You are here
Home > கட்டுரைகள் > மனதோடு மனதாய்

உயிரினும் மேலான உத்தம நபி!

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார். (சூரா அல் அஹ்ஸாப் 33:6) அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒரு முறை உமர் (ரலி) தன் உயிருக்கு அடுத்தபடியாக அண்ணலாரை அதிகமதிகம் நேசிப்பதாகக் கூறினார். “நீர் உம் உயிரை விட அதிகமாக என்னை நேசித்தால்தான் உம்முடைய ஈமான் பூரணமடையும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே உமர் (ரலி), “நான் உங்களை என் உயிரை விடவும் அதிகமாக

வெளிச்சம் வந்த வழி!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரன்தான் ஹம்ஸா. அவர்களிருவருக்குமுள்ள பந்தம் அந்த உறவு மட்டுமல்ல. இருவரும் ஒரே வயதுக்காரர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்குடி சகோதரர்கள். இளைஞர் பருவம் வரை இணைபிரியா நண்பர்கள். இப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் இருவரின் குணாதிசயங்களும் வித்தியாசமானவை. அண்ணலார் சாந்தமானவர்கள். எளிமையும், அடக்கமும் அவர்களின் அடையாளங்கள். ஆரவாரமின்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதில் அண்ணலாருக்கு அலாதி ஆர்வம். முதிர்ச்சியடைந்தபொழுது தனிமையிலும், தியானத்திலும் அவர்கள் நேரத்தை செலவழிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸா

முதல் வாள்!

ஹாஷிம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை. மக்காவில் அவர்களுக்கிருந்த செல்வாக்கும், புனித கஅபாவில் அவர்கள் நிலைநிறுத்தியிருந்த அதிகாரமும், ஆதிக்கமும் அவர்களைத் தடுத்திருக்கலாம். ஆனால் தங்கள் குடும்பத்தில் ஓர் அங்கம் என்ற அடிப்படையில் எதிரிகளின் கைகளில் அண்ணலாரை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. அண்ணலாரின் காரியத்தை எங்களுக்கு விட்டுத் தரவேண்டும் என்று அபூஜஹ்லும், இன்னபிற எதிரிகளும் கோரியபொழுது அபூதாலிப்

எல்லாம் அல்லாஹ்வுடையதே!

“பேரீச்சம் பழம், ரொட்டி, இறைச்சி…” – அப்பொழுது சாப்பிட்டு முடித்த உணவுகளின் வகைகளை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் ஆச்சரியத்துடன் அண்ணலாரை நோக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன சொல்லப் போகிறார்கள்? அதிகம் யோசிக்கும் முன்பே அண்ணலார் தொடர்ந்தார்கள்: “பேரீச்சம் பழம், ரொட்டி, இறைச்சி… என் ஆத்மா எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இவையெல்லாம் இறைவனின் அருட்கொடைகள். இவை குறித்து நாளை

நெற்களும், பதர்களும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அருமைத் தோழர்களும் ஒரு முறை நடந்து செல்லும்பொழுது மரணக் கிரியை ஒன்று நடப்பதைக் கண்டார்கள். மரணித்தவர் குறித்து அண்ணலாரின் தோழர்கள் நல்லவிதமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைச் செவியுற்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “உறுதியாகிவிட்டது!” இன்னும் சிறிது தூரம் அவர்கள் சென்றபொழுது இன்னொரு மரணக் கிரியை நடப்பதைக் கண்டார்கள். இங்கே மரணித்தவரைக் குறித்து நபித்தோழர்கள் மோசமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:

வாய்ப்பை இழந்த வலீத்!

“முஹம்மத் பைத்தியம் என்று கூறுகிறீர்கள்.அவர் எப்பொழுதாவது பைத்தியம் போல் உளறுவதை நீங்கள் பார்த்ததுண்டா?” குறைஷிகள் சொன்னார்கள்: “இல்லை.” “அவர் ஜோசியர் என்று கூறுகிறீர்கள். வாழ்க்கையில் என்றைக்காவது அவர் ஜோசியம் படித்ததை நீங்கள் கண்டதுண்டா?” “இல்லை.” – மீண்டும் அதே பதிலே வந்தது குறைஷிகளிடமிருந்து. “அவர் சொல்வது கவிதை என்று கூறுகிறீர்கள். என்னை விட கவிதை அறிந்தவர் உங்களில் யாரும் இல்லை. முன்பு எப்பொழுதாவது முஹம்மத் கவிதை சொல்லி நீங்கள் யாராவது கேட்டதுண்டா?” “இல்லை.” – குறைஷிகள் நம்பிக்கையிழந்து

கருணை நபி கற்றுத் தந்த தற்காப்பு!

ஹுதைபியா உடன்படிக்கை செய்து முடித்து ஒரு வருடம் ஆயிற்று. உடன்படிக்கையின் படி முஸ்லிம்கள் இப்பொழுது மக்காவுக்குச் சென்று உம்ரா செய்யலாம். அதற்குரிய காலம் வந்தபொழுது தாமதிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா பயணம் புறப்பட்டார்கள். 60 ஒட்டகங்களை குர்பானீ கொடுப்பதற்காக அண்ணலார் எண்ணியிருந்தார்கள். சமாதான ஒப்பந்தம் நிலவில் இருந்தபொழுதும் குறைஷிகளின் குறைதீராப் பகை குறித்து அண்ணலார் அலட்சியமாக இருந்திடவில்லை. உம்ராவுக்குத்தான் புறப்பட்டார்கள் என்றாலும் போருக்கான ஆயத்தங்களையும் அண்ணலார் செய்தார்கள். 100 குதிரைகள்

பெருமானாரின் பிரார்த்தனையின் பலம்!

ஸஃபா மலைக்குன்றின் மேலிருந்து ஒரு சப்தம். ஆபத்திலிருக்கும் ஒருவர் உதவி கேட்டு கூக்குரலிடுவதைப்போல் அந்த சப்தம் வந்தது. மக்கள் காதைக் கூர்மையாக்கிக் கேட்டார்கள். அது முஹம்மத்தின் குரல். சொந்த பந்தங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மலைக்குன்றின் சரிவுக்கு வருமாறு அழைத்தார்கள். முஹம்மதுக்கு என்னவோ ஆபத்து வந்துள்ளது என்றெண்ணி அவர்கள் குன்றை நோக்கி ஓடி வந்தார்கள். உறவினர்கள் அனைவரும் வந்து கூடியபொழுது அண்ணலார் பேச ஆரம்பித்தார்கள்: “இந்தக் குன்றின் பின்னால் ஒரு படை

நவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்!

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக. உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” அதிகமதிகம் கேட்டு அறிமுகமான வசனங்கள்தான் இவை. இறக்கியருளப்பட்ட வரிசைப்படி பார்த்தால் இவைதான் ஆரம்ப இறைவசனங்கள். கல்வியின் துவக்க ஆண்டுகளில் இந்த வசனங்கள் ஓதப்பட்டு விளக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். பேனா, எழுத்துகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த

எதிரிகள் எல்லை மீறும்பொழுது…

புனித கஅபா ஆலயத்தில் தொழுகையில் ஆழ்ந்திருந்தார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அபூஜஹ்லும், அவன் கூட்டாளிகளும் இதனைக் கண்டனர். மற்றவர்களின் விசுவாசத்தைக் கேள்வி கேட்கும் முஹம்மத் பொது இடத்தில் எந்தவித அச்சமுமில்லாமல் தொழுகை நடத்துவதைக் கண்டு அவர்களுக்குப் பொறுக்கவில்லை. அபூஜஹ்ல் கூறினான்: “ஓர் ஒட்டகத்தின் குடலை எடுத்து வாருங்கள். அதைப் போட்டு முஹம்மதை நாம் மூட வேண்டும்.” உக்பா இப்னு அபீ முஐத் வேகமாக எழுந்து ஓடினான். பயங்கர நாற்றம் கொண்ட ஒரு

Top