இந்தியா
Friday, May 18th, 2012
புதுடெல்லி:காவல்துறையினர் பதிவுச்செய்யும் மரண வாக்குமூலம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மஹராஷ்ட்ரா மாநிலத்தைச் சார்ந்த சலீம் குலாப் என்பவர் தனது மனைவி நஷாபீயை எரித்துக் கொலைச் செய்ததாக குற்றம் சாட்டி அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் மேல்முறையீடு செய்திருந்தார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், போலீஸ் காவலர் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாகக் [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Friday, May 18th, 2012
புதுடெல்லி:ஹைடெக் யோகா குருவும், குறுகிய காலத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணத்தை குவித்து விட்டு கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் கேலிக்கூத்தை நடத்துபவருமான பாபா ராம்தேவின் அறக்கட்டளைகளுக்கு அளித்து வந்த வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்துச்செய்துள்ளது. ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் ரூ.58 கோடியை வரியாக செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி யோகபீடம், திவ்ய யோக மந்திர், பாரத சுவாபிமான் ஆகிய அறக்கட்டளைகளுக்கு வருமான வரித்துறை இந்த நோட்டீûஸ [...]
Posted in இந்தியா, செய்திகள் | 1 Comment »
Friday, May 18th, 2012
புதுடெல்லி:மேற்கு வங்காள மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம்(என்.சி.டபிள்யூ) தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மமதா சர்மா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று(வியாழக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியது: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசின் கீழ் இந்த வன்முறை அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த இரு மாதங்களில் இது மேலும் கூடியுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Friday, May 18th, 2012
புதுடெல்லி:இந்தியாவில் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. இத்தகவலை சமூகநீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் மாநிலங்களவையில் தெரிவித்தார். இத்தகைய வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த தற்போதைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். 1989-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தொடர்புடைய மாநிலங்களின் கருத்துக்களை ஆராய அம்மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Thursday, May 17th, 2012
நாக்பூர்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட கிடையாது என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்னா ஹஸாரே கூறியது: ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஒருபோதும் நாடியது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட கிடையாது.ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு மோகன் பாகவத் ஆதரவு அளிப்பதாக அறிவிக்க கூடாது. ஊழல் புரிந்துள்ள 14 அமைச்சர்களுக்கு எதிராக [...]
Posted in இந்தியா, செய்திகள் | 1 Comment »
Thursday, May 17th, 2012
சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது. தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி. ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு [...]
Posted in இந்தியா, செய்திகள் | 2 Comments »
Thursday, May 17th, 2012
புதுடெல்லி:ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்கின் இந்திய சுற்றுப்பயணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் எதிர்ப்பு மூலம் நடைபெறவில்லை. பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மாதம் ‘டிஃபெக்ஸ்போ’ என்ற பெயரில் டெல்லியில் ஏற்பாடுச்செய்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறும் வேளையில் இஸ்ரேல் அமைச்சரின் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு வர தயாராக இருந்தனர். தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி சர்ச்சை, தரைப்படையின் ஒரு பிரிவு டெல்லியை நோக்கி ரகசியமாக முன்னேறியது தொடர்பான செய்தி உள்நாட்டில் சர்ச்சையை கிளப்பிய [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Thursday, May 17th, 2012
புதுடெல்லி:தேசிய குற்றவியல் ஆவண பதிவகத்தின் தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 28,595 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று(புதன்கிழமை) எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது: ‘தேசிய குற்றவியல் ஆவண பதிவகம் தந்த தகவலின் அடிப்படையில் 2008-ல் 7,862 பேரும் 2009-ல் 9,436 பேரும் 2010-ல் 11,297 பேரும் கடத்தப்பட்டுள்ளனர். 1.84 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை. காணாமல் போன குழந்தைகளை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Thursday, May 17th, 2012
புதுடெல்லி:கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1451 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ பதிவுச்செய்துள்ளது என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார். மக்களவையில் நேற்று(புதன்கிழமை) எழுத்துமூலம் பதில் அளித்த அவர் கூறியது: எத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் மத்திய அரசிடம் பராமரிக்கப்படுவதில்லை. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில், நடப்பு ஆண்டு மார்ச் 31-வரை, 8 வழக்குகளில், 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Thursday, May 17th, 2012
பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பான வழக்கில் சிக்கிய எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று(புதன் கிழமை) நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதற்கு 2 நிறுவனங்களுக்கு எடியூரப்பா அனுமதி அளித்தது தொடர்பாக, உயர்நிலைக் குழுவின் (சி.இ.சி.) பரிந்துரையின்பேரில், சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நடத்தி ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Wednesday, May 16th, 2012
பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத் தொழில் ஊழல் தொடர்பாக முன்னாள் கர்நாடகா மாநில முதல்வரும், பா.ஜ.க தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பெங்களூர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியுள்ளது. பெங்களூரில் எடியூரப்பாவின் டாலர் காலனியில் அமைந்துள்ள வீட்டில் 6 உறுப்பினர்களை கொண்ட சி.பி.ஐ குழு ரெய்ட் நடத்தியது. எடியூரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்து நேற்று முன்தினம் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச் செய்தது. எடியூரப்பாவின் மகன்களான பி.ஒய்.ராகவேந்திரா எம்.பி, பி.ஒய்.விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார், ஜிண்டால் க்ரூப்பின் கீழ் இயங்கும் சவுத் [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Wednesday, May 16th, 2012
சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளராக ஜாகீர் உசேன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று தெரிவித்தார். ஜாகீர் உசேன் புதுக்கோட்டை தே.மு.தி.க. மாவட்ட செயலாளராக உள்ளார்.
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Wednesday, May 16th, 2012
புதுடெல்லி:’2ஜி அலைக்கற்றை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று ஜனதா கட்சியின் தலைவரும், இந்த வழக்கின் முக்கிய மனுதாரருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இதுக்குறித்து சுப்ரமணிய சுவாமி கூறியது: ‘ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கடந்த 15 மாதங்களாகச் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வழக்கின் இறுதியில் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும். இந்த வழக்கின் விசாரணை உச்ச கட்டத்தில் உள்ளது. ராசாவின் [...]
Posted in இந்தியா, செய்திகள் | 3 Comments »
Wednesday, May 16th, 2012
புதுடெல்லி:ஹஜ் நல்லெண்ணக்குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகளை தேர்வுச் செய்வதற்கான அளவுகோலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் உரிமை ஆணையர்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளார். கமிஷனின் இணையதளத்தில் இதுத்தொடர்பான தகவலை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் வெளிப்படையான தன்மை அத்தியாவசியம் என்பதால் உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் உரிமை ஆணையர் ஷைலேஷ் காந்தி விளக்கமளித்துள்ளார். நல்லெண்ணக் குழுவில் தன்னை தேர்வுச் செய்யாததன் காரணம் குறித்து விளக்களிக்க கோரி ஜம்மு-கஷ்மீர் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் அப்துல் ரஷீத் [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Wednesday, May 16th, 2012
சென்னை:தமிழகத்தில் இருந்து இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள அவர்களது பயணச் செலவில் ஒரு பகுதி மானியமாக தமிழக அரசு வழங்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறிய அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த மானிய உதவியை வழங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது என்று [...]
Posted in இந்தியா, செய்திகள் | 3 Comments »
Wednesday, May 16th, 2012
மதுரை:மதுரை ஆதீன மட அருணகிரிநாதரை கைக்குள் போட்டு இளைய ஆதீனம் பதவியை கைப்பற்றியுள்ள பாலியல் சேட்டைப் புகழ் நித்யானந்தா மதுரை ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்கும் பதவி வழங்கப்படும் என்ற புரட்சிகர(?) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை ஆதீனத்துடன் அவர் நேற்று அளித்த பேட்டியில், ஆதீன மடத்தில் இருப்பவர்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவோர் குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர், ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளோம். நான் என்னை திருநங்கை எனக் குறிப்பிடவில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் அப்பாற்பட்டு [...]
Posted in இந்தியா, செய்திகள் | 5 Comments »
Wednesday, May 16th, 2012
டெல்லி:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய 13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் செய்துள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் முறையான பதிலை தராத காரணத்தால் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது. [...]
Posted in இந்தியா, செய்திகள் | 7 Comments »
Wednesday, May 16th, 2012
சென்னை:வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு உதவ தனி அமைச்சகம் துவங்கவேண்டும் என தே.மு.தி.க சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று(செவ்வாய்க் கிழமை) நடைபெற்ற பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது: வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்களின் நலனுக்காக கேரளத்தில் தனி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுவாழ் தமிழர்கள் விவகாரத் துறை அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Tuesday, May 15th, 2012
புதுடெல்லி:2ஜி அலைக்கற்றை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. 2ஜி வழக்கில் 15 மாதங்களுக்கும் மேலாக ராசா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில், ராசாவை தவிர்த்து ஜாமீனில் விடுதலையாகாமல் எஞ்சியிருந்த முன்னாள் தொலை தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுராவுக்கு நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அடுத்த நிமிடமே, ராசாவும் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு [...]
Posted in இந்தியா, செய்திகள் | 3 Comments »
Tuesday, May 15th, 2012
காட்மாண்டு:வடக்கு நேபாளத்தில் தரை இறங்க முற்பட்ட வேளையில் விமானம் மலைமீது விபத்தில் சிக்கியதில் 13 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் டென்மார்க் நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர். விமான சிதிலங்களிடையே இருந்து ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டன. 3 இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிர் தப்பினர். இரண்டு டென்மார்க் நாட்டைச் சார்ந்தவர்களும், ஒரு ஏர்ஹோஸ்டசும் உயிர் தப்பியவர்களில் அடங்குவர். காயமடைந்தவர்கள் பொகாரா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானியான பிரபுசரண் பதக், இணை [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Tuesday, May 15th, 2012
புதுடெல்லி:ஏர்செல்-மேக்ஸிஸ் பங்கு விற்பனை விவகாரத்தை எதிர்கட்சியினர் முக்கிய ஆயுதமாக கையில் எடுத்ததைத் தொடர்ந்து மாநிலங்களை வாத பிரதிவாதங்களின் களமாக மாறியது. குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ப.சிதம்பரத்தின் பதிலில் திருப்தியடையாத எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் இரண்டு முறை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தமக்கோ தமது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஆனால், அதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Tuesday, May 15th, 2012
அஜ்மீர்:கொலை வழக்கில் இருபது ஆண்டுகள் சிறையில் கழித்த பிரபல பாகிஸ்தான் வைராலஜிஸ்ட் டாக்டர்.கலீல் ஜிஸ்தி இன்று தனது சொந்த நாட்டிற்கு திரும்புகிறார். உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் செல்கிறார். நேற்று அஜ்மீரில் இருந்து தனது சகோதரர் ஜமீல் ஜிஸ்தியுடன் புதுடெல்லிக்கு ரெயில் மூலம் வந்த 82 வயதான ஜிஸ்தி பாகிஸ்தான் ஹைக்கமிஷனுக்கு சென்று தூதரக நடவடிக்கைகளை பூர்த்திச் செய்த பிறகு பாகிஸ்தான் செல்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜிஸ்தி பாகிஸ்தான் சென்றால், அங்குள்ள இந்திய ஹைக்கமிஷனிடம் [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Tuesday, May 15th, 2012
பெங்களூர்/புதுடெல்லி:ஊழலும், அரசியல் ஸ்திரமற்றதன்மையும் தொடர்கதையான கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க சந்தித்து வரும் நெருக்கடிக்கு தற்காலிகமாக ஓய்வு ஏற்பட்டுள்ளது. மேலிடத்தின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக முன்னாள் பா.ஜ.க முதல்வரும், சட்டவிரோத சுரங்கத்தொழில் ஊழலில் சிக்கியவருமான பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுக்குறித்து நேற்று(திங்கள் கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா கூறியது: பாஜகவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளுக்கு நான் காரணமல்ல. மாறாக, முதல்வர் சதானந்த [...]
Posted in இந்தியா, செய்திகள் | No Comments »
Tuesday, May 15th, 2012
ஹைதராபாத்:கடந்த சில தினங்களில் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவின் கணவர் வீட்டில் இருந்து வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், இது வழக்கமான சோதனை என்று காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினரும், நடிகருமான சிரஞ்சீவி கூறியுள்ளார். வருமான வரித்துறை பரிசோதனையில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறும் செய்திகள் அரசியலில் தன்னை அவமதிக்கும் முயற்சி என்று சிரஞ்சீவி கூறுகிறார். மேலும் அவர் கூறியது:துல்லியமாக வருமானவரியை நான் கட்டி வருகிறேன். இதற்காக வருமான வரித்துறையின் சம்மான் [...]
Posted in இந்தியா, செய்திகள் | 1 Comment »
Monday, May 14th, 2012
கோலாலம்பூர்:மலேசியாவில் தொலைக்காட்சி தமிழ் நெடுந்தொடர்களுக்கு(மெகா சீரியல்) தடைவிதிக்க பினாங்கு நுகர்வோர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பாக அச்சங்கம், மலேசிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. நெடுந்தொடர்களில் வரும் காட்சிகளும் கதையும் பலவிதமான கலாச்சார சீரழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது என்று தாங்கள் தமிழ் மக்களிடையே நடத்தும் கலந்துரையாடல்களில் தங்களுக்குத் தெரியவந்ததாக பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் தமிழோசையிடம் தெரிவித்தார். இத்தொடர்களுக்கு மலேசியா தடைவிதிக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்திடம் தாங்கள் முறையிட்டிருந்தாலும் மலேசியா அரசு [...]
Posted in இந்தியா, செய்திகள் | 3 Comments »
விமர்சனங்கள்