உலகம்

கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!

Friday, May 18th, 2012
thejas

தோஹா:உலக நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப் பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது. மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ் வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு உணர்த்துகிறது. கத்தரின் அரசு பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்ஃப் தேஜஸின் நான்காவது பதிப்பின் வெளியீடு துவக்கப்பட்டது. தோஹா நகரின் தாரிக் இப்னு ஸியாத் இண்டிபெண்டண்ட் [...]

போஸ்னியா இனப்படுகொலை: மிலாடிச் மீதான விசாரணை துவங்கியது!

Thursday, May 17th, 2012
Mladic goes on trial, charged with genocide in Bosnia war

த ஹேக்:போஸ்னியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பிற்கு தலைமை வகித்த ராட்கோ மிலாடிச் மீதான விசாரணை த ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்(ஐ.சி.சி)துவங்கியது. பழைய யூகோஸ்லாவியாவுக்காக தனியாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயம் முன்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று  வழக்கு பற்றிய ஒலி-ஒளி விவரணப் பதிவொன்றை வெளியிட்டனர். கைது செய்யப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிவுறும் வேளையில் முன்னாள் செர்பியா ராணுவ தலைமை தளபதி மீதான விசாரணை துவங்கியுள்ளது. போர்க்குற்றம், மனித இனத்திற்கு எதிரான குற்றம் உள்பட 11 [...]

இறந்த உடலின் அடியில் படுத்துக்கொண்டு ப்ரெவிக்கின் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பினேன்!

Thursday, May 17th, 2012
Survivor 'hid under dead bodies'

ஓஸ்லோ:நார்வே நாட்டின் உட்டோயா தீவில் ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டாக்களில் இருந்து இறந்த உடலில் கீழே படுத்திருந்து தப்பியதாக அச்சம்பவத்தில் உயிர் தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ப்ரெவிக்கிடம் விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்றத்தில் 17 வயதான இங்வில்ட்லாரின் தனது பீதி நிறைந்த அனுபவத்தை விவரித்தார். ப்ரெவிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய உடன் தனது மீது கிடந்த இளம்பெண்ணின் மொபைலை எடுத்து எமர்ஜென்சி பிரிவை தொடர்புகொள்ள முயற்சித்ததாக அவர் கூறினார். மேலும் அவர் கூறியது:மொபைல் ஃபோன் [...]

புஷ் நிரபராதிகளை சித்திரவதைச் செய்தார், ஒபாமா கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்துகிறார் – நோம் சோம்ஸ்கி!

Thursday, May 17th, 2012
Chomsky- Bush kidnapped & tortured, Obama murders

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் பிரபல அமெரிக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான நோம் சோம்ஸ்கி. ஆஃப்கானிஸ்தானிலும், யெமனிலும் அமெரிக்க ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல்களை கடுமையாக கண்டித்த சோம்ஸ்கி, புஷ் அரசு நிரபராதிகளை சித்திரவதைச் செய்து கடத்திய பொழுது, ஒபாமா மக்களை கொன்றொழித்து வருகிறார் என குற்றம் சாட்டுகிறார். புஷ்ஷிற்கு எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் கடத்திச்சென்று சிறைக்கூடங்களில் வைத்து சித்திரவதைச் செய்வார். ஒபாமாவோ, [...]

சிரியாவில் 15 சிவிலியன்கள் படுகொலை: ராணுவம் அட்டூழியம்!

Thursday, May 17th, 2012
15 civilians 'summarily executed' in Syria

பெய்ரூத்:வடக்கு சிரியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் 21 க்கும் மேற்பட்ட மக்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ஸம்மாஸ் நகரில் 15 சிவிலியன்களை ராணுவம் கொலைச் செய்துள்ளது. ஐ.நா கண்காணிப்புக் குழுவைச் சார்ந்த 4 பேர் எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பில் உள்ளனர். தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ராய்ட்டர் செய்தி நிறுவன பிரதிநிதிகளிடம், தாங்கள் சிறைவைக்கப்படவில்லை என்றும், ஃப்ரீ சிரியா ஆர்மியின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ‘ஐ.நா கண்காணிப்பாளர்கள் தற்பொழுது ஃப்ரீ சிரியா ஆர்மியின் பாதுகாப்பில் உள்ளனர். ராணுவம் [...]

மேற்கத்தியர்களின் ஈரானுடனான அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் – ஈரான்!

Wednesday, May 16th, 2012
West should respect Iranian nation Ahmadinejad

டெஹ்ரான்:ஈரானுடனான அணுகுமுறை மற்றும் நடத்தையை மேம்படுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக வேண்டும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். வருகிற மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகச்சிறந்த பலன் கிடைக்க வேண்டுமானால் அணுகுமுறையை மேற்கத்திய நாடுகள் மேம்படுத்த வேண்டும் என நஜாத் தெரிவித்தார். கூமான் நகரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு நஜாத் உரை நிகழ்த்தினார். அமைதியான காரணங்களுக்கு அணுசக்தியை உபயோகிப்பதற்கான உரிமையை ஈரான் மக்கள் கடுகு அளவும் விட்டுக் [...]

நக்பா நினைவில் ஃபலஸ்தீன் மக்கள்!

Wednesday, May 16th, 2012
Palestinians Mark Nakba Day

காஸ்ஸா/ராமல்லா:பிறந்த மண்ணில் இருந்து உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட துயர நிகழ்வின் 64-வது நினைவு தினத்தை(நக்பா) ஃபலஸ்தீன் மக்கள் அனுஷ்டித்தனர். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற யூத சியோனிச அரசு முஸ்லிம்களின் புண்ணியஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் மண்ணில் ஏகாதிபத்திய சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நிறுவப்பட்டதன் மரணிக்காத நினைவலைகளை ஃபலஸ்தீன் மக்கள் தலைமுறைகளுக்கு பகிர்ந்து வருகின்றார்கள். கடந்த ஆண்டு இதே தினத்தில் சிரியா மற்றும் லெபனானில் இருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கூட்டுப் படுகொலைச் செய்தது. [...]

ஸஆதத் ஹஸன் மன்டோ!

Wednesday, May 16th, 2012
Saadat Hasan Manto

லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கும், புலன்பெயர்வுக்கும் காரணமான இந்திய பிரிவினை ஏன் மகத்தான இலக்கியங்களை உருவாக்கும் கருவாக மாறவில்லை? என்ற கேள்வி பல வேளைகளின் நம் மனங்களில் எழுவதுண்டு. வரலாற்றாய்வாளர்களும் நுட்பமாக பிரிவினையின் சமூக-கலாச்சார எதிர்விளைவுகளை குறித்து ஆராயவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு என்பதால் அது குறித்து ஆராய்ச்சிகள் நடக்காமல் இருந்திருக்கலாம். எவ்வகையான பிரிவினையும், புலன்பெயர்வும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறது. நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் உருது இலக்கியவாதி ஸஆதத் ஹஸன் மன்டோவின் நாவல்களும், சிறுகதைகளும் [...]

அணுவிஞ்ஞானி கொலை: மொஸாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றம்!

Wednesday, May 16th, 2012
Majid Jamali Fashi, the main suspect in the assassination of the nuclear scientist Masoud Ali Mohammadi, speaks during his trial at Tehran's Revolutionary Court

டெஹ்ரான்:மூத்த ஈரான் அணு விஞ்ஞானியைக் கொலைச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மொஸாத் ஏஜண்ட் மாஜித் ஜமலி ஃபாஷிக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனை தலைநகர் டெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈரான் அணு விஞ்ஞானி மஸூத் அலி முஹம்மதியை கொலைச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபாஷி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மரணத்தண்டனை விதித்தது. ஃபாஷிக்கு, இஸ்ரேலில் வைத்து மொஸாதின் பயிற்சியும், ஈரான் அணு விஞ்ஞானியைக் கொலைச் [...]

அமெரிக்காவுக்கு அடிபணியும் இந்தியா, ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு!

Wednesday, May 16th, 2012
India's plan to cut Iran oil is likely to ease US pressure

புதுடெல்லி:ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா படிப்படியாகக் குறைத்து வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்துள்ள பதில் மூலம் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்படுவது தெரியவந்துள்ளது. ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடாவடித்தனமாக அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதித்திருப்பதுடன், பிற நாடுகளையும் தங்களுடன் பங்குசேர நிர்பந்தித்து வருகின்றன. கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகைத் தந்திருந்த அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டனும் இதுப்பற்றி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் [...]

லிபியாவில் சிவிலியன் படுகொலையை மூடி மறைத்த நேட்டோ!

Tuesday, May 15th, 2012
NATO urged to probe 72 Libyan civilian deaths

திரிபோலி:லிபியாவில் முஅம்மர் கடாஃபியின் அரசுக்கு எதிராக நடத்திய ராணுவ தாக்குதலின்போது நிகழ்ந்த சிவிலியன் கூட்டுப் படுகொலைகளை நேட்டோ படை மூடி மறைத்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சிவிலியன்கள் வசித்த பகுதிகளில் ஏற்பட்ட இழப்புகளைக் குறித்து பரிசோதிக்க நேட்டோ தயாராகவில்லை என்றும், சிவிலியன்கள் கொலைச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த நேட்டோ தயாராகவேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வலியுறுத்தியுள்ளது. லிபியாவின் ராணுவ மையங்கள் மீது மட்டுமே [...]

ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு!

Tuesday, May 15th, 2012
Palestinian Prisoners to End Hunger Strike

டெல்அவீவ்:இஸ்ரேல் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஃபலஸ்தீன் கைதிகள் தங்களது போராட்டத்தை முடித்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கும், இஸ்ரேல் சிறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டதாக ஃபலஸ்தீன் சிறைத் துறை அமைச்சர் இஸ்ஸா கராக் அறிவித்துள்ளார். அதேவேளையில், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டது குறித்து கூடுதல் விபரங்களை அவர் அளிக்கவில்லை. ஃபலஸ்தீன் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டதை இஸ்ரேல் சிறைத்துறை உறுதிச்செய்துள்ளது. [...]

அபுதாபியில் நடைபெற்ற “கல்வியின் மூலம் சக்திப்படுத்துதல்” கலந்துரையாடல் நிகழ்ச்சி

Monday, May 14th, 2012
EIFF-Empowerment Through Education

அபுதாபி:Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த “கல்வியின் மூலம் சக்திப்படுத்துதல்” (Empowerment Through Education) என்ற கலந்துரையாடல் (TABLE TALK) நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி சனிக்கிழமை அன்று அமீரகத் தலைநகரமான அபுதாபியில் சிறப்பாக நடைபெற்றது. சரியாக மாலை 7.45 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. ஜுனைத் அவர்கள். அதன் பின்னர் சகோ. முனவ்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கினார். பின்னர் “இஸ்லாமியப் பார்வையில் நேர [...]

ஹாஃபிஸ் ஸயீதை கைதுசெய்ய ஆதாரம் இல்லை – கிலானி!

Monday, May 14th, 2012
Gilani

லண்டன்:லஷ்கர் -இ -தய்யிபாவின் ஸ்தாபகர் என கூறப்படும் ஹாஃபிஸ் ஸயீதை மும்பை தாக்குதலின் பேரில் கைதுசெய்ய போதிய ஆதாரம் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி கூறியுள்ளார். தற்போதைய சூழலில் ஸயீதை கைதுசெய்தால் ஆதாரமில்லாததால் அவர் எளிதாக தப்பிவிடுவார். லண்டனில் டெய்லி டெலிக்ராஃப் பத்திரிகைக்கு பேட்டி அளிக்கையில் கிலானி இவ்வாறு கூறினார். ஸயீதின் தலைக்கு அமெரிக்கா ஒரு கோடி டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அல்காயிதா தலைவர் அய்மன் அல் ழவாஹிரி பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக தான் [...]

பங்களாதேஷ்:இஸ்லாமிய இயக்க தலைவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

Monday, May 14th, 2012
Mr Azam is one of the most high profile Jamaat-e-Islami leaders

டாக்கா:1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்ட காலத்தில் போர் குற்றம் உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டி பங்களாதேஷின் இஸ்லாமிய இயக்க தலைவர் குலாம் ஆஸம் மீது சிறப்பு தீர்ப்பாயம் குற்றச்சாட்டை பதிவுச்செய்துள்ளது. ஒன்பது மாதங்களாக நீண்ட போரில் சித்திரவதை, கொலை உள்ளிட்ட ஏராளமான குற்றங்களை 89 வயதான ஆஸம் புரிந்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். இதனை மறுத்த ஆஸம், இவ்வழக்கு அரசியல் தூண்டுதல் என தெரிவித்தார். 2010-ம் ஆண்டு நிறுவப்பட்ட பிறகு தீர்ப்பாயம், [...]

எகிப்து:கீழ் நீதிமன்ற உத்தரவு ரத்து: தேர்தல் தேதியில் மாற்றமில்லை!

Monday, May 14th, 2012
Egypt court says no change to election

கெய்ரோ:அதிபர் தேர்தலில் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச்செய்த எகிப்தின் அரசியல் சாசன நீதிமன்றம், நிச்சயிக்கப்பட்ட தேதிகளில் அதிபர் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. நைல் டெல்டாவின் பென்ஹா நீதிமன்றம் இம்மாதம் 23,24 தேதிகளில் எகிப்து அதிபர் தேர்தலை ரத்துச்செய்து உத்தரவிட்டது. தேர்தல் கமிஷன் தலைவர் தனது அதிகார எல்லையை மீறி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை ரத்துச்செய்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட சட்டரீதியான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை. அதிபர் தேர்தலுக்கு [...]

ஃபலஸ்தீன்:பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதம்!

Monday, May 14th, 2012
palestine prisioner hunger strike

கெய்ரோ:வழக்குகள் பதிவுச் செய்யாமல், விசாரணை மேற்கொள்ளப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் 1500 ஃபலஸ்தீன் கைதிகளுக்கும் இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை துவங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. எகிப்து மத்தியஸ்தம் வகிக்க, இப்பேச்சுவார்த்தை துவங்கும் என கருதப்படுகிறது. இதுத்தொடர்பாக எகிப்து பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இது நம்பிக்கைக்கு வழிவகைச் செய்வதாக ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் ஹமாஸின் இஸ்மாயில் ஹானிய்யா கூறியுள்ளார். இப்பேச்சுவார்த்தை சிறைக் கைதிகளின் [...]

ஸ்தம்பித்தது ஸ்பெயின்! மாண்ட்ரிடில் துவங்கிய மக்கள் திரள் போராட்டம்!

Sunday, May 13th, 2012
crisis-hold-protest

மாண்ட்ரிட்:பொருளாதார சிக்கலில் சிக்கித்தவித்து வரும் ஸ்பெயின் அரசு திவால் ஆவதிலிருந்து தப்பிக்க பல்வேறு கடுமையான பொருளாதார சீர்திருத்த மற்றும் சிக்கன நடவடிக்கைகளை கடந்த ஓர் ஆண்டாக மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது நிலவிவரும் நிதி சிக்கலுக்கு அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என அந்நாட்டு மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர். மக்கள் நலன் கருதி ஆட்சி செய்யாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களை வாட்டிவதைத்து வருவதாக அவர்கள் அரசின் மீது குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில் [...]

பஹ்ரைனுக்கு ஆயுத விற்பனை:அமெரிக்கா மீண்டும் துவக்கம்!

Sunday, May 13th, 2012
US restarts Bahrain arms sales

வாஷிங்டன்:ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியவர்களை அடக்கி ஒடுக்கியதைத் தொடர்ந்து ரத்துச்செய்த பஹ்ரனைனுடனான ஆயுத விற்பனையை அமெரிக்கா மீண்டும் துவக்கியுள்ளது. அதேவேளையில் பஹ்ரைனில் மனிதஉரிமை தொடர்பான பிரச்சனைகள் நீடிப்பதாகவும், வெளிநாட்டு தாக்குதல்களை தடுக்கவே தற்பொழுது ஆயுத விற்பனையை மட்டும் நடத்துவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க கடற்படை தளம் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனில் மட்டுமே உள்ளது. நவீன எஞ்சின்கள், கடலோர காவல் படைக்கான படகுகள் ஆகியன பஹ்ரைனுக்கு விற்பனைச் செய்வதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் [...]

சிகிட்சை முடிந்தது:சாவேஸ் நாடு திரும்பினார்!

Sunday, May 13th, 2012
Chavez Back in Venezuela After Cancer Treatment in Cuba

கராக்கஸ்:புற்றுநோய பாதிக்கப்பட்ட வெனிசுலா நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் கியூபாவில் சிகிட்சையை முடித்துவிட்டு நாடு திரும்பினார். கியூபாவில் 11 தினங்கள் ரேடியேசன் தெரப்பிக்கு பிறகு அவர் நாடு திரும்பியுள்ளார். தலைநகரான கராக்கஸ் விமானநிலையத்தில் சாவேஸை வரவேற்க துணை அதிபர் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய பிரமுகர்கள் குழுமியிருந்தனர். ரேடியேசன் சிகிட்சையை வெற்றிக்கரமாக முடிந்ததாக கூறிய சாவேஸ் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்பு பாடலை பாடிதான் உற்சாகமாக இருப்பதாக உணர்த்தினார். சாவேஸின் உடலில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ட்யூமர் கடந்த ஆண்டு ஜூன் [...]

இஸ்ரேலின் எப்பகுதியிலும் தாக்குதல் நடத்த எங்களால் இயலும்!-ஹஸன் நஸ்ருல்லாஹ்!

Sunday, May 13th, 2012
Hizbullah can hit every target in  Nasrallah

பெய்ரூத்:இஸ்ரேலின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த தங்களால் இயலும் என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெற்கு பெய்ரூத்தில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மத்தியில் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது. அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது:டெல் அவீவ் மட்டுமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் குறிப்பிட்ட இலக்குகளில் இறைவனின் கிருபையால் தாக்குதல் நடத்தமுடியும். சிரியாவில் பயங்கரவாத சூழல் உருவாக்கியதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன. ஃபலஸ்தீனிலும், லெபனானிலும் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதால் சிரியாவில் [...]

போர் குற்றம்:புஷ் குற்றவாளி – மலேசிய தீர்ப்பாயம்!

Sunday, May 13th, 2012
Bush found guilty of war crimes

கோலாலம்பூர்:போர் குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ் குற்றவாளி என்று மலேசியாவின் அடையாள தீர்ப்பாயம் கூறியுள்ளது. ஈராக்கிலும், குவாண்டனாமோவிலும் உள்ள அமெரிக்காவின் சித்திரவதை சிறைக் கூடங்களில் கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கோலாலம்பூர் போர்க்குற்ற அடையாள தீர்ப்பாயம் புஷ்ஷை குற்றவாளி என தீர்ப்பாயம் கண்டறிந்தது. ஏகமனதாக புஷ்ஷை குற்றவாளி என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. புஷ்ஷுடன் அன்றைய அமெரிக்க துணை அதிபர் டிக்செனி, பாதுகாப்பு அமைச்சர் ரெனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகியோரும் [...]

4500 கிலோ மீட்டர் நடந்தே சென்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு

Saturday, May 12th, 2012
haj team

குலாப்/தஜிகிஸ்தான் முன்னாள் தடகள வீரர் அப்துல் அஜீஸ் ராஜபோவ்(60) தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நடைபயண குழு முஸ்லிம்களின் இறுதி கடமையான ஹஜ்ஜை நடந்து சென்று  மேற்கொள்ள திட்டமிட்டு பயணத்தைத் துவக்கியுள்ளன. நான்காயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தூரத்தையும் எட்டு நாடுகளின் எல்லைகளையும் கடக்க வேண்டிய இப்பயணத்தில் பங்குப்  பெற்றுள்ளவர்களில் அப்துல் அஜீஸ் ராஜபோவ் தவிர மற்ற அனைவரும் முதல் முறையாக நடைபயணம் மூலம் ஹஜ் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்துல் அஜீஸ் ராஜபோவ் உட்பட [...]

அல்ஜீரியா தேர்தல்: ஆளுங்கட்சி முன்னணி!

Saturday, May 12th, 2012
Algeria's ruling party

அல்ஜியர்ஸ்:அல்ஜீரியன் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் முதல் கட்ட முடிவுகள் வெளிவந்தபொழுது ஆளுங்கட்சியான நேசனல் லிபரேசன் ஃப்ரண்ட்(எஃப்.எல்.என்) முன்னணியில் உள்ளது. 462 இடங்களுக்கு நடந்த தேர்தலில் எஃ.எல்.என் 189 இடங்களை கைப்பற்றியதாக கட்சி தலைவர் அப்துல் அஸீஸ் பில்காதிம் அல் அரேபிய்யா சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கட்சியான பசுமை கூட்டணியும் கூடுதல் இடங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவில் 42.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இறுதி முடிவுகள் பின்னர் வெளியாகும். அதிபர் அப்துல் [...]

சோமாலியாவில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்: 38 பேர் மரணம்!

Saturday, May 12th, 2012
US drone strike kills 38, injures dozens in Somalia

மொகாதிஷு:தென்மேற்கு சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய அடாவடி ஆளில்லா விமானத்தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். ஹூன் நகரத்தில் படோடெவில் ரிமோட் கண்ட்ரோலை உபயோகித்து ஆளில்லா(ட்ரோன்) விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஷபாப் போராளிகள் கூறுகின்றனர். போராளிகளை குறிவைத்து சி.ஐ.ஏ திட்டமிட்டு கொடுத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களில் கொலைச் செய்யப்படுவது பெரும்பாலும் அப்பாவி மக்கள் ஆவர். ட்ரோன் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவையாகும்.