்டு நின்றார்கள். தொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை

மதுவில் மதிமயங்கிக் கிடக்கும் பொது சமூகம்!

வீட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த வெளிநாட்டு மதுவை எடுத்து 8 வயது சிறுவன் குடித்து மரணமான கொடூர சம்பவம் கேரளாவில் பத்மநாமபுரத்துக்கருகில் நடந்துள்ளது. தொலைக்காட்சிப் பெட்டி ஸ்டாண்டின் கீழ் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து அந்தச் சிறுவன் குடித்திருக்கிறான். அப்பொழுது அவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 300 மில்லிக்கும் அதிகமாக அவன் உடலில் மது சென்றதால் அவனுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. தங்கள் சுகத்திற்காக அநியாயமாக ஒரு சிறுவனைப் பலியாக்கியிருக்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இது ஒரு

சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா?

முகநூலில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்திடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கேரளாவைச் சார்ந்த இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். தன் 3 வயது குழந்தையையும், கணவரையும் நிர்க்கதியில் நிறுத்தி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தன் சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் அந்தச் சகோதரனின் நண்பன் அந்தப் பெண்ணைக் கண்ணியக் குறைவாக முகநூலில் விமர்சித்தும்,

தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தாயின் குரல்!

“ஏழைகள், பலவீனமானவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், வெறுக்கப்பட்டவர்கள் - இவர்களுக்குத்தான் மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.” - ராம்சே கிளார்க், முன்னாள் அமெரிக்க தலைமை அரசு வழக்கறிஞர் சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஓர் அரங்கு. 12 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், 700க்கும் மேற்பட்ட கடைகள் என மக்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்யும் ஒரு சூழ்நிலையில், தன் மகனின் தூக்குத்

2013 : இன்னொரு இன்னல் வருடம் கடக்கிறது!

சிறுபான்மை  மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக துயரம் தந்து இன்னொரு வருடம் கழிகிறது. ஆம்! இந்திய வரலாற்றின் பல கறுப்புப் பக்கங்களை தாங்கி 2013 நம்மிடமிருந்து விடை பெறுகிறது. இந்திய நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அவலமாகக் கருதப்படுவது நரேந்திர மோடி தலையெடுத்தது. அவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததுதான் 2013ன் உச்சகட்ட கொடூரம்! பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் எப்படி இந்தியா உலக அரங்கில் தலை குனிந்து நின்றதோ,

மீண்டும் சர்வதிகாரத்தை நோக்கி வங்க தேசம்!

வங்க தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாஅத்தே இஸ்லாமியின் உயர் மட்டத் தலைவர் அப்துக் காதிர் முல்லாஹ் மீதான மரண தண்டணை, பல்வேறு எதிர்வினைகளை வங்க தேசத்தின் அரசியல் அரங்கில் தோற்றுவித்துள்ளது. அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், எதிர்க்கட்சிகள் தேர்தலைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கின்ற நிலையிலும், குழம்பிப் போயுள்ள அரசியலை மேலும் குழப்புகின்ற வகையில், முல்லாஹ் மீதான தண்டனை இவ்விதம் அவசரப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னணி காரணம் புரிந்து கொள்ள முடியாததல்ல. 1971ல் இடம் பெற்ற வங்க

மோடியின் வரலாற்றுப் புரட்டு!

“முட்டாள்தனமான செயல்களை விட பயங்கரமானது எதுவுமில்லை” - ஜவஹர்லால் நேரு ‘தி இந்து’  14.11.2013 இதுநாள் வரை மாநில முதல்வராக இருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தரகராக இருந்து செயல்பட்ட நரேந்திர மோடி, அடுத்த கட்ட முன்னேற்றமாக இந்தியாவின் பிரதமராக இருந்து அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்ற கனவோடு பிரதமர் பதவிக்ககாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு பொதுக்கூட்ட மேடையிலும் வரலாறுகளைப் பேசுகின்றேன் பேர்வழி என்ற பெயரில், முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். வரலாறுகளைப்

டெல்லி தேர்தலில் களம் காணும் SDPI!

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பெரும் கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க.வும் தங்கள்  சக்தியைத் தீர்மானிக்க போராடினர். அத்துடன் பல்வேறு கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க களம் கண்டன. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பங்களிப்பையும், அக்கட்சியின் முன்னேறத்தையும் பார்க்கும்போது வரும் காலத்தில் அதன் கிளைகள் விரிந்து பரவி இந்தியா முழுக்க படரும் என்று நாம் நம்பும் அளவிற்கு அதன் வெற்றி அமைந்திருந்தது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா

“தி மெஸேஜ்” (தமிழ்) – திரைப்பட விமர்சனம்

நேற்றைய வரலாற்றையும், நிதர்சன நிகழ்வுகளையும்,  நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கும் எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் சினிமா என்பதை மறுக்கவியலாது. பல்நோக்கு சிந்தனைக் குறைவின் வெளிப்பாடு இஸ்லாமிய சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதால், சினிமாத்துறை பெரும்பான்மை முஸ்லிம்களால் கவனிக்கப்படாமலேயே விட்டுவிடப்பட்டது. ஆனால் ஆக்கப்பூர்வமாய் இத்துறையையும் பயன்படுத்திட இயலும் என்பதை நிரூபித்தவர் முஸ்தஃபா அக்காத். ஆம்...! “தி மெஸேஜ்” என்ற நபித்துவ வரலாறையும், “உமர் முக்தார்” என்ற போராட்ட வரலாற்றையும், கண் முன்னே நிறுத்தும்

Top