You are here
Home > கட்டுரைகள் > மனதோடு மனதாய் (Page 2)

அபூபக்கரின் அறுதி நிலைப்பாடு!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். இஸ்லாத்திலிருந்து பலர் வெளியேறும் செய்திகள் நாலாபுறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தன. முஸைலமாவைப் போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று

பதவிகள் பறிக்கப்படும்பொழுது…

“நீங்கள் எனக்கு அமைத்துத் தந்த அதிகாரம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நீங்கள் என்னிடமிருந்து அந்த அதிகாரத்தைப் பறித்தெடுத்தது எனக்குத் துக்கத்தையும் தரவில்லை.” காலித் இப்னு ஸஈதின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்தது. படைத் தலைவர் பதவியிலிருந்து அவரை மாற்றியதற்கான காரணத்தை நேரில் விளக்குவதற்காக வீட்டுக்கு வந்திருந்த கலீஃபாவிடம்தான் அவர் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக அங்கீகரிக்க ஆரம்ப கட்டத்தில் தயக்கம் காட்டினார் காலித் இப்னு ஸஈத். ஹஸ்ரத்

சாம்ராஜ்யங்களின் சரிவு!

"உங்களை விட எண்ணிக்கையில் குறைந்தவர்களும், உள்ளுக்குள் அடித்துக் கொள்பவர்களும் உலகில் யாராவது இருப்பார்களா? நீங்களா என்னை பயமுறுத்துகிறீர்கள்?" ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரதிநிதிகளிடம் பாரசீகச் சக்கரவர்த்தி இவ்வாறு கூறினார். எல்லையில் இஸ்லாமியப் படை முகாமிட்டிருந்தது. போரைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சக்கரவர்த்தியைக் காண வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை அதிக வெறுப்புடன் பார்த்தார் பாரசீகச் சக்கரவர்த்தி. "வாழ்க்கைச் சிரமங்களும், கஷ்டங்களும் இருப்பதனால் ஏதாவது சாகசம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருந்தால்

அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்

ஹுனைன் யுத்தம் நடந்தபொழுது முஸ்லிம்களுக்கு நிறைய கனீமத் பொருட்கள் கிடைத்தன. அந்தப் பொருட்களைப் பங்கீடு செய்யாமல் அதனைப் பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு அண்ணலார் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாயிஃப் நோக்கி தங்கள் படையுடன் புறப்பட்டார்கள். திரும்பி வரும்பொழுது முஸ்லிம் படை ஜிஃரான் என்னும் இடத்தை அடைந்தது. போரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் அங்கேதான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பொருட்களைக் கணக்கெடுப்பதற்காக அண்ணலார் ஆளை நியமித்தார்கள். கணக்கெடுப்புக்குப் பின் அந்தப் பொருட்கள் அனைத்தும் ஐந்து பாகங்களாகப்

தீமைக்கெதிரான போராட்டம்

அபூஸுஃப்யானும்(ரலி), ஸுஹைல் இப்னு அம்ரும் (ரலி) கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். கலீஃபா அவர்களைக் கண்டு சில காரியங்கள் குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது. வேறு சில குறைஷிகளும், குறைஷிகள் அல்லாதாரும் கலீஃபாவைச் சந்திப்பதற்காக அங்கே காத்திருந்தனர். யாருக்கும் கலீஃபாவைச் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. கலீஃபா வேறு ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார்கள். இறுதியில் கலீஃபாவின் வீட்டினுள் ஒரு சிலர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் வந்தவருக்கு முதலில் அனுமதி என்ற ரீதியில்

வெறுப்புக்கு என்ன காரணம்?

பாதையோரத்தில் ஒரு சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை ஓர் ஆள் கடந்து சென்றார். அவர்களைக் கடக்கும் பொழுது முறையாக ஸலாம் சொல்லிவிட்டே சென்றார் அவர். நின்றவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் கூறினார்கள். அவர் கொஞ்ச தூரம் கடந்து சென்றவுடன் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் சொன்னார்: "அந்த மனிதரைக் கண்டால் எனக்கு வெறுப்பு தோன்றுகிறது." அங்கே கூடியிருந்தவர்கள் அவர் பேசியதை விரும்பவில்லை. "என்ன காரணம்?" என்று அவர்கள் எரிச்சலுடன் கேட்டனர். அவர் பதிலளிக்கும்

நபித்தோழர்களின் பேணுதல்கள்

"எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலைகளைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்." -இது புகார் அல்ல. அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித்தோழர் கூறிய வார்த்தைகள். அடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் அண்ணலாரிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் அண்ணலாரிடம் தொடர்ந்தார்: "அவர்களிடம் கடுமையாகப் பேசவேண்டி வருகிறது.

விருப்பும் வெறுப்பும்!

"அதிய்! தாங்கள் நல்லவர். ஏன் நீங்கள் எங்களுடன் சேரமாட்டேன் என்கிறீர்கள்? எனக்குத் தெரியும், மக்கள் அனைவரும் எங்களை எதிர்க்கிறார்கள் என்பதனால் தானே... ஊர்க்காரர்கள் ஒதுக்கி வைத்துள்ள பலவீனமான மனிதர்களும், சாதாரண மனிதர்களும் மட்டும்தான் எங்களுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தானே உங்களுக்கு? நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஏற்றெடுத்துள்ள இந்தப் புனிதப் பணியை அல்லாஹ் வெற்றியடையச் செய்வான். அச்சமே இல்லாத ஓர் உலகம் உருவாக்கப்படும். ஏகாதிபத்தியம் வெற்றி கொள்ளப்படும்." நஜ்த்

அண்ணலாரின் அடுத்த வாரிசு

நோய் கடுமையாகப் பாதித்த சமயம். மிகுந்த சிரமங்கள் இருந்தும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்…) அவர்களே தொழுகைகளை நடத்தி வந்தார்கள். இனிமேல் முடியவே முடியாது என்று அண்ணலாருக்கு ஒரு நாள் தோன்றியது. அதிகாலைத் தொழுகையை அபூபக்கர் (ரலி…) அவர்களை நடத்தச் சொல்லலாம் என்று அண்ணலாருக்குத் தோன்றியது. அன்னை ஆயிஷாவிடம் (ரலி…) அண்ணலார் இதுகுறித்துக் கூறினார்கள். இறைத்தூதரைக் காணாவிட்டால் மக்கள் சந்தேகப்படுவார்களே என்றெண்ணியவாறு அண்ணலாரைப் பார்த்தார் அன்னை ஆயிஷா (ரலி). தன் தந்தை அபூபக்கர் (ரலி…)

இதுதான் இப்பூவுலகம்

"இறைத்தூதரே! நம் சமுதாயம் கொஞ்சம் வசதியோடு வாழ்வதற்கு தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். நெருப்பை வணங்குபவர்களுக்கும் அல்லாஹ் நிரம்ப செல்வங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறான். ஆனால் அவர்கள் சிறிது கூட அவனை வணங்குவதில்லை.” இப்படிச் சொன்னது ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டு சில விஷயங்கள் பேசுவதற்காக வந்திருந்தார்கள் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அண்ணல் நபிகளார் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. பழைய

Top