You are here
Home > கட்டுரைகள் > கு​றுந்தொடர் > இனிக்கும் இல்லறம்

இனிக்கும் இல்லறம் – 13

ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவம்! “சலிப்பாக இருக்கு! ஒரு புதுமையும் இல்லை! என்னடா வாழ்க்கை இது?” - திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் பலரும் உள்ளுக்குள்ளேயே அலுத்துக்கொள்வார்கள். அல்லது தங்களது அங்கலாய்ப்பை பிறரிடம் வெளிப்படுத்துவார்கள். நம்மில் பலரும் கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறோம். திருமணப் பேச்சு எடுக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு சிலிர்ப்பு எல்லோருக்கும் உருவாகும். அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள், திருமணம், விருந்துகள், வைபோகங்கள், சுற்றுலா என திருமணம் முடிந்து முதல் சில

இனிக்கும் இல்லறம் -12

அவர் எவ்வளவு நல்ல கணவர்! இல்லற வாழ்வு இனிமை அடைய நாம் யாரிடம் முன்மாதிரியை தேடுவது? என்பதை ஆராய்ந்தால் இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை தவிர எவரும் பூரணமான நபர் அல்லர் என்ற முடிவுக்குத்தான் நாம் வருவோம். எவராலும் எட்டிப்பிடிக்க இயலாத அளவுக்கு இறைவனின் இறுதித் தூதரின் நடவடிக்கைகளும், நற்குணங்களும் அமைந்திருந்தன என்பதை வரலாற்று ஏடுகளில் நம்மால் காண இயலும். மனைவியருடனும், குழந்தைகளுடனும் அவர்கள் நடந்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில்

இனிக்கும் இல்லறம் -11

சந்தேகம் - இல்லறத்தின் சந்தோஷத்தையே கெடுக்கும் நோய். அன்பு, பாசம், அரவணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை இவற்றால் கட்டியெழுப்பிய இல்லறம் என்ற வீட்டில் சந்தேக நோய் புகுந்துவிட்டால் விபரீத விளைவுகளை உருவாக்கிவிடும். கணவன் - மனைவி இடையேயான நம்பிக்கைதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சந்தேகம் குறித்து ஒரு கதையின் ஊடே நாம் புரிந்துகொள்வோம். தன்ஸீரா-முஸஃபர் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான தம்பதியினர். அவர்களிடையே எழுந்த பிரச்சனையின் காரணத்தையும் அதற்கான தீர்வையும் பார்ப்போம். தன்ஸீரா கூறுகிறார்: ஆறுமாதம்

இனிக்கும் இல்லறம்-10

சற்று இடைவெளிக்கு பிறகு இனிக்கும் இல்லறம் தொடரில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! ஹம்னா பின்த் ஜஹ்ஷ் என்ற நபித்தோழி, உஹது போர்க்களத்தில் இருந்து திரும்பிய நபி(ஸல்...) அவர்களை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா(ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும்

இனிக்கும் இல்லறம்-9

இல்லறம் இனிமையாக அமைவதிலும், மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டி எழுப்புவதிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை (Give and Take Policy) மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கிறது. இதில் தம்பதியினர் இருவரின் புரிதல்கள் அல்லது உள்வாங்கல்கள் ஆதிக்கம் செலுத்துவதை காணலாம். குடும்பத்தில்  ஏதேனும் ஒரு விவகாரத்தில் இருவருக்கும் இடையே வெவ்வேறான புரிதல்கள் நிலவலாம். இதனால் இங்கே கருத்தொற்றுமை ஏற்படாத சூழல் உருவாகும். ஒரு விஷயத்தை குறித்து இருவரும் புரிந்துகொண்டது முரணாக இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக

இனிக்கும் இல்லறம் -8

இன்றைய சமூக சூழலில் குடும்பத்திற்கு அந்தஸ்தை பெற்று தரும் காரணியாக பொருளாதாரம் மாறிவிட்டது. ஏனெனில் இன்றைய வாழ்க்கைப் போராட்டங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஆகவே குடும்ப வாழ்விலும் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சர்யமில்லை. இல்லறத்தில் மகிழ்ச்சி தொடர வேண்டுமானால் அதன் பொருளாதார கட்டமைப்பு வலுவுள்ளதாக இருப்பதோடு, ஒழுங்காக பேணப்படுதல் வேண்டும். குடும்பத்தின் வரவுக்கு ஏற்றவாறு செலவுச் செய்யும் மனைவி அமைந்துவிட்டால் குடும்ப மகிழ்ச்சி நீடிக்கும். இல்லையெனில் அங்கு குழப்பம்

இனிக்கும் இல்லறம் -7

மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது எப்படி? ஒரு சமூகத்தில் தனிமனிதனுக்கு அடுத்த ரோலை வகிப்பது குடும்பங்கள் ஆகும். ஆகவே குடும்பத்தில் ஏற்படும் நேரான, எதிர்மறையான நடத்தைகள் அக்குடும்பம் சார்ந்திருக்கும் சமூகத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே, ஆண்-பெண் இருபாலரின் ஆளுமைத் தன்மைகள் இனங்காணப்படல் வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவனைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை தேடுபவனாகவும், மனைவியை பொறுத்தவரை அன்பை நேசிப்பவளாகவும் தங்களது இயற்கையான தன்மையை வெளிப்படுத்துகின்றனர். கணவனது தேடுதலும், மனைவியின் நேசித்தலும் ஆகிய இரு காரணிகளின்

இனிக்கும் இல்லறம்–6

அரபு மொழியில் வீட்டிற்கு 'மகான்' என்றதொரு பெயர் உண்டு. அதன் ஆழமான பொருள் அமைதி தவழும் இல்லம் என்பதாகும். செங்கற்களும், சிமெண்டும், மணலும் சேர்த்து அழகானதொரு வீட்டை கட்டினால் மட்டும் போதாது அந்த வீட்டில் வசிப்போர் இடையே அமைதி நிலவவேண்டும். அப்பொழுதுதான் அந்த இல்லம் அமைதி தவழும் இல்லமாக மாறும். லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து வீட்டை கட்டிவிட்டு அங்கே வசிப்போர் இடையே சண்டைச் சச்சரவுகள் நிலவி உறவுகள் சீர்கெட்டு குடும்பத்தில் அமைதி

இனிக்கும் இல்லறம் -5

கணவன்-மனைவி இவர்களுக்கான ரோல் என்ன? கணவன்-மனைவி இருவருக்குமே குடும்பத்தில் ஒரு ரோல் அல்ல பல ரோல்கள் காத்திருக்கின்றன. இது என்ன சீரியலா? சினிமாவா? ரோலைப் பற்றி பேசுகிறோம்! என உங்கள் மனதில் கேள்வி எழலாம்! ஆனால் குடும்பத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பல ரோல்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற நடிப்பு அல்ல. உண்மையிலேயே நீங்கள் உங்களது எதார்த்தமான நடிப்பை  வெளிப்படுத்துகின்றீர்கள்! பெற்றோருக்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக,

இனிக்கும் இல்லறம்-4

இளைஞர் ஒருவர் தனது திருமணப் பிரச்சனை தொடர்பாக கவுன்சலர் ஒருவரை அணுகினார். அவரது பிரச்சனையை குறித்து விசாரித்து அறிந்தார் கவுன்சலர். இளைஞர் தனக்கு பிடித்தமான பெண்ணொருத்தியை திருமணம் செய்ய விரும்புவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். தாயாருக்கோ அப்பெண்ணின் பாணியும், பண்பாடும் பிடிக்கவில்லை. எனவே அவரை திருமணம் புரிவதை தான் விரும்பவில்லை என இளைஞரிடம் கறாராக தெரிவித்துவிட்டார். இந்நிலையில்தான் அவ்விளைஞர் கவுன்சலரை அணுகி எவ்வாறு தனது திருமண விவகாரத்தில் தாயின் சம்மதத்தை

Top