You are here
Home > கட்டுரைகள் > பொது கட்டுரைகள் (Page 2)

போலீஸ் ஃபக்ருதீன் – மூன்று குறிப்புகள்!

அ. மார்க்ஸ் தேடப்பட்டு வந்த போலீஸ் ஃபக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முதலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்... நான்கு நாட்களாக நாளிதழ் தலைப்புகள் இவைதான். ஃபக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்து அச்சமூட்டப்படுகின்றன.

மனிதாபிமானமற்ற நாகரிக சமூகம் – எனது அனுபவம்!

ஒரு இரவு நேரத்தில் (10.30 மணி) என் நண்பர்களுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று ஒரு லேப்டாப், ஒரு மொபைல் போன், சில எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கிக் கொண்டு நாங்கள் தங்கி இருக்கும் அறைக்கு  திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் மூவரில் ஒரு நண்பர் சொன்னார். எனக்கு தெரிந்த நல்ல ஹோட்டல் அருகில் இருக்கிறது, அங்கு சென்று இரவு உணவை முடித்துவிட்டு செல்லலாமே என்றார். எங்களது கால்கள் ஹோட்டலை நோக்கி நகர ஆரம்பித்தன. ஹோட்டலில்

மீடியாக்களின் மோடி வித்தை!

இந்தியாவின்  14வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகளின் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இரண்டு தேசிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டு தேசிய கட்சிகள் இடையே பலத்த போட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  அத்வானியை முன்னிறுத்தி களமிறங்கிய பா.ஜ.க. படுதோல்வியடைந்தது. அத்வானியின் மூலம் தங்களுடைய கனவை

குழந்தைத் தொழிலாளர்கள்: அதிர்ச்சி தரும் ஐ.நா. அறிக்கை!

“என்னைப் போன்ற சிறுவர்களை விட்டு விடுங்கள். படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்” - இந்த வரிகள் நம்முடைய இதயங்களை கொள்ளை கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும். இப்பொழுது இந்த வரிகள் சிறுவர்களின் வாய்களிலிருந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள ஐ.நா.வின் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான அறிக்கை அதிர்ச்சியை அளிக்கிறது. உலகில் 16.8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஐ.நா. அதிர்ச்சி தரும் தகவல் வெளியிட்டுள்ளது. சிறார்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களுக்கு வருமானம் என்பது நிறுவனங்களுக்கு ஒரு

பெருமானாரின் பிரார்த்தனையின் பலம்!

ஸஃபா மலைக்குன்றின் மேலிருந்து ஒரு சப்தம். ஆபத்திலிருக்கும் ஒருவர் உதவி கேட்டு கூக்குரலிடுவதைப்போல் அந்த சப்தம் வந்தது. மக்கள் காதைக் கூர்மையாக்கிக் கேட்டார்கள். அது முஹம்மத்தின் குரல். சொந்த பந்தங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மலைக்குன்றின் சரிவுக்கு வருமாறு அழைத்தார்கள். முஹம்மதுக்கு என்னவோ ஆபத்து வந்துள்ளது என்றெண்ணி அவர்கள் குன்றை நோக்கி ஓடி வந்தார்கள். உறவினர்கள் அனைவரும் வந்து கூடியபொழுது அண்ணலார் பேச ஆரம்பித்தார்கள்: “இந்தக் குன்றின் பின்னால் ஒரு படை

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி: அழிவை நோக்கி இந்திய துணைக் கண்டம்??!!

லதீப் பாரூக் இந்தியாவில் லோக் சபா தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிற்கும் அளவுக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வளர்ந்து வந்திருக்கிறார். ஊழல் மலிந்த இந்திய அரசியல் அரங்கில் மோடியின் இந்த ஏற்றம் முன்னெப்போதும் இல்லாதது. ஏற்றுக் கொள்ளப்பட்ட விழுமியங்கள், கண்ணியம், பெறுமானங்கள் அனைத்தையும் எள்ளி நகையாடக் கூடியது. பாரதத்தின் சரித்திரப் பெருமையை இல்லாமலாக்கி விடக் கூடிய, நாசகார இந்துத்துவப் பாசிச சக்திகளிடம் இந்தியா

மோடியின் உண்மை நிலை! குஜராத்தில் பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி குமுறல்!

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்ட பின் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டார். "வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன்" என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம்: பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான்

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை!

செப்டம்பர்  14 உலக முதலுதவி தினம்! இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது. ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே “முதலுதவி” எனப்படும். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்  14ம் தேதியை “உலக

மீண்டும் வகுப்புவாத விஷப் பாம்புகள்!

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் கடந்த இரு தினங்களாக பரவி வரும் கலவரத்தில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பலரை காணவில்லை. பலருடைய வாழ்வாதாரங்கள் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்ற தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி தப்பிய பலருடைய நிலைமை என்னாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது நகர பகுதிகளில் துணை ராணுவப் படை மற்றும் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் கலவரம் ஓய்ந்து ஓரளவு அமைதியான

அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை!

"இந்தியாவின் முதுகெலும்பு விவ சாயம்தான்" என்றார் காந்தியடிகள். ஆனால் அந்த விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் இன்று இந்தியாவில் அதிகமாக தற்கொலை செய்து வருகிறார்கள். சமீபத்தில் வெளிவந்துள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியையும், இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 43 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், "நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக,

Top