மீடியா உலகில் முஸ்லிம்கள்
Tuesday, May 1st, 2012
நாம் என்னென்ன செய்யலாம்? இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் செய்திகளை அள்ளித் தரும் மீடியாக்களை எதிர்கொள்ளவும், நமது நிலையைத் தெளிவுபடுத்தவும் நமக்கென்று பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள் ஆரம்பிக்கலாம். நாம் அடிக்கடி இதுகுறித்து சிந்திக்கிறோம். அதிகமாகப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். பெரிய பெரிய திட்டங்களைப் போடுகிறோம். ஆனால் செயல் என்று வரும்பொழுது அங்கே ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகக் கொஞ்சமான வேலைகளே நடக்கின்றன. மாற்று ஊடகம் குறித்த நமது செயல்திட்டம் தேசிய அளவிலும் இருக்கவேண்டும். நமது பகுதியின் அளவிலும் இருக்கவேண்டும். [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | 2 Comments »
Saturday, March 17th, 2012
பிரஸ் கவுன்சிலை நாம் எப்படி அணுகுவது, எந்த முறையில் புகாரைப் பதிவு செய்வது, எந்தெந்த ஆவணங்களை இணைத்து அனுப்புவது போன்றவை குறித்து சென்ற தொடரில் கண்டோம். பிரஸ் கவுன்சிலின் முகவரி இதோ: Press Council of India Soochana Bhavan 8, CGO Complex, Lodhi Road New Delhi – 110 003 Web : www. presscouncil.nic.in Email : pcids@vsnl.net மாற்று ஊடகத்தை நோக்கி… மீடியாவை எப்படி அணுகுவது, பத்திரிகைகளுடன் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Friday, February 10th, 2012
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது நாம் ஏற்கனவே பார்த்தபடி சட்டரீதியானஅதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு. பிரஸ் கவுன்சில் (விசாரணைக்கான முறை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் கீழ்யார் வேண்டுமானாலும் பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட மனிதரோ, நேரடியாக ஈடுபட்ட மனிதரோதான் புகார் அளிக்கவேண்டும் என்றில்லை. பத்திரிகைத்துறையின் தொழில் தர்மம் மீறப்பட்டதாக பொதுமக்களில் யார் கவனித்தாலும் அவர்கள் இதனை பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்குக் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Tuesday, January 31st, 2012
பிரஸ் கவுன்சிலை அணுகுதல் ஊடகத்தில் எதுவும் அநீதி நடந்தால் அதனை முறையிட்டு நீதி பெறுவதற்குரிய சட்டரீதியான அதிகாரம் கொண்ட அமைப்புதான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். சட்ட ரீதியான அதிகாரம் என்றவுடன் வானளாவ அதிகாரம் கொண்டது என்று எண்ணி விட வேண்டாம். அந்த அளவுக்கெல்லாம் அதிகாரம் கிடையாது. இருந்தாலும் பிரஸ் கவுன்சிலின் பார்வை, கருத்துகள் மீடியா உலகில் கவனத்தில்கொள்ளப்படுகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா குறித்த விவரங்களுக்குள் போகும் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Thursday, January 12th, 2012
தொலைக்காட்சியில் நடக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் நம்மால் எளிதாகத் தலையிட முடியும். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களை நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் நமக்கு அனுகூலம். கலந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கேமராவின் முன்பாகப் பேசுவதற்கு சில திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். திறமைகள் என்றதும் பயந்துவிடவேண்டாம். சாதாரண விஷயங்கள்தாம். கேமராவின் முன்பாக அமைதியான மனநிலையுடன் காட்சியளிக்க வேண்டும். படபடப்பாகக் காணப்படக் கூடாது. இன்முகத்துடன், இனிமையாகப் பேசவேண்டும். நிதானமாக, தெளிவாகப் பேசவேண்டும். [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Thursday, January 5th, 2012
நமது தொலைக்காட்சிச் சானல்களில் வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முற்கூட்டியே தயாரிக்கப்பட்டவை, முன்னரே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் கூட எல்லாம் நாடக மயம்தான். அவர்கள் மக்களின் பிரதிநிதிகளை அழைப்பது போலிருக்கும். ஆனால் அவர்கள் விரும்பும் மக்களைத்தான் அழைப்பார்கள். அவர்கள் விரும்பும் கேள்விகளை மட்டும்தான் கேட்பார்கள். அவர்கள் விரும்பும் பதில்கள்தான் வரும். அப்படியே மாற்றமான பதில்கள் வந்தால் கத்திரி விளையாடிவிடும். இப்பொழுது அந்தநிலை கொஞ்சம் மாறி வருகிறது. 2007ம் ஆண்டு இறுதியில் கரன் தாப்பர் சிஎன்என் ஐபிஎன் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Thursday, December 29th, 2011
மின்னணு ஊடகங்கள் தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சியும், பயன்பாடும், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபரிமிதமான ஆர்வமும், மிக எளிதாகப் போய்ச் சேரும் அதன் தன்மையும் மின்னணு ஊடகங்களில் நமது தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன. ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்றாலே தூர்தர்ஷன்தான். புதன்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் “ஒலியும் ஒளியும்” மிகவும் பிரபலம். தவமாய்த் தவமிருந்து அதனைக் கண்டு களித்தோர் பலர். “ஒலியும் ஒளியும்” ஒளிபரப்பப்படும் நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அந்த வெட்டைச் செய்தவருக்கு மட்டுமல்ல, அவரது பல தலைமுறைகளுக்கும் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Wednesday, December 21st, 2011
பத்திரிகையாளர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துங்கள் தனிப்பட்ட முறையில் நட்புகளை வளர்த்துக் கொள்வது பல வழிகளிலும் நன்மை பயக்கும். நல்ல ஒரு முஸ்லிமை நண்பனாகக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அந்த முஸ்லிம் சார்ந்த சமுதாயத்திற்கெதிராக எழுதுவதற்கு ஒரு தடவைக்கு பல தடவை யோசிப்பார். இஸ்லாத்திற்கெதிராக எழுதுவதற்கு இஸ்லாம் பற்றிய அறியாமையும், முஸ்லிம்களுடனான தொடர்பின்மையும் தான் மிக முக்கிய காரணம். ஆதலால் உங்களுக்கு அருகில் ஊடகத்தில் தொடர்புடையவர் யார் இருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நகரங்களில் வசிப்பவர்கள் உங்கள் வார [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Wednesday, December 14th, 2011
நாம் எங்கே தவறிழைக்கிறோம்? அரிதாகக் கடிதம் எழுதும் நம்மவர்களும் ஒன்றை மறந்துவிடுகிறோம். நமக்கெதிராகச் செய்திகள் வரும்பொழுது அவற்றைக் கண்டித்து கடிதம் எழுதும் நாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செய்திகள் வரும்பொழுது அவற்றை ஆதரித்து கடிதம் எழுத மறந்து விடுகிறோம். இங்கேதான் நாம் தவறிழைக்கிறோம். ஒரு முஸ்லிமின் கருத்தை ஒரு பத்திரிகையாளர் ஆதரித்து எழுதுகிறார் என்றால் நாம் அந்த எழுத்தாளருக்கு நமது நன்றியையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும்தெரிவிக்கவேண்டும். எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலையான சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கெதிராக அநியாயமாக [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Wednesday, December 7th, 2011
சென்ற தொடரில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய 9 அம்சங்களைப் பார்த்தோம். இனி அதன் தொடர்ச்சியாக அடுத்த அம்சங்களைப் பார்ப்போம். 1. 10. எந்தச்செய்தி குறித்து மடல் வரைகிறோமோ அந்தச் செய்தியை முதலில் குறிப்பிடவேண்டும். பாராட்டுதலுக்குரிய அம்சங்கள் ஏதேனும் அதில் இடம்பெற்றிருந்தால் முதலில் அதற்காக நமது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கவேண்டும். அது இல்லையெனில் கடிதத்தைஉடன்பாடான விமர்சனங்களைக் கொண்டு (Positive Remarks) ஆரம்பியுங்கள். ஆரம்பம் இந்தமாதிரி அமைந்தால் அது அவர்களின் உள்ளங்களில் உங்கள் கடிதத்தைக் குறித்த [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Sunday, November 27th, 2011
மீடியாவை எதிர்கொள்வதுஎப்படி? மீடியாவை நாமும் எதிர்கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம். அது எப்படி என்று காண்போம். ஒரு நாட்டின் பணிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மீடியா. அதனை நாம் தவிர்த்துவிட்டு வாழவே முடியாது. ஆதலால் அதனை எப்படி எதிர்கொள்வது, எப்படி பயனுள்ள வகையில் நடத்துவது, எப்படி நமக்குச் சாதகமாக மாற்றுவது என்பதைப் பற்றித்தான் நாம் ஆலோசிக்க வேண்டும். முதலில் ஒன்றை நாம் மனிதல் இறுத்த வேண்டும். மொத்த மீடியாவும் ஒரு [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Sunday, October 9th, 2011
2002ல் நடந்த குஜராத் இனப் படுகொலையின் பொழுது அங்குள்ள சில நாளிதழ்கள் எவ்வாறெல்லாம் பொய்ச் செய்திகளை வெளியிட்டு கலவரத் தீயை மூட்டின என்று பார்த்து வருகின்றோம். மார்ச் 7 அன்று குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒருபெட்டிச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “ஐ.எஸ்.ஐ, குஜராத்தில் பிரச்னைகளை உருவாக்குகிறது. கலோட்டாவும், அவருடன் பணி புரிபவர்களும் இதில் முக்கிய தொடர்புள்ளவர்கள். கொல்கத்தாவில் கைதான HUJI என்ற அமைப்பின் துணைத் தளபதி இந்தச் சதித் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.” இந்தச் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | 1 Comment »
Saturday, July 30th, 2011
2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் மீடியா எப்படி தவறாகப் பிரச்சாரம் செய்தது என்பதை நாம் பார்த்து வருகின்றோம். இந்த இனப்படுகொலை நடந்து முடியும் வரை சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவுமே சித்தரித்தது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதிகளை “குட்டி பாகிஸ்தான்” என்று அது சித்தரித்தது. 2002 மார்ச் 7 அது ஒரு செய்தியை வெளியிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை கராச்சியோடு தொடர்பு படுத்தி அந்தச் செய்தி வெளிவந்தது. கராச்சியில் கோத்ரா என்ற [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Sunday, June 19th, 2011
2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலை நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவிட அங்குள்ள மீடியா செய்த தவறான பிரச்சாரம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. மார்ச் 16ம் தேதி வதோதராவில் மச்சிப்பித் என்ற இடத்தில் 4 முஸ்லிம் இளைஞர்களைப் போலீஸ் பிடிக்கிறது. அவர்கள் டாடா சுமோ வாகனத்தில் ஆயுதங்களை வைத்திருந்தார்களாம். ஆனால் இந்தச் செய்தியை சந்தேஷ் நாளிதழில் படிக்கும் ஒருவருக்கு அந்த வாகனம் முழுவதும் ஆயுதங்களை அந்த இளைஞர்கள் கடத்திக்கொண்டு வந்ததாகத் தோன்றும். உண்மை என்னவென்றால், [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | 2 Comments »
Sunday, June 12th, 2011
2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் அங்குள்ள மீடியாக்களின் பாரபட்சமான பங்கு குறித்து நாம் பார்த்து வருகின்றோம். குஜராத் இனப்படுகொலை குறித்து நேரடிக் கள ஆய்வு செய்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் என்ற மனித உரிமை அமைப்பு “மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குஜராத் இனப்படுகொலை குறித்து வெளிவந்த செய்தியைத்தான் நாம் இப்பொழுது பார்த்து வருகின்றோம். அந்த அறிக்கையின் தொடர்ச்சி வருமாறு: மீடியாவில் வந்த செய்திகளை வைத்தும், இந்தக் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | 2 Comments »
Wednesday, April 20th, 2011
குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சி தொடர்கிறது: பிப்ரவரி 28 அன்று அதிகமாக விற்பனையாகும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு குஜராத் செய்தித்தாள்கள் கோத்ரா ரயில் எரிப்பில் “அந்நியக் கைகள்” இருக்கின்றன என்ற அரசின் பொய்ச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன. 3-4 வாரங்கள் கழித்து இந்தச் செய்தி மகா பொய்யானது என்று மீடியாவில் கசிய ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அனைத்து அக்கிரமங்களும் அரங்கேறி [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Thursday, April 7th, 2011
சென்ற தொடரில் குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal) வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியைக் கண்டோம்.இனி அதன் தொடர்ச்சியைக் காண்போம். “இரவு 7.30 மணிக்கு ஆகாஷவாணி வானொலியில், “கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ.யோ அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியோ உள்ளது” என்று முதல் முறையாக மோடி அறிவித்தார். இது குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும்,பா.ஜ.க.வின் நிலைப்பாடாகவும் வெளிப்பட்டது. அதேபோல் அவரது சங்கப் பரிவாரக் கூட்டாளிகளுக்கு ‘எதிர்வினை’க்கான [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Sunday, April 3rd, 2011
மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது? இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தேறின.ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளைக் கண்டு திடுக்குற்ற நடுநிலையான மனித உரிமை ஆர்வலர்கள் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Monday, March 28th, 2011
சென்ற தொடர்களில் மொத்த மீடியாவிலும் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணியைப் பார்த்தோம். இந்தப் பின்னணியை நாம் எதற்காக விளக்கினோம் என்றால் இதனைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நமக்கு நன்றாகப் புரிய வரும். Call the dog mad and then shoot ஆங்கிலத்தில் Call the dog mad and then shoot என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நாயை அது வெறி பிடித்த நாய், பைத்தியம் பிடித்த நாய் என்று சொல்லி, அதன் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Saturday, March 19th, 2011
கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம். ஆதலால் மனிதகுல வரலாற்றில் நாடுகளுக்கிடையில் பலப்பல போர்கள் நடைபெற்றன. பலப் பல மனித உயிர்கள் மாண்டன. காலச் சக்கரம் உருண்டோடியது. நிலைமைகள் மாறின. பழைய [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Saturday, March 19th, 2011
இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம். இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை – அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது. ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து, அது தன் வளர்ச்சியைத் தொடங்கிய பொழுதே இந்தச் சிலுவைகள் அங்கே தமது ஆதிக்கத்தை அரங்கேற்றிவிட்டன. அங்கே என்ன கலாச்சாரம் நிலவ வேண்டும், என்ன பண்புகள் மிளிர வேண்டும் என்று அவைதாம் [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Tuesday, March 8th, 2011
பகைமையின் வேர்கள் முன்பெல்லாம் இரு நாடாளும் அவைகளிலும் (பாராளுமன்றம், ராஜ்யசபை) என்ன பேசப்பட்டதோ, விவாதிக்கப்பட்டதோ, முடிவெடுக்கப்பட்டதோ அவைதான் மீடியாவில் செய்திகளாக வெளிவரும். ஆனால் இப்பொழுது மீடியாவில் என்ன செய்திகளாக வெளிவருகின்றனவோ அவையே நாடாளும் அவைகளில் விவாதப் பொருளாக மாறுகின்றன. மீடியாவுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சி. இன்று தகவல்களின் உலகம் (World of Information) என்பது அபார வேகத்தில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. “அறிவே பலம்” (Knowledge is Power) என்ற [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Tuesday, March 8th, 2011
தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை என்று சென்ற தொடரில் பார்த்தோம். இந்த ஆங்கில நாளிதழ்கள் கூட்டாட்சி, இடஒதுக்கீடு, தன்னாட்சி, ஏழைகளுக்கு மானியம் வழங்குதல், நாட்டு நலப்பணித் திட்டங்கள் போன்ற மக்களுக்கு நன்மை சேர்க்கும் அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானவை. அதிகார வர்க்கம் என்ன எண்ணுகிறதோ அவையே இந்த நாளிதழ்களில் பிரதிபலிக்கும். தேசிய அளவில் தரமான [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Tuesday, March 8th, 2011
அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பரப்பும் முகமாக அங்கே அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். இனி இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கேயும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் இந்திய நாளிதழ்கள் துப்பறிவதற்குப் பெயர் போனதாக விளங்கின. எந்தச் சம்பவம் நிகழ்ந்தாலும் உடனே செய்தியாளர்கள் களத்தில் இறங்குவார்கள். பரபரப்பாக இயங்குவார்கள். அலசி ஆராய்ந்து உண்மைச் செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு தருவார்கள். யாரும் செல்ல முடியாத இடத்திற்கும் ‘அலேக்காக’ சென்று, எவருக்கும் கிடைக்காத [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
Tuesday, March 8th, 2011
ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிக சக்தி படைத்த ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் திரைப்படங்களும் உலகெங்கும் பரப்பி வருகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். அமெரிக்க தேசிய ஆர்வம் என்பது அடிப்படையில் 4 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். அவையாவன: 1.யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை என்ற அடிப்படையில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக தேடுதல். 2.யூத ஸியோனிஸவாதிகள் ஃபலஸ்தீன மண்ணில் குடியேற்றங்களை நிறுவ அபரிமிதமான ஆதரவை அளித்தல். 3.இராணுவத் தளவாட உற்பத்தியில் இலாப நோக்கு [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | Comments Off
விமர்சனங்கள்