You are here
Home > கட்டுரைகள் > விமர்சனங்கள்

காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு?

இளம் ஆண், பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ளவும், ஏற்கனவே அறிவித்த காதலர்கள் கடற்கரை, பூங்கா, சினிமா என்று சுதந்திரமாகச் சுற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட தினம்தான் இந்தக் காதலர் தினம். இந்தக் கலாச்சாரம் இன்று முஸ்லிம்களிடமும் பரவியிருப்பதுதான் ஆச்சரியம். இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அன்னியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றில் இந்தக் காதலர் தினத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ‘வேலன்டைன்ஸ் டே’ (Valentines Day) என்பதுதான் இதன் மூலப் பெயர். அதனை அப்படியே மொழிபெயர்த்தால் ‘வேலன்டைன் தினம்’ என்றுதான் வரும்.

வீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்கா?

ஓலை உலகம் எப்போதோ ஓடிப் போய் விட்டது! புத்தக உலகம் இன்னும் சில வருடங்களில் புதைந்து விட காத்திருகின்றது. இதோ,  இப்போது இன்டர்நெட் உலகம், நம் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு - மன்னிக்கவும் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது! இது நல்ல பழக்கம்தானா? காலையில் எழுந்ததும் face ஐ கழுவுவதற்கு பதில், facebook இல் கழுவி குடிக்கின்றோம். டிஃபன் பட்டர் ஐ அசை போடுவதற்கு முன் ட்விட்டெரை அரைக்கின்றோம்! அரைமணி நேரம் ரோட்டில்

“26/11 விசாரணை : நீதித்துறையும் தோற்றது ஏன்?” – நூல் அறிமுகம்

கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதம், மும்பையில் தாக்குல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் செய்தனர் என்றும், அவர்கள்தான் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தினர் என்றும் காவல்துறையும், உளவுத்துறையும் கூறின. ஆளும் அரசாங்கமும் அதற்கு தலையாட்டியது. அதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பு

தமிழருவியா? பொய்யருவியா?

“80% இந்துக்களைக் கொண்ட இந்த நாட்டில் முழுக்க முழுக்க இந்துக்களுக்காக ஒரு கட்சி கூட இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு பல்வேறு கட்சிகள் இருக்கின்றன” என்கிறார் தமிழருவி மணியன். காந்தியின் பெயரில் இயக்கம் கண்ட தமிழருவி மணியன், காந்தியைக் கொன்ற கொலைகாரக் கூட்டம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் ஒவ்வொரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவது வாடிக்கையென்றாலும், அவரது ஒப்பாரியை நடுநிலையாளர்கள் ரசிக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். இவரது மதவெறிக் கூட்டணியை

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?

ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது. அவருடைய இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது. அது யாரை வேண்டுமானாலும் ஊடுருவும். நாளை இளயராஜாவே இஸ்லாத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. “இது ஏதோ திடீரென்று எடுத்த முடிவல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஆய்ந்தறிந்து, ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு” என்று டெக்கான்

காந்தி முதல் கர்க்கரே வரை!

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு பொறுக்காத தேச விரோத சக்திகள் பிரிவினையை உண்டாக்கி அதன் மூலம் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பெரும் சவாலாக திகழ்கின்றனர். அதிகாரத்தின் படிக்கல் அரசியல் என்பதனை விளங்கிய ஆதிக்க வர்க்கத்தினர் இன்று அதற்கு துணையாய் ஆசை வார்த்தை ஜாலங்களுடன் பாமர மக்களின் மனங்களை மாற்றும் சூழ்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர். பாஜக ஆட்சியில் இருந்த காலத்திலும், ஆட்சியில் இல்லாத போதும் ஒரு சாதாரண வலது சாரி அதிகார

தேர்தல் ஜுரத்தில் உளறும் மோடி!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்ற முயற்சி சாத்திப்படுமா என்ற கேள்வியும் நம் முன் எழுந்துள்ளது. இடது சாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அசாம் கண பரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக உருவாகியுள்ளன. இது போதிய

மோடி மந்திரம் இனி பலிக்காது!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில் மோடி, தான் பிரதமராக வரவேண்டும் என்பற்காக தன்னுடைய மோடி மஸ்தான்  வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் மட்டும் அல்ல. உலக நாடுகள் கூட குஜராத் வேலைவாய்ப்பில் கல்வி, வாழ்வாதாரத்திலும், சமூக  முன்னேற்றத்திலும் அனைத்து தளங்களிலும் முன்னேறியதாக செய்தியை கூறுவதற்கு அனைத்து மீடியாக்களும், விலை பேசப்பட்டு வாங்கப்பட்டது. அதன் மூலம் அனைத்து அரசியல் தலைவர்களும் நம்ப வேண்டும் என்ற வேலையை இப்போதே

“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்

பெயர் : “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” ஆசிரியர்:   பே. சாந்தி வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 136 விலை: 80/- தொடர்புக்கு: +91 99408 38051 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளில் முக்கியமான ஊர் மேலப்பாளையம். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களின் அத்துமீறல்கள் 1990களின் காலக்கட்டத்தில் மேலப்பாளையம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசின் நெருக்கடிகள் சொல்லில் அடங்கா துயரத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் சுற்றி மேலப்பாளையம், கடையநல்லூர், தென்காசி,

இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை

Top