சிந்தனைக்கு
Friday, March 30th, 2012
“படைப்புகளிலே சிறந்த படைப்பாக நாம் மனிதனை படைத்திருக்கிறோம். ஆயினும் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.. இன்னும் தனக்குத் தானே தீங்கிழைத்தவனாகவே இருக்கிறான்.” இது இறைவனின் வாக்கு. இன்று வல்லரசை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவில் அமைந்துள்ள நீதித்துறை மாசுபடிந்து வருகிறது. நீதி என்பது இனம், நிறம்,குலம், சாதியை கடந்து அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் வழங்கப்படவேண்டும். கடந்த 27 மார்ச் அன்று வந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஓரினச் சேர்க்கை வேண்டும் என்கின்ற [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Friday, March 30th, 2012
கேள்விகள்… இன்று நாம் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக அழைப்பு பணியில் இருப்பவர்களுக்கு கேள்விகள் என்பது தவிர்க்க முடியாதது. பதில் சொல்வதும் ஒரு கலைதான் என்று சொல்ல வேண்டும். இன்று நம்மில் பலர் விளக்கமாக பதில் சொல்கிறோம் என்ற பெயரில் பல நிமிடங்கள் சுற்றி வருவதை கண்டு வருகிறோம். இவ்வாறு செய்யும் போது, சில சமயம் கேள்வி கேட்டவருக்கு தான் கேட்ட கேள்வி என்ன என்பதே மறந்து விடுகிறது. இல்லையென்றால் பதில் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Sunday, February 19th, 2012
வழக்கம் போல் அன்றும் பள்ளியை விட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் சுமையாவும் ஆயிஷாவும். பத்து ஆண்டுகளாக தொடரும் வழக்கம்தான் இது! இணைபிரியாத தோழிகள் என்று கூறுவோமே அதில் இவர்களும் அடங்குவர். வீட்டிற்கு செல்லும் வரை பல விஷயங்களை குறித்து இருவரும் கருத்து பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆன்மீகம் முதல் அரசியல் வரை இவர்களின் பேச்சு இருக்கும். பச்சப்பசேல் என்ற வயல்களுக்கு மத்தியில் உள்ள சாலையில் நடந்து செல்லும் போது அன்று பேச்சை ஆரம்பித்தாள் ஆயிஷா. “குஜராத் இனப்படுகொலைல [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Sunday, February 5th, 2012
பல நாடுகளில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் சமூக பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை, அது வெறும் அரட்டையடிப்பதற்கான இணைய வசதி மட்டும் தான் என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் மத்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அதன் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும், தேசிய நலத்திற்கு எதிரான செயல்களை கண்காணித்து தணிக்கை செய்வதற்குமான முயற்சியில் சட்ட வரைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எனது தமிழ் முகநூல் facebook நண்பர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக ஒரு குறிப்பிட்ட [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 5 Comments »
Tuesday, January 10th, 2012
இஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 2 Comments »
Tuesday, December 13th, 2011
சமீப ஆண்டுகளில் நமது நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்பின் சத்தம் அடங்குவதற்கு முன் அதனை செய்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் வேகமாக செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் அவசர அவசரமாக முஸ்லிம்களை கைது செய்தனர். மாநில காவல்துறை, தீவிரவாத எதிர்ப்பு படை, சிபிஐ என வழக்குகள் பல கைகள் மாறி இறுதியாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் அப்பாவிகள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். காவல்துறையில் உள்ள சில நல்லுள்ளங்களின் முயற்சியால் குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் இந்துத்துவ [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, தலைப்புச்செய்தி, முன்னையவை | 3 Comments »
Wednesday, November 30th, 2011
பத்து வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. நாடாளுமன்றத்தின் மீது, நாட்டின் இறையான்மை மீது, ஜனநாயக நெறிமுறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைவரும் கூறினர். உண்மையில் அத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது வேறு கேள்வி. ஆனால் அச்சம்பவத்தின் மூலம் அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக பாஜக, ஆதாயம் பெற்றனர். ஜனநாயகம், இறையான்மை என்று கூக்குரல் இட்டவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.? ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதும் ஏதேனும் ஒரு [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 1 Comment »
Tuesday, November 22nd, 2011
குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது. சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும். தற்போதுள்ள சூழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | Comments Off
Wednesday, October 12th, 2011
நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை. இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது. எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 1 Comment »
Sunday, October 9th, 2011
நாம் போட்டி நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதையும் சாதிக்க வேண்டும், அதிலும் வேகமாக சாதிக்க வேண்டும் என்ற வெறியை இந்த போட்டி உலகம் நமக்கு ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களை விட நாம் எப்போதும் ஒரு அடி முன்னே இருக்க வேண்டும் என்ற வேட்கைதான் தற்போது அனைவரின் மனதிலும் குடிகொண்டுள்ளது. ஒரு நிமிடம் பிந்தினால் கூட நாம் தோற்று விடுவோம் என்ற எண்ணத்தை அனைவரின் மனதிலும் இந்த போட்டி விதைத்துள்ளது. போட்டிகள் இருக்க வேண்டும், வெற்றி அடைய வேண்டும், [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 1 Comment »
Monday, September 12th, 2011
வாக்குவாதம் செய்வதில் நாம் அளவிட முடியாத சுகத்தை அனுபவித்து வருகிறோம். மணிக்கணக்கில் வாக்குவாதங்களை செய்ய ஆரம்பித்த நாம் தற்போது நாள் கணக்கிலும் வாதங்கள் செய்து வருகிறோம். ரமலான் மாதம் வந்து விட்டால் இந்த வாதத்தை மாதக் கணக்கில் செய்வதற்கும் நாம் தவறுவதில்லை. இதில் வேதனை என்னவென்றால், வாதம் செய்யும் நாமனைவரும் குர்ஆனை நமது துணைக்கு அழைத்துக் கொள்வதுதான். மாதக்கணக்கில் நாம் வாதங்களை செய்தாலும் எந்தவொரு முடிவையும் நம்மால் எட்ட முடியவில்லை. தவறான கருத்தில் உள்ளவர்களை நேர்வழிக்கு கொண்டு [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Tuesday, September 6th, 2011
சுதந்திர காற்று எல்லா மனிதனும் சுவாசிக்க விரும்புவது. பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு, சுதந்திரம் அடைந்து தற்போது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடுவது நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை. இந்தியாவில் ஏறத்தாழ இருபது சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் மீது அவர்கள் செய்யாத ஒரு குற்றம் பல ஆண்டுகளாக [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 5 Comments »
Monday, September 5th, 2011
உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம். சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது. [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 4 Comments »
Wednesday, August 3rd, 2011
பயணங்கள் எப்போதுமே அலாதியானவை. புதிய நபர்களின் சந்திப்பு, கலந்துரையாடல்கள் என புது அனுபவங்களை தருபவை. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பேருந்து பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. பேருந்தில் ஏறிய எனக்கு அருகில் அமர இடம் அளித்தார் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர். ‘மாமா’ என்று அன்புடன் அழைத்து பேச்சை ஆரம்பித்தார். முஸ்லிம்களை இந்த முறையில் அழைப்பது தமிழகத்தில் சில பகுதிகளில் வழக்கம். அவர் யாதவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டு அறிந்து கொண்டேன். [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 4 Comments »
Sunday, July 10th, 2011
குரோஷியாவில் கடந்த 1987-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்த மதேஜ் காஸ்பர் எனும் குழந்தையின் மூலம் உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. இந்த நினைவைப் போற்றும் விதத்தில் எல்லா வருடமும் ஜூலை மாதம் 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 200 கோடி மக்கள் வசித்திருந்த பூமி நூற்றாண்டின் இறுதியில் 600 மக்களாக மாறியது. இப்பொழுது மக்கள் தொகை 689 கோடியை தாண்டியுள்ளது. [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 1 Comment »
Monday, April 25th, 2011
‘உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர். நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ நாட்டின் தலைவரோ அல்ல. [...]
Posted in சிந்தனைக்கு, பொது கட்டுரைகள், முன்னையவை | 11 Comments »
Monday, April 18th, 2011
சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பெரும்பான்மையான வீதிகளில், குறிப்பாக சென்னையின் வீதிகளில் ‘மோடி’ வித்தை காட்டுபவர்களை நாம் பலரும் கண்டிருப்போம். அது என்ன மோடி வித்தை? இந்த கேள்வியை நாம் பெரியவர்களிடம் கேட்கும் போது, அதுதான் மாயாஜால வித்தை என்பார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் மோசடி வித்தை என்பதுதான் நாளடைவில் மோடி வித்தை என்று மாறியிருக்கும் என்பது நானே புரிந்து கொண்டது. இன்று இத்தகைய வித்தை காட்டுபவர்களை நாம் வீதிகளில் அவ்வளவாக காண முடிவதில்லை. அரசியலில் இன்று இதை [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Tuesday, April 12th, 2011
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கி விட்டது. பிரச்சாரம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மே 13 அன்று சில வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் அரசியல் காலம் முடிவுக்கு வரும். பரபரப்பாக உள்ள தேர்தலில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகமான வேட்பாளர்கள் இந்த முறை களம் காண்கின்றனர். ஷோசியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பாக ஏழு வேட்பாளர்களும், மனித நேய மக்கள் கட்சி (மமக) சார்பாக மூன்று வேட்பாளர்களும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மூன்று [...]
Posted in சிந்தனைக்கு, பொது கட்டுரைகள், மற்றவை, முன்னையவை | 4 Comments »
Monday, April 4th, 2011
ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் தூர்தர்ஷனை மட்டும் நாம் அறிந்த ஒரு காலகட்டத்தில் தினமும் செய்திகளுக்கென்று அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. உலக நடப்புகளை நாம் அறிந்து கொள்வதற்கு இது போதுமானதாக இருந்தது. சில வருடங்கள் கழித்து தனியார் தொலைக்காட்சி சேனல்கள் கணக்கில்லாமல் பெருக ஆரம்பித்தன. பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவற்றில் இருபத்து நான்கு மணி நேர செய்தி சேனல்களும் உருவாகின. பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே 24 மணி நேரமும் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | Comments Off
Monday, March 21st, 2011
சென்ற வாரம் நமது பகுதியில் தமிழக தேர்தல் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று எழுதினாலும் எழுதினோம், தற்போது தமிழக அரசியல் சூழல்; ஏகத்திற்கும் உச்ச உஷ்ணத்தில் உள்ளது. தொகுதி பங்கீடு சுமூகமான முறையில் சென்று கொண்டிருந்த அதிமுக கூட்டணி வெற்றியை நோக்கி செல்வதாகவே பெரும்பான்மையான மக்கள் கருதினர். இச்சூழலில்தான் அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் வழக்கமான ‘அதிரடியால்’ கூட்டணியே ஆட்டம் கண்டது. கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை, சென்ற முறை அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் எல்லாம் அதிமுக போட்டியிடும் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | Comments Off
Monday, March 14th, 2011
இப்படியொரு வெள்ளிக்கிழமை ஜப்பானியர்களுக்கு விடியாமல் இருந்திருக்கலாம். 140 வருடங்களில் இல்லாத அளவிற்கு இயற்கையின் பேரழிவு சுனாமி என்ற ஆழிப்பேரலையின் வடிவில் ஜப்பானின் வடகிழக்கு நகரமான செண்டாயை தாக்கியுள்ளது. 8.9 ரிக்டர் அளவில் பெரும் நில நடுக்கத்தினையடுத்து 02:46 பிற்பகல் உள்ளூர் மணியளவில் முதலில் சுனாமி தாக்கியுள்ளது. பின் தொடர்சியாய் அலையலையாய் தாக்கியுள்ளது அதனையடுத்து சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது. இன்று அதிகாலையிலேயே சென்னையை ஒரு சுனாமி தாக்குகிறது என்ற செய்தி அறிந்து தொலைக்காட்சி முன் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு | Comments Off
Monday, March 14th, 2011
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை [...]
Posted in சிந்தனைக்கு, முன்னையவை | Comments Off
Tuesday, March 8th, 2011
ஊழல்… எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நம் நாட்டில் மிகவும் மலிந்து விட்டது. இன்று எந்த ஊழல் வெளிப்படும் என்றுதான் தினமும் படுக்கையை விட்டு எழும்முன் நினைப்பு வருகிறது. ஊழல் செய்யப்பட்ட தொகைக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் வரும் என்று தலையை சொறியும் நிலையில்தான் அப்பாவி பொதுஜனம் உள்ளார். 1.76 இலட்சம் கோடி… இதனை எப்படி எழுதுவது என்று தெருக்கோடியில் நின்று கொண்டு அப்பாவி பொதுஜனம் யோசித்து கொண்டிருக்கும் போதே 2 லட்சம் கோடி ரூபாயில் இஸ்ரோ ஊழல் [...]
Posted in சிந்தனைக்கு | 1 Comment »
Tuesday, March 8th, 2011
சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார். அப்பொழுதுதான் ஒரு டயரின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார். அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு மனநிலை சரியில்லாதவர் என்ன விஷயம் என்று விசாரித்தார். பைத்தியத்திடம் சொல்லி என்ன பயன் என்று நினைத்தவர் சரி நம்முடைய [...]
Posted in சிந்தனைக்கு | Comments Off
Tuesday, March 8th, 2011
வெள்ளைமுடி, கன்னத்தில் சுருக்கம், மெலிந்த தேகம், உடமை என்று சொல்லிக் கொள்ள வியாதிகள், குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில்… இரவு பகல் பாராமல், வெயில், குளிர் என வேற்றுமை பாராட்டாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலரை நாம் தினந்தோறும் கண்டுவருகிறோம். சம்பாதிப்பதே அரை சாண் வயிற்றுக்குதான் என்றாலும் இவர்களில் பலர் நேரத்திற்கு உணவருந்துவதில்லை. மாத இறுதியில் கிடைக்கும் சம்பளத்திற்காக முன்பின் தெரியாதவர்களிடம் ஏச்சுகளையும் பேச்சுகளையும் கேட்கும் அவலம்… இவை அனைத்தையும் இவர்கள் சகித்து செல்வதற்கு எதற்காக? நான் நன்றாக [...]
Posted in சிந்தனைக்கு | Comments Off
விமர்சனங்கள்