பொது கட்டுரைகள்
Tuesday, May 15th, 2012
இந்திய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று முன்தினம்(மே 13) 60-வது ஆண்டை எட்டியது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த பாதையை தேர்வுச்செய்ய வேண்டும் என்ற வாத பிரதிவாதங்களின் இறுதியில் பாராளுமன்ற ஜனநாயகமே சிறந்தது என்று கான்ஸ்ட்யூவண்ட் அஸெம்ப்ளி தீர்ப்பை எழுதியது. மக்கள் பிரதிநிதிகளின் அவையாக மக்களவையும்(லோக்சபா), மாநிலங்களின் ஒருங்கிணைந்த அவை என்ற நிலையில் மாநிலங்களவையும்(ராஜ்யசபா) இந்திய கட்டமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி உருவான இந்தியாவின் முதல் பாராளுமன்றம் மே 13-ஆம் தேதி [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள் | No Comments »
Sunday, May 13th, 2012
அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும். அம்மா என்றழைக்காத உயிரில்லையே! தாயின் சிறந்ததோர் கோயிலுமில்லை! என தாய்மையின் பெருமையை உணர்த்துவதற்கு இவ்வுலகில் பல்வேறு வகையான சொல்லாடல்கள் எடுத்தாளப்படுகின்றன. பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | No Comments »
Saturday, May 5th, 2012
இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக நாடுகளின் அணிகள் இடமாறின, போரால் உண்டான பேரிழப்பால் எதனையாவது செய்து இழந்த பொருளாதரத்தை மீட்க அத்தனை நாடுகளும் எத்தனித்தன. உலகப் போருக்கு அமெரிக்கா (சரியாக சொல்வதென்றால் யூதர்கள் ) தலைமையில் உருவாகிய புதிய பொருளாதார நிபுணத்துவ வர்க்கம் “வளர்ச்சி” என்னும் சொல்லாடல் மூலம் மொத்த உலகையும் வசீகரிக்க ஆரம்பித்தது. அவ்வளர்ச்சியில் எல்லேருக்கும் எல்லா பொருட்களையும் கிடைக்க செய்வது, எல்லோரையும் எல்லா பொருட்களையும் நுகர செய்வது சித்தாந்தமாகும், அது அவசியம் இருந்தாலும் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 2 Comments »
Thursday, May 3rd, 2012
இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள். 1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும். “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை, வரலாறு | 8 Comments »
Tuesday, April 3rd, 2012
வழக்கத்திற்கு மாறாக அன்று நான் மிகவும் குழம்பிய நிலையில் என்னுடைய அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த குழப்பத்திற்கான காரணத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று என்னுடய மனம் எண்ணியது. மதிய இடைவேளை அப்போது. என்னுடைய நண்பன் அமீர் எனதருகில் வந்து “நீ ஏதோ குழம்பிய நிலையில் உள்ளாய். அதற்கான காரணம் என்ன?” என்று வினவினான். எனக்கோ ஒரு ஆறுதல் வந்தது போல, “ஆம். நானும் காலையில் தினசரிகளை புரட்டிய பிறகே என்னுடைய அலுவல்களை தொடங்கினேன். இன்றைய ஒரு [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 4 Comments »
Tuesday, April 3rd, 2012
தெற்காசியாவில் தூதரக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை வகிக்கும் தேசம் முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மர். உலகில் இரு பெரும் பொருளாதார சக்திகளாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மத்தியில் மியான்மரின் இடம் அமைந்துள்ளது. அதிகமான இயற்கை வளமும், மனித வளமும் மியான்மரின் சிறப்பாகும். அதன் வரலாறும், கலாச்சாரமும் தெற்காசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் இதர நாடுகளைப் போலவே வளமானதும், மிகவும் பழமையானதுமாகும். துரதிர்ஷ்டவசத்தால், ஆசியாவில் இந்தியா, சீனாவுடன் ஏன் மக்கள் தொகையிலும், புவியியல் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 1 Comment »
Sunday, December 11th, 2011
கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர் பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலையாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 2 Comments »
Wednesday, December 7th, 2011
இளைஞர்களே! இளம்பெண்களே! எழுச்சியின் வித்துக்களே! சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை பெரியோர்களே! தாய்மார்களே! சற்று நில்லுங்கள். உங்கள் அன்றாடப் பணிகளுக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு வரலாற்றை சற்று திரும்பிப் பாருங்கள். சதிகளாலும் துரோகங்களாலும் பின்னிப் பிணையப்பட்ட சோக வரலாறு ஏக்கத்துடன் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக நீங்கள் வரலாற்றை மீட்டெடுத்து நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவீர்கள் என அந்த வரலாறு உங்களை நம்பிக்கையோடு பார்த்து கொண்டிருக்கின்றது. அநீதிக்கும் ஆணவத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என அது உறுதியாக [...]
Posted in கட்டுரை, பொது கட்டுரைகள், முன்னையவை | 1 Comment »
Tuesday, December 6th, 2011
என்றும் நம் நினைவில்…! பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்! ஹிந்துத்துவ கயவர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜிதைச் சுற்றி குழுமியிருந்த பொழுது எப்படியும் நம்துனை இராணுவம் [...]
Posted in கட்டுரைகள், தலைப்புச்செய்தி, பொது கட்டுரைகள், முன்னையவை | 3 Comments »
Tuesday, October 11th, 2011
புதுடெல்லி:மோடிக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் வாடும் வேளையில் குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும் அதனைத் தொடர்ந்தும் மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அளித்தது பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் பதவியில் நீடிப்பதற்கான அனுமதியுமாகும். பி.சி.பாண்டே(1970பாட்ச்):- இனப்படுகொலை நடைபெற்ற வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார். 1000 [...]
Posted in இந்தியா, கட்டுரைகள், செய்திகள், பொது கட்டுரைகள், முன்னையவை | Comments Off
Sunday, October 9th, 2011
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் அடைப்பு! மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்மணியை வீட்டில் தங்கவைத்தார் எனக்கூறி ராஜஸ்தான் மாநிலத்தில் மனித உரிமை ஆர்வலரும், பி.யு.சி.எல் பொதுச் செயலாளருமான கவிதா ஸ்ரீவஸ்தவா மீது போலீஸ் நடவடிக்கைகள்! பல்வேறு தீவிரவாத வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பி.டி.பி அரசியல் கட்சியின் தலைவரும், நோயாளியும், ஊனமுற்றோருமான அப்துல்நாஸர் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 1 Comment »
Friday, September 16th, 2011
இந்தியாவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடுச்செய்து அமெரிக்க காங்கிரசினால் ரிசர்ச் சர்வீஸ்(சி.ஆர்.எஸ்) தயாராக்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விமர்சனங்களை ஊடகங்கள் விவாதத்திற்கு இடமாக்கியுள்ளன. அமெரிக்க காங்கிரஸின் சுதந்திர ஆய்வு பிரிவான சி.ஆர்.எஸ் அமெரிக்க கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமைகளை குறித்த ஆய்வறிக்கைகளை ஒவ்வொரு மாதமும் சமர்ப்பித்து வருகிறது. அமெரிக்காவின் தூதரக கேபிள்கள்களுக்கு சமமான இவ்வறிக்கை அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்குவதிலும், பல்வேறு நாடுகளுக்கிடையேயான உறவுகளை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கை ஆற்றிவருகிறது. கடந்த செப்டம்பர் 1-ஆம் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 2 Comments »
Wednesday, September 14th, 2011
பரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 6 Comments »
Monday, August 15th, 2011
இந்தியா அனைத்து வளங்களும் கொண்ட நாடு. இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நம் எல்லோருக்கும் கனவு இருக்கிறது. உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் இந்தியாவில் அந்தப் பாதிப்பு இல்லை. உலக அறிஞர்கள் இந்தியாவைப் புகழ்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அடிமை நாடு. சுமால் 200 வருட காலம் இந்தியாவை பிரிட்டிஷார் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இந்தியாவை மீட்பதற்கு சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கி வைத்தவர் சிராஜுத் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 2 Comments »
Tuesday, July 19th, 2011
கெட்டிக்காரன் தோற்றம்-இதுதான் ப.சிதம்பரத்தின் சிறப்பே! வாய் மொழியும், உடல் மொழியும் அவ்வாறே!’ செய்வன திருந்தச்செய்!’ இது சிதம்பரத்திற்கு முற்றிலும் பொருந்தும் பழமொழி. கொள்கை சரியில்லை என ஆதங்கபடுவோர் உண்டு. ஆனால், எனது கொள்கையே இது தான் என்பது ப.சிதம்பரத்தின் பார்வையாகும். இவை இரண்டிலும் எது சரி ஆனாலும் சிதம்பரம் கூறுவதில் தெளிவு உண்டு. அமைச்சர்களின் வழக்கமான அறிவு சூன்யத்திலிருந்து மாறுபட்டு காரியங்களை படிப்பார். சில நேரங்களில் படித்ததை விட படித்தவர் போல் நடிக்கவும் செய்வார். இத்தகைய கர்வத்துடன் [...]
Tags: விமர்சனங்கள்
Posted in பொது கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 7 Comments »
Tuesday, July 19th, 2011
’மார்க்கரீதியான ஒழுக்கத்துடனும், சமூக மரியாதைகளுடனும் நான் வளர்த்த என் பிள்ளைகள் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும், மனித தன்மையற்ற செயலிலும் பங்காளிகளாக மாட்டார்கள்.எனது பிள்ளைகள் குற்றவாளிகளா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்களாகும். அதற்கான வாய்ப்பை அளிக்காமல் இவ்வழக்கு காரணமின்றி இழுத்துக்கொண்டே செல்வதுதான் நாங்கள் அனுபவிக்கும் நீதி மறுப்பாகும் – இது ஒரு தந்தையின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வேதனையான வார்த்தைகள். தனது 5 பிள்ளைகளில் இரண்டு பேர் தேசத்துரோகம் உள்பட பல்வேறு கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு [...]
Posted in பொது கட்டுரைகள், முன்னையவை | 6 Comments »
Monday, July 18th, 2011
“நாம் தென் ஆஃப்ரிக்கா போல மாறப்போகின்றோம்; பொருளாதாரத் தடை கல்லை ஒவ்வொரு இஸ்ரேலிய குடும்பமும் உணரப்போகிறது” என்றார் மிகப்பெரும் வியாபாரப் புள்ளியான இடாம் ஒஃபர். கடந்த மே மாதம் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வர்த்தக பெரும்புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த வர்த்தக முதலைகளின் முக்கிய கவலை என்னவெனில், வரும் செப்டம்பர் மாதம் (2011) பலஸ்தீன் ஆணையம், ஐ.நா சபையின் பொதுக் குழுவில் பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என குரல் எழுப்பப்போகிறது என்பது தான். [...]
Posted in கட்டுரை, பொது கட்டுரைகள், முன்னையவை | 8 Comments »
Thursday, July 14th, 2011
உலகில் வன்முறைகள் பெருகிவிட்டன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், என அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மனித சமூகம். கலாச்சார சீரழிவினால் ஒட்டு மொத்த உலகமும் பாதிப்புக்குள்ளாகிறது. இது என்னுடைய கருத்தல்ல. மனித நேயம் கொண்ட, பகுத்தறியும் சக்தியில்லா விலங்கினங்களையும் பகுத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் திரண்படைத்த மனிதர்களையும் வேறுபடுத்தி காட்டும் சிந்திக்கும் திரண் கொண்ட சீரிய மனிதர்களின் எண்ணங்களில் உலாவிக் கொண்டிருக்கும் கருத்தாகும். இது போன்ற கலாச்சார சீரழிவுகள் மேற்குலகின் இறக்குமதி. பெண்களை போகப்பொருளாக்கி, வியாபார [...]
Posted in இஸ்லாம், கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 6 Comments »
Tuesday, July 12th, 2011
2002-குஜராத் இனப்படுகொலையின் ஆவணங்களை அழித்ததன் மூலம் மோடி, இந்திய ஜனநாயகத்தை குழி தோன்றி புதைத்து விட்டார். இவருக்கு யார் பதிலளிக்கப் போகிறார்கள்? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். நரேந்திர மோடியின் குஜராத்தில் நீதி தாமதிக்கப்படவில்லை மாறாக மறுக்கப்படுகின்றது; இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது. உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட இனப்படுகொலை நடந்து ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) ஆகும் பட்சத்தில் நீதியை கேலி செய்யும் செயல்கள் நிறுத்தப்படவில்லை. 2002 இனப்படுகொலை பற்றிய எத்தனை அரசு [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | Comments Off
Monday, July 11th, 2011
சாதாரண தமிழக அரசியல்வாதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றம். தமிழன் என்பதை ஓங்கி உரைக்கும் அடையாளங்கள் எதுவுமில்லை. கட்சிக் கொடியின் நிறத்தில் கரைவேட்டி, கதர் சட்டை, தோளில் ஒரு துண்டு சகிதம் முறுக்கிய மீசையுடன் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் நாடாளுமன்ற அவைகளின் இருக்கையில் முழித்து கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் எந்த கெட்டப்பும் இல்லாத மேனரிசம். சரளமாக நுனி நாக்கிலிருந்து வெளிப்படும் கான்வெண்ட் இங்கிலீஷ். அதுவும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆக்ஸண்டில்.கோட்டும், சூட்டும் கூடவே வெளிநாட்டு மூக்கு கண்ணாடியும் [...]
Tags: விமர்சனங்கள்
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 11 Comments »
Thursday, July 7th, 2011
மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் சட்டீஷ்கர் அரசு உருவாக்கிய ஸல்வாஜுதூம் என்ற ராணுவ படையை வெகு விரைவில் நிராயுதபாணியாக்கி, கலைத்துவிட வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகவும் வரவேற்க தக்கதுமாகும். வரலாற்றாசிரியரும், கட்டுரையாளருமான ராமச்சந்திர குஹா, பிரபல மருத்துவர் நந்தினி சுந்தர், இ.எ.எஸ்.சர்மா ஆகியோர் இணைந்து அளித்த மனுவில் உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தந்தேவாடா மாவட்டத்தில் மோர்பள்ளி, தட்மேட்லா, திம்மபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த மார்ச் [...]
Tags: விமர்சனங்கள்
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | Comments Off
Tuesday, June 28th, 2011
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது. உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து [...]
Posted in இஸ்லாம், கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 1 Comment »
Tuesday, June 28th, 2011
மாநிலங்கள் அவை உறுப்பினரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் சிறைவாசம் ஆரம்பித்து ஏறத்தாழ நாற்பது நாட்கள் ஆகிவிட்டன. மகள் சிறைக்கு சென்றதில் இருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டுகிறார், கவிதைகளை எழுதுகிறார், அறிக்கைளில் அழுகிறார் கருணாநிதி. ‘உங்களுக்கு ஒரு மகள் இருந்து செய்யாத தவறுக்கு அம்மகள் தண்டிக்கப்பட்டால் உங்கள் மனநிலை எந்த நிலையில் இருக்குமோ அதே நிலையில் நான் உள்ளேன்’ என்ற கருணாநிதியின் வார்த்தைகள் இனி பல காலங்கள் மக்கள் மனதில் இருந்து மறைய வாய்ப்பில்லை. [...]
Tags: விமர்சனங்கள்
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 18 Comments »
Sunday, June 19th, 2011
இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இல்லறம் சரியாக இயங்கினால் தான், நமது சமூகம் முறையாக இயங்கும். நாம் எத்தனையோ சகோதரர்களையும், சகோதரிகளையும் பார்க்கின்றோம். இல்லற வாழ்வில் இனிமை இல்லாது, சரியான தெளிவு இல்லாது தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பசுமையான பூமியில் தான் பயிர்கள் விளையும், கரடு முராடான பூமியில் முற்செடிகள்தான் விளையும். பசுமை [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 9 Comments »
Thursday, June 2nd, 2011
இளைஞர்களுக்குப் பிடிக்காதது, முதியர்வர்களுக்குப் பிடித்தது. தெரிந்தவர்களோ தெரியதவர்களோ எங்கு போனாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதும், அனைத்து காலங்களிலும் பொழியும் மழை அதுதான் “அட்வைஸ் மழை”. இங்கு போகாதே, அங்கு உட்காராதே, போனில் பேசாதே, கேம்ஸ் விளையாடாதே, அதைச் செய், இதைச் செய் என்று வீட்டில் தொடங்கி கல்லறை வரை சந்திக்கும் ஒவ்வொருவரும் பல விதங்களில் நமக்கு அறிவுரை வழங்குவதை பார்த்து இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம். சிலரைப் பார்த்தவுடன் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 7 Comments »
விமர்சனங்கள்