விளையாட்டு

100 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்த ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி

Tuesday, May 15th, 2012
Champions Real Madrid beat Mallorca 4-1 to break the 100-point

மாண்ரிட்:லா லிகா கால்பந்து போட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றதோடு, 100 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி. ஸ்பெயினில் நடைபெற்ற LA LIGA கால்பந்துப் போட்டியின் இறுதிகட்ட ஆட்டம் ஒன்றில், ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி, மால்லோர்கா (MALLORCA) அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி, 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி [...]

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி கிரீஸில் ஏற்றப்பட்டது!

Thursday, May 10th, 2012
London torch lit in ancient Olympia

ஒலிம்பியா:27வது ஒலிம்பிக் போட்டி தொடருக்கான ஜோதி இன்று கிரீஸில் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் ஜோதி கிரீஸிலிருந்து ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கும் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஒலிம்பியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி,பல நாடுகள் வழியாக 78 நாட்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படும். நீச்சல் போட்டியில் உலக சாம்பியனான கிரீஸ் வீரர் ஸ்பைராஸ் ஜியானியோடிஸ் (Spyros Gianniotis) இந்த ஜோதியை முதல் முறையாக ஏந்தியுள்ளார். இவரை அடுத்து லண்டன் வீரர் இந்த ஓட்டத்தை [...]

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தீபிகா

Sunday, May 6th, 2012
Deepika Kumari wins first World Cup title

துருக்கி/அந்தால்யா:உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். துருக்கியின் அந்தால்யா நகரில் இன்று மகளிர் ரிகர்வ் தனி நபர் பிரிவின் இறுதிச் சுற்றில், இந்திய வீராங்கனை தீபிகாவும், தென் கொரியாவின் லீ சங் ஜின்-னும் மோதினார். இப்போட்டியில் முதல் (27-30) மற்றும் மூன்றாவது (27-29) செட்டை இழந்த தீபிகா, இரண்டாவது (29-27), நான்காவது (27-26) மற்றும் ஐந்தாவது (28-27) சுற்றுகளில் வென்று, தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி [...]

50 ஓவர் மினி உலக கோப்பைக்கு முழுக்கு – ஐசிசி

Thursday, April 19th, 2012
Champions Trophy Cricket

துபாய்:மினி உலகக் கோப்பை என்றழைக்கப்பட்ட 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் போட்டிட்யை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர சர்வதேச  கிரிக்கெட் வாரியமான ஐசிசி முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என ஒவ்வொரு  போட்டிக்கும் ஒரே சாம்பியன்ஸ் டிராபிதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மினி  உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன் டிராபியை கைவிட ஐசிசி முடிவு  செய்துள்ளது. 2017-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டி [...]

2014-ல் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 16 அணிகள்

Tuesday, April 17th, 2012
ICC to expand 2014 World T20 to 16 teams

துபாய்:20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகள் 12 -லிருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2014-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் இடம் பெறும். துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதவிர சர்வதேச அளவில் கூடுதலாக 20 ஓவர் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கவும் ஐசிசி முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் மூலம் ஓர் [...]

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீரர் விஜேந்தர் தகுதி

Monday, April 9th, 2012
Boxer Vijender Singh books Olympic berth

புதுடெல்லி:லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார், இந்திய வீரர் விஜேந்தர் சிங். கசகஸ்தானில் இன்று ஆசிய ஒலிம்பிக் தகுதித் தொடரில், விஜேந்தர் 75 கிலோ எடைப் பிரிவில், மங்கோலியாவின் சுலுன்டுமுர் துமுர்குயாக் என்ற வீரரை 27-17 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், லண்டனில் வரும் ஜூலையில் தொடங்கவுள்ள ஒலிம்பிக்குக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த விஜேந்தர், கடந்த ஆண்டு லண்டனில் நடந்த [...]

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன்: இரட்டையர் பிரிவில் பயஸுக்கு 50வது பட்டம்!

Sunday, April 1st, 2012
Paes hits a half-century with Miami doubles title win

புளோரிடா/மியாமி:அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்ற மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபனாக் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இது, இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் வென்றுள்ள 50வது சாம்பியன் பட்டம் என்பது சிறப்புக்குரியது. இதன்மூலம், ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் 50 பட்டங்கள் வென்ற 24-வது வீரர் என்ற பெருமையையும் லியாண்டர் பயஸ் பெற்றார். மியாமி மாஸ்டர் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் [...]

ஜோகன்னஸ்பர்க் டுவென்டி-20 – மழையின் குறுக்கீட்டால் இந்தியா தோல்வி

Saturday, March 31st, 2012
prv_20120330_1918_15297

ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி-20′ போட்டியில் குறுக்கிட்ட மழை இந்திய அணிக்கு வினையாக அமைந்தது. டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் [...]

ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா இடையே டிவெண்டி-20 கிரிக்கெட் போட்டி

Friday, March 30th, 2012
india-vs-south-africa-t20-match

ஜோகன்ஸ்பெர்க்:தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான ஒரு டிவெண்டி-20 போட்டியில் இன்று பங்கேற்கிறது. ஜோகன்ஸ்பெர்க்ல் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. அண்மையில், நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட டிவெண்டி-20 தொடரை 2-க்கு 1 என வென்றுள்ளது. எனவே, ஜோகன் போத்தா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. [...]

சேம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பார்ஸிலோனா-எ.சி.மிலன் அணிகளுக்கிடையேயான காலிறுதி போட்டி டிரா

Thursday, March 29th, 2012
AC milan Vs Barcelona

இத்தாலி/மிலன்:சேம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பார்ஸிலோனா-எ.சி. மிலன் அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் கோல் போடாததால் டிராவில் முடித்தது. சேம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தான் கலந்து கொண்ட 30 போட்டிகளில் இந்த போட்டியில் எந்த ஒரு கோலும் அடிக்காமல் பார்ஸிலோனா அணி களத்தை விட்டு வெளியேறியது. ஐரோப்பாவின் மிகப் பெரும் அணிகளான எ.சி. மிலன் அணியும் பார்ஸிலோனா அணியும் ஒரு கோல் கூட அடிக்காமல் வெளியில் வந்தது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன. ஆட்டத்தின் ஆரம்பத்தில் [...]

20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆஃப்கான், அயர்லாந்து அணிகள் தகுதி

Monday, March 26th, 2012
William-Porterfield-and-Naw

துபாய்:20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. 12 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகள் இந்த போட்டியில் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்ய தகுதி சுற்று போட்டி துபாய், அபுதாயில் நடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து [...]

ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம்: பரப்பான இறுதி ஆட்டதில் பங்களாதேஷை வீழ்த்தியது பாக்.

Friday, March 23rd, 2012
Asia Cup 2012

டாக்கா:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் கோப்பையை வென்றுள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், [...]

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் வங்கதேசம் பாகிஸ்தானை வீழ்த்துமா?

Thursday, March 22nd, 2012
Asia cup 2012 final pak vs ban

டாக்கா:ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இன்று பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் சொந்த மண்ணில் சாதித்து முதன் முறையாக கோப்பையை வெல்ல வங்கதேசம் காத்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் 11வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிர்புரில் நடக்கிறது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் வெளியேறி விட்டன. இதனையடுத்து இன்று நடக்கும் இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் அணி, முதன் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வங்கதேச [...]

வங்கதேச அணி அபார வெற்றி: இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்

Tuesday, March 20th, 2012
143790.2

மிர்பூர்:டாக்காவில் நடக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளதுடன், இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் இலங்கையை பேட் செய்ய பனித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வங்கதேச அணி வெற்றி பெற [...]

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: கடைசி லீக் போட்டியில் இலங்கை-வங்கதேசம் மோதல்

Tuesday, March 20th, 2012
asia cup

டாக்கா:ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த லீக் போட்டிகளின் படி பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அடுத்த இரு இடங்களில் இந்தியா(8), வங்கதேச(4) அணிகள் உள்ளன. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 290 ரன்கள் என்ற [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா – கோஹ்லி அபார சதம்!

Monday, March 19th, 2012
கோஹ்லி அபார சதம்

டாக்கா:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹபீஸ் 105 ரன்களையும், ஜம்ஷத் 112 ரன்களையும் அடித்து பாகிஸ்தான் அணிக்கு வலுவான அடிதளத்தை அமைத்தனர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. அதன் பின் வந்த யூனிஸ்கானின் அதிரடி அரை சதம் காரணமாக பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 329 ரன்களை [...]

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

Sunday, March 18th, 2012

டாக்கா: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. நேற்று நடந்த நான்காவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 289 ரன்கல் எடுத்தும் வங்கதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றது. வங்கதேசத்திடம் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் போனஸ் புள்ளியுடன் அந்த அணி வெற்றி [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட் பங்களாதேஷ் அபார வெற்றி – பலனளிக்காத சச்சினின் 100 வது சதம்

Friday, March 16th, 2012
Sachin gets 100th ton, India lose

டாக்கா:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் இப்போட்டியில் 114 ரன்களை எடுத்தார். விராத் ஹோலி 66 ரன்களையும், ரெய்னா 51 ரன்களையும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஒவர் முடிவில் [...]

ஆசியக் கோப்பை:இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

Friday, March 16th, 2012
ஆசியக் கோப்பை இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

டாக்கா:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான். டாக்காவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 45.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 39.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம் இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பை பெற்றது பாகிஸ்தான். தொடர்ச்சியாக 2 [...]

ஆசிய கோப்பை:இன்று இலங்கையுடன் பாகிஸ்தான் மோதல்

Thursday, March 15th, 2012
Pakistan vs Sri Lanka

டாக்கா:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இலங்கை களமிறங்குகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா ஒரு லீக் போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளியுடன் முதல் இரு இடத்தில் உள்ளன. இன்றைய லீக் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் [...]

ஆசியக் கோப்பை:இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Tuesday, March 13th, 2012
இலங்கையுடன் நடந்த போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

டாக்கா:பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சார்பில் கம்பீர் மற்றும் விராத் ஹோலி ஜோடி சிறப்பாக  விளையாடியதால் இந்தியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களை பெற்றது. ஹோலி 108 ரன்களும் காம்பீர் 100 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். கேப்டன் தோனி 46 [...]

ஆசிய கோப்பை:இன்று இலங்கையுடன் இந்தியா மோதல்

Tuesday, March 13th, 2012
Asia-Cup-2012

டாக்கா:இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. நேற்றைய தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 21 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. ஆசிய கோப்பை போட்டியின் 2-வது லீக் ஆட்டம் டாக்காவில் இன்று (13-ந்தேதி) நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த 3 நாடுகள் போட்டியில் இறுதி [...]

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா சாம்பியன்!

Thursday, March 8th, 2012
முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா சாம்பியன்!

அடிலெய்ட்:ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இன்று நடைபெற்ற மூன்றாவது இறுதியாட்டத்தில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முன்னதாக இரு அணிகளும் மூன்று இறுதிப் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருந்தன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 231 [...]

முத்தரப்பு ஒருநாள் போட்டி: இரண்டாவது இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Tuesday, March 6th, 2012
Dilshan

அடிலெய்ட்:ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இலங்கை. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்தது. அந்த அணியின் வார்னர் 100 ரன்களையும், கேப்டன் கிளார்க் 117  ரன்களையும் எடுத்தனர். 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சிறப்பாக விளையாடியாது. தில்ஷான் 106 ரன்களும் [...]

முத்தரப்பு ஒருநாள் போட்டி: முதல் இறுதிப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Sunday, March 4th, 2012
Aus Vs Sri

பிரிஸ்பேன்:பிரிஸ்பேனில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள்  கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் இறுதிப் போட்டியில் இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை எடுத்தது. அந்த அணியின் டி.வார்னர் அதிகபட்சமாக 163 ரன்களை எடுத்தார். பின்னர் 322 ரன்கள் என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் [...]