மனதோடு மனதாய்
Wednesday, May 9th, 2012
“வீடுகள் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போக அனுமதிக்க வேண்டும்.” – இப்படி ஒரு கோரிக்கையோடு சிலர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகினார்கள். எதிரிகள் மதீனாவை ஆக்கிரமிப்பதற்காக வந்து கொண்டிருந்த சமயத்தில்தான் இந்தக் கோரிக்கை வந்தது. மதீனாவைச் சுற்றிலும் குழியைத் தோண்டி முஸ்லிம்கள் காவல் நின்றார்கள். குழிக்கு அந்தப் பக்கம் எதிரிகள் படையெடுத்து வந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுடன் போரிடுவதற்கு சவால் விடுத்தார்கள். இதற்கிடையில்தான் சிலருக்கு தங்கள் வீடுகளுக்குப் போக வேண்டும் என்று [...]
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | No Comments »
Monday, April 30th, 2012
“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?” “உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள். “அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?” -மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர். இடம்: யர்முக் யுத்தம். அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று [...]
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Friday, March 30th, 2012
சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின. நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!” தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர். [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Tuesday, March 13th, 2012
ரபீஆ அப்பொழுது குழந்தையாக இருந்தார். தன் தந்தையுடன் ஹஜ்ஜுக்கு வந்திருந்தார். மினாவில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்து அதனுள்ளே அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் பேசிக் கொண்டிருந்தனர். வேறொரு பகுதியில் வியாபாரம் களை கட்டிக்கொண்டிருந்தது. மறைவான இடங்களில் கமுக்கமாக சூதாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எங்கும் திருவிழாக்கோலம். கூடாரத்தின் உள்ளிருந்த ரபீஆவுக்கு வெளியே யாரோ உரக்கப் பேசுவது கேட்டது. ஆர்வம் மேலிட வெளியே [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Thursday, February 16th, 2012
ஒருமாலை நேரம். சில இளைஞர்கள் குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதிரை தன்னுடையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். ஆனால் சில மணித்துளிகளில் உண்மை விளங்கிற்று. ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றது தன் குதிரையல்ல. பட்டணத்தில் வசிக்கும் ஒரு சாதாரண இளைஞன்தான் வெற்றி பெற்றது. கவர்னரின் மகன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டான். எல்லோரும் தன்னை ஏகடியம் செய்வதுபோலிருந்தது. அந்த [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Saturday, February 4th, 2012
ஹஸ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்களுக்குப் பிறகு உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரது முரட்டு குணத்தைக் குறித்து பலரும் கவலை தெரிவித்தார்கள். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழும், அபுபக்கர்(ரலி) அவர்களுக்குக் கீழும் இருக்கும் பொழுதும் உமர்(ரலி) அவர்கள் கடுமையானவராகவே நடந்து கொண்டார். இப்பொழுது ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டார். இனி என்னவெல்லாம் நடக்குமோ? மக்களின் கவலை உமர்(ரலி) அவர்களின் காதுகளுக்கும் எட்டியது. அவர்கள் தனது முதல் உரையில் அதனை இவ்வாறு சுட்டிக்காட்டினார்: “என்னுடைய முரட்டுக் குணத்தைக் குறித்து பலரும் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Monday, January 23rd, 2012
வாழ்க்கைச் சூழல்கள் ஒட்டி நிற்கின்ற எட்டு காரியங்களை ஒரே வசனத்தில் பொதிந்து, இறைவன் மனிதனின் விருப்பங்களை இதோ இவ்வாறு கேட்கின்றான்: (நபியே) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Sunday, January 15th, 2012
இஸ்லாத்தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொண்ட பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சிலைகளையும் வணங்கிக்கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க பெண் ஆனார். இஸ்லாம் அவரது வாழ்க்கையை வாகாய் புரட்டிப் போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவிடை செய்வதில் அலாதி ஆனந்தம் அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்மையாரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார். நபிகளாருக்கு இறைச்செய்தி துவங்கிய 10வது [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Monday, January 9th, 2012
ஹஸ்ரத் இப்றாஹீம்(அலை) அவர்களும், மனைவி ஹாஜரா அம்மையாரும், பால்குடி மாறா பிஞ்சுக் குழந்தை இஸ்மாயீலும் மலைகள் நிரம்பிய மக்காவை நோக்கி பயணித்தனர். ஹஸ்ரத் ஜிப்ரயீல்(அலை) அவர்கள்தான் அவர்களுக்கு வழிகாட்டி. மனித வரலாற்றிலேயே திருப்புமுனையாக அமைந்த மாண்புமிகு பயணமாக இருந்தது அது. மக்காவை அடைந்ததும் ஒரு மொட்டை மலைக்குன்றுக்கருகே ஹாஜரா அம்மையாரையும், குழந்தை இஸ்மாயீலையும் விட்டு விட்டுச் செல்லுமாறு ஜிப்ரயீல் பணித்தார். ஆளே இல்லாத அந்தப் பாலை வெளியில் இப்றாஹீம் (அலை) ஒரு சிறிய பந்தல்போல குடில் அமைத்து [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Saturday, December 31st, 2011
“இந்த மார்க்கத்தை அல்லாஹ் வெற்றி பெறச் செய்வான். நாம் உன்னத நிலையை அடைவோம். ஸன்ஆவிலிருந்து ஹழர மவ்த் வரை அல்லாஹ் அல்லாத வேறொன்றையும் பற்றி அச்சப்படாமல் ஒருவன் பயணம் செய்யும் அளவுக்கு அமைதி மலரும். நீங்கள் அவசரப்படுகின்றீர்கள்.” கப்பாப் இப்னு அரத் (ரலி) என்ற நபித்தோழரை கருணை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி ஆறுதல் படுத்தினார்கள். ரத்தம் சொட்டும் காயங்களுடன் அண்ணலார் முன் வந்து நின்றார் கப்பாப் இப்னு அரத்(ரலி). மக்காவில் அடிமையாக இருந்தார் அவர். [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 2 Comments »
Sunday, December 25th, 2011
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் யூத வேதப் பண்டிதரும் புரோகிதருமாக இருந்தார். சத்தியத்தைப் பேசும் நபராகவும் இருந்தார் அவர். யூதர்களுக்கிடையில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு மிகுந்த கண்ணியமும் மரியாதையும் அளித்தனர். பிரார்த்தனைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் அப்துல்லாஹ் இப்னு ஸலாமையே தலைமை வகிக்கச் செய்தனர். முஹம்மத் என்பவர் மக்காவில் இறைத்தூதுச் செய்தியைச் சொல்கிறாராம் என்ற செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாமுக்கு எட்டியது. தன்னை இறைத்தூதர் என்று சொல்கின்ற முஹம்மதைப் பற்றிய [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Sunday, December 18th, 2011
சொந்த பந்தங்களைக் காண்பதற்காக மக்காவுக்கு வந்திருந்தார் அம்ர் இப்னு ஆஸ் (ரலி). கஅபாவுக்கு அருகில் சில நபர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அவர்கள் உரையாடும்பொழுது தன் பெயர் அடிபடுவதையும் கவனித்தார் அம்ர். ஆர்வம் மேலிட அவர்களை அணுகினார் அம்ர். “நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் நழுவப் பார்த்தார்கள். ஆனால் அம்ர் விடவில்லை. “நீங்கள் என்னைக் குறித்து என்னவோ பேசிக்கொண்டிருந்தீர்கள். என்ன அது?” என்று மீண்டும் கேட்டார். “உங்களைப் பார்த்ததும் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Monday, December 12th, 2011
மதீனாவில் முஸ்லிம்களின் சிறையிலிருந்து விடுதலையான ஒரு படைவீரன் சிரியா திரும்பினான். மதீனா குறித்த செய்திகளை அறிந்திட மக்கள் அவனைச் சூழ்ந்தனர். புதிய ஆட்சியைக் குறித்து தான் கண்டறிந்தவைகளை அவன் மக்களிடம் எடுத்துக் கூற ஆரம்பித்தான். “முஸ்லிம்களுக்கு புரோகிதர்களோ, ராஜாக்களோ இல்லை. அவர்களின் ஆட்சியாளர்களோ எளிமையின் வடிவமாகத் திகழ்பவர்கள். மக்களிடம் கருணை காட்டுபவர்கள். சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். நீதியை நிலைநாட்டுவதில் கருத்தாக இருப்பவர்கள். சட்டத்தை அமுல்படுத்துவதில் யாரைக் கண்டும் அஞ்சாதவர்கள்.” இந்தச் செய்திகள் கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படைவீரன் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Monday, December 5th, 2011
“நெருங்கிய உறவினர்களை நிரந்தரமாகப் பிரியும் பொழுது ஏற்படும் கண்ணீர் இது” – ஜஅபர் இப்னு அபீதாலிப்(ரலி) அவர்களின் வீட்டில் வைத்து அண்ணல் நபிகள்(ஸல்) அவர்கள் தங்கள் அருமைத் தோழர்களைப் பார்த்துக் கூறினார்கள். அப்பொழுது அவர்கள் ஜஅபரின்(ரலி) குழந்தைகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். இதனைக் கேட்ட ஜஅபர்(ரலி) அவர்களின் மனைவிக்கு சந்தேகம் தோன்றியது. “யாரசூலுல்லாஹ்! ஏன் அழுகிறீர்கள்? என் கணவரைப் பற்றியும், இன்னபிற நபித்தோழர்களைப் பற்றியும் ஏதாவது செய்தி வந்ததா?” “ஆம்” என்று தலையசைத்தார்கள் அண்ணலார். “அவர்களெல்லாம் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Monday, November 28th, 2011
மீண்டும் ஒரு தடவை அவரை ரயில் வண்டியில் கண்டபொழுது அவர்என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். காய்ந்த உதடுகள், வெளிறிப்போன முகம், குழி விழுந்தகண்கள்… என்று ஆளின் கோலமே மாறிப்போயிருந்தது. குடித்துக் குடித்து குடும்பத்தைத் தொலைத்தவர். அனைத்தையும்இழந்தவர். குடியை மறக்க வைக்கும் மறுவாழ்வு மையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவருடன்அவரின் மனைவியும், வேறொரு ஆளும் இருந்தனர். கண்ணியமான அரசு வேலையில் இருந்தார். ஓர் அலுவலக மாலை நேரவிருந்து நிகழ்ச்சியில் அனைவராலும் நிர்ப்பந்திக்கப்பட்டு குடிக்க வைக்கப்பட்டார்.பின்னர் விருந்து நிகழ்ச்சிகளில் குடிக்க ஆரம்பித்தார். [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Sunday, November 20th, 2011
மதீனாவில் மஸ்ஜிதில் தொழுகை முடிந்தவுடன் நபித்தோழர்கள் சிறிதுநேரம் அங்கேயே இருப்பார்கள். இறை நினைவிலும், பிரார்த்தனைகளிலும் அந்த நேரத்தைக் கழிப்பார்கள். ஆனால் ஸஃலபத் இப்னு ஹாபிதா(ரலி) என்ற நபித்தோழர் மட்டும் தொழுகை முடிந்தவுடன் அவசரமாகப் புறப்பட்டுச் சென்று விடுவார். இதனைக் கவனித்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரை அழைத்து அதற்கான காரணத்தைக் கேட்டார்கள். “எனக்கும், என் மனைவிக்கும் தொழுகையை நிறைவேற்ற ஒரே ஒரு நல்ல ஆடை மட்டுமே இருக்கிறது. நான் வீட்டிற்குச் சென்று இதனைக் கொடுத்தால்தான் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Wednesday, October 12th, 2011
யமனில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அறுவடை காலங்களில் அவரது தோட்டத்தைச் சுற்றிலும் ஊர்க்காரர்கள் ஒன்று கூடுவார்கள். அந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் கனி வர்க்கங்களில் கணிசமான ஒரு பகுதியை அந்த நல்ல மனிதர் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பார். இந்த அழகிய தர்மம் மூலம் அவருக்கு செல்வம் இன்னும் அதிகரிக்கவே செய்தது. ஆனால் அவருடைய குடும்பத்தார் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. ஊர்க்காரர்களுக்கு இவர் அள்ளி இரைப்பது அனைத்தும் தமக்கு ஏற்படும் இழப்பாக அவர்கள் கருதினார்கள். தந்தையைப் பிள்ளைகள் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Thursday, September 8th, 2011
ஒரு சம்பவத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். மதீனாவில் யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். விபச்சார வழக்கு. விபச்சாரக் குற்றத்திற்கு யூதர்களின் வேதமாகிய தௌராத்தில் என்ன தண்டனை சொல்லப்பட்டுள்ளது என்று அண்ணலார் யூதர்களிடம் வினவினார்கள். சாட்டையடி கொடுப்பதுதான் வழக்கம் என்று யூதர்கள் பதிலளித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார். வேதப் பண்டிதராக விளங்கிய அவர் சமீபத்தில்தான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார். “நீங்கள் பொய் சொல்கின்றீர்கள். விபச்சாரம் செய்தவர் மேல் கல்லெறிய [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Saturday, September 3rd, 2011
இறந்த தன் குழந்தையைக் கண்டு கட்டுப்பாடில்லாமல் அழுது கொண்டிருந்தஒரு தாயைக் கண்டார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். குழியில் வைக்கப்பட்ட குழந்தையைப் பார்த்துப் பார்த்து ஓலமிட்டுக் கொண்டிருந்தாள் அந்தத் தாய். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவளைச் சமாதானப்படுத்தினார்கள். ஆறுதல் படுத்தினார்கள். “அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடி” என்றார்கள். தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது யார் என்று தெரியாத அந்தப் பெண் இப்படிச் சீறினாள்: “இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கு,உங்களுக்கல்ல.” ஒன்றுமே பேசாமல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த இடத்தை [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Tuesday, July 26th, 2011
அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் பெரிய மார்க்க அறிஞர் ருத்தூஸ் என்ற பகுதிக்குச் செல்லும்பொழுது ரிக்கா என்ற இடத்தில் தங்குவது வழக்கம். அப்படி ரிக்காவில் தங்கும்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஓர் இளைஞர் பணிவிடை செய்து வந்தார். அத்தோடு அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் நபிமொழிகளையும் கற்று வந்தார். ஒருமுறை இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ரிக்கா வந்தபொழுது அந்த இளைஞரைக் காணவில்லை. அவர் எங்கே என்று விசாரித்தபொழுது அந்த இளைஞர் ஒருவரிடம் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Monday, June 27th, 2011
சுமார் 20 தினங்கள் நீண்ட முற்றுகைக்குப் பின் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாததால் ஸகீஃப் கோத்திரத்திற்கு எதிராக தற்காலிகமாக போரை நிறுத்திவிட்டு தாயிஃபிலிருந்து திரும்பியது முஸ்லிம் படை. மதீனா நோக்கித் திரும்பி கொண்டிருந்த முஸ்லிம் படையை உர்வா இப்னு மஸ்ஊத் என்பவர் அணுகி அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் கரங்களைப் பிடித்து முஸ்லிமானார். உர்வா ஸகீஃப் கோத்திரத்தைச் சார்ந்தவர். தாயிஃபிலிருந்து முஸ்லிம் படை திரும்பிய பொழுது அதனைப் பின் தொடர்ந்து உர்வா வந்தார். இஸ்லாம் குறித்த அடிப்படை விஷயங்களை [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Thursday, June 16th, 2011
எதிர்மறையான கூட்டணி என்றுமே நிலைத்து நின்றதில்லை. சிறு காரணங்களை வைத்தே அது தகர்ந்து விடும். இத்தகைய கூட்டணியில் உள்ளவர்கள் ஆபத்தில் உதவ மாட்டார்கள். விழப் போகிறவனைத் தள்ளி விடுவதில் தான் குறியாக இருப்பார்கள். இறுதித் தூதர் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கெதிராக மிகப் பலமுள்ள கூட்டணிகள் பல நேரங்களில் அமைந்ததுண்டு. இதற்கு பத்ர் சிறந்த உதாரணம். அபூஸுஃப்யானின் வியாபாரக் கூட்டம் வழியில் மறிக்கப்படும் என்ற செய்தி மக்காவிலுள்ளவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டது. தங்கள் பொருட்களைப் பாதுகாக்க அவர்களில் சிலர் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Monday, May 30th, 2011
”இந்த வீட்டில் இதுவரை யாரும் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்ததில்லை. நீ புதிதாக வந்து ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டாம்.” – பாட்டியின் சகோதரர்கள்தான் இப்படிக் கத்தினர். இனி இங்கே நின்று ஆகப் போவது ஒன்றும் இல்லை. நடையைக் கட்டினான் அந்த இளைஞன். இது முதல் தடவையல்ல. பல தடவை இப்படி வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறான் அவன். அந்த இளைஞன் படும் கஷ்டங்களைக் கண்டு சகிக்க முடியாமல் பாட்டி அவனிடம் இப்படிச் சொன்னாள்: ”என் சகோதரர்கள் [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Wednesday, May 25th, 2011
அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தரவில்லையெனில் மதீனாவின் ஆட்சியாளராக ஆகியிருப்பார் அப்துல்லாஹ் இப்னு உபை. தங்களுக்கிடையிலுள்ள சண்டை சச்சரவுகளையெல்லாம் களைந்து அப்துல்லாஹ் இப்னு உபையைத் தலைவராக அவர்கள் ஏற்றுக்கொண்ட சமயத்தில்தான் அங்கே புதிய ஒரு மாற்றம் நிகழ்ந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததோடு எல்லாம் தலைகீழாக மாறியது. அன்று முதல் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களைக் கண்டாலே வேம்பாகக் கசந்தது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்க [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Saturday, April 30th, 2011
யமன் பிரதேசத்தில் பொருளாதார வளமிக்க பெரும் பட்டணமாகத் திகழ்ந்தது ஸபஉ. விசாலமான தோட்டங்கள், பரந்து விரிந்து கிடந்த விவசாய நிலங்கள், தேவைக்குப் போதுமான நீர் நிலைகள், இரும்பு, செம்பு போன்ற உலோகங்களைக் கொண்ட பூமி என்று வளமான பகுதியாக இருந்தது ஸபஉ. அது மட்டுமல்ல. வியாபாரம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது ஸபஉ. வியாபாரச் சந்தைக்கான அனைத்து சௌகரியங்களும் ஸபஉகாரர்களுக்குக் கிடைத்திருந்தது. அன்றைய காலத்தில் மிக முக்கியமான வணிகக் கேந்திரமாக இருந்த ஷாம் தேசத்திற்குச் செல்ல அவர்களுக்கு [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in கட்டுரைகள், தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
விமர்சனங்கள்