கு​றுந்தொடர்

இனிக்கும் இல்லறம்-10

Saturday, March 10th, 2012
இனிக்கும்இல்லறம்1

சற்று இடைவெளிக்கு பிறகு இனிக்கும் இல்லறம் தொடரில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! ஹம்னா பின்த் ஜஹ்ஷ் என்ற நபித்தோழி, உஹது போர்க்களத்தில் இருந்து திரும்பிய நபி(ஸல்…) அவர்களை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா(ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா [...]

இனிக்கும் இல்லறம்-9

Monday, February 6th, 2012
இனிக்கும்இல்லறம்1

இல்லறம் இனிமையாக அமைவதிலும், மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டி எழுப்புவதிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை (Give and Take Policy) மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கிறது. இதில் தம்பதியினர் இருவரின் புரிதல்கள் அல்லது உள்வாங்கல்கள் ஆதிக்கம் செலுத்துவதை காணலாம். குடும்பத்தில்  ஏதேனும் ஒரு விவகாரத்தில் இருவருக்கும் இடையே வெவ்வேறான புரிதல்கள் நிலவலாம். இதனால் இங்கே கருத்தொற்றுமை ஏற்படாத சூழல் உருவாகும். ஒரு விஷயத்தை குறித்து இருவரும் புரிந்துகொண்டது முரணாக இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக சூழல்களை கருத்தில் கொண்டு இறங்கி [...]

இனிக்கும் இல்லறம் -8

Monday, January 23rd, 2012
இனிக்கும்இல்லறம்1

இன்றைய சமூக சூழலில் குடும்பத்திற்கு அந்தஸ்தை பெற்று தரும் காரணியாக பொருளாதாரம் மாறிவிட்டது. ஏனெனில் இன்றைய வாழ்க்கைப் போராட்டங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஆகவே குடும்ப வாழ்விலும் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சர்யமில்லை. இல்லறத்தில் மகிழ்ச்சி தொடர வேண்டுமானால் அதன் பொருளாதார கட்டமைப்பு வலுவுள்ளதாக இருப்பதோடு, ஒழுங்காக பேணப்படுதல் வேண்டும். குடும்பத்தின் வரவுக்கு ஏற்றவாறு செலவுச் செய்யும் மனைவி அமைந்துவிட்டால் குடும்ப மகிழ்ச்சி நீடிக்கும். இல்லையெனில் அங்கு குழப்பம் உருவாக சாத்தியக் கூறுகள் அதிகம்! [...]

இனிக்கும் இல்லறம் -7

Sunday, January 15th, 2012
இனிக்கும்இல்லறம்1

மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது எப்படி? ஒரு சமூகத்தில் தனிமனிதனுக்கு அடுத்த ரோலை வகிப்பது குடும்பங்கள் ஆகும். ஆகவே குடும்பத்தில் ஏற்படும் நேரான, எதிர்மறையான நடத்தைகள் அக்குடும்பம் சார்ந்திருக்கும் சமூகத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே, ஆண்-பெண் இருபாலரின் ஆளுமைத் தன்மைகள் இனங்காணப்படல் வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவனைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை தேடுபவனாகவும், மனைவியை பொறுத்தவரை அன்பை நேசிப்பவளாகவும் தங்களது இயற்கையான தன்மையை வெளிப்படுத்துகின்றனர். கணவனது தேடுதலும், மனைவியின் நேசித்தலும் ஆகிய இரு காரணிகளின் இறுதி விளைவு சந்தோஷமாக [...]

இனிக்கும் இல்லறம்–6

Sunday, January 8th, 2012
இனிக்கும்இல்லறம்1

அரபு மொழியில் வீட்டிற்கு ‘மகான்’ என்றதொரு பெயர் உண்டு. அதன் ஆழமான பொருள் அமைதி தவழும் இல்லம் என்பதாகும். செங்கற்களும், சிமெண்டும், மணலும் சேர்த்து அழகானதொரு வீட்டை கட்டினால் மட்டும் போதாது அந்த வீட்டில் வசிப்போர் இடையே அமைதி நிலவவேண்டும். அப்பொழுதுதான் அந்த இல்லம் அமைதி தவழும் இல்லமாக மாறும். லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து வீட்டை கட்டிவிட்டு அங்கே வசிப்போர் இடையே சண்டைச் சச்சரவுகள் நிலவி உறவுகள் சீர்கெட்டு குடும்பத்தில் அமைதி குலைந்தால் காசை செலவழித்து என்ன [...]

இனிக்கும் இல்லறம் -5

Saturday, December 31st, 2011
இனிக்கும்இல்லறம்1

கணவன்-மனைவி இவர்களுக்கான ரோல் என்ன? கணவன்-மனைவி இருவருக்குமே குடும்பத்தில் ஒரு ரோல் அல்ல பல ரோல்கள் காத்திருக்கின்றன. இது என்ன சீரியலா? சினிமாவா? ரோலைப் பற்றி பேசுகிறோம்! என உங்கள் மனதில் கேள்வி எழலாம்! ஆனால் குடும்பத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பல ரோல்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற நடிப்பு அல்ல. உண்மையிலேயே நீங்கள் உங்களது எதார்த்தமான நடிப்பை  வெளிப்படுத்துகின்றீர்கள்! பெற்றோருக்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக, உடன்பிறந்தவர்களுக்கு சகோதரனாக ஒருஆண் [...]

இனிக்கும் இல்லறம்-4

Sunday, December 25th, 2011
இனிக்கும்இல்லறம்1

இளைஞர் ஒருவர் தனது திருமணப் பிரச்சனை தொடர்பாக கவுன்சலர் ஒருவரை அணுகினார். அவரது பிரச்சனையை குறித்து விசாரித்து அறிந்தார் கவுன்சலர். இளைஞர் தனக்கு பிடித்தமான பெண்ணொருத்தியை திருமணம் செய்ய விரும்புவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். தாயாருக்கோ அப்பெண்ணின் பாணியும், பண்பாடும் பிடிக்கவில்லை. எனவே அவரை திருமணம் புரிவதை தான் விரும்பவில்லை என இளைஞரிடம் கறாராக தெரிவித்துவிட்டார். இந்நிலையில்தான் அவ்விளைஞர் கவுன்சலரை அணுகி எவ்வாறு தனது திருமண விவகாரத்தில் தாயின் சம்மதத்தை பெறுவது என்பது குறித்து ஆலோசனை கேட்டார். [...]

இனிக்கும் இல்லறம் – 3

Monday, December 19th, 2011
இனிக்கும்இல்லறம்1

இன்று நகரங்கள் தோறும் கவுன்சிலிங் சென்டர்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. கணவன்-மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் இத்தகைய மையங்கள் ஆங்காங்கே தோன்றிய பிறகும் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை. தீர்வு வழங்குவதும், ஆலோசனை கூறுவதும் எளிதானது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கலே எழுகிறது. தம்பதியர் இடையே மனமாற்றம் நிகழாமல் எத்தனை கவுன்சிலிங் சென்டர்களுக்கு சென்று ஆலோசனை பெற்றாலும் இல்லற வாழ்க்கையில் எந்த மாற்றமும் உருவாகாது. கவுன்சிலிங் சென்டருக்கு மனவள ஆலோசனை பெறப்போகும் கணவன்-மனைவி இருவரும் மனவளவாளருக்கு (கவுன்சலர்)முன்னால் [...]

இனிக்கும் இல்லறம் -2

Wednesday, December 14th, 2011
________________1

முந்தைய தொடரில் கண்ட ஜமால்-ஷமீமா கதையை சற்று மாத்தி யோசிப்போம்… சிணுங்கிக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்தாள் ஷமீமா. ஜமால் தனது அலுவலக எண்ணிலிருந்து தொடர்பு கொண்டிருந்தான். அவன் பேசுவதற்குள் தனது கேள்வியை ஆரம்பித்தாள்: ‘ஹலோ! நீங்க ஆபீஸ்ல இருந்து இன்னமும் கிளம்பலையா? நான் ரெடியாயிட்டேன்!’ ‘ஷமீமா! இன்னைக்கு என்னால வரமுடியாது போலிருக்கு! கோபப்படாதே! ப்ளீஸ்! நான் வீட்டுல வந்து பேசிக்கிறேன்!’ ஏமாற்றம் மேலிட அலைபேசியை கட் செய்தாள். ஜமாலுக்கு ஷமீமாவின் கோபம் புரிந்தது. இரவு தாமதமாகவே வீட்டிற்கு [...]

இனிக்கும் இல்லறம் – 1

Monday, December 12th, 2011
இனிக்கும்இல்லறம்1

இல்லறத்தில் இனிமையை இழக்காமலிருக்க… வழக்கம் போலவே அன்றும் லேட்டாகவே வீட்டிற்கு வந்தான் ஜமால். கேட்டை திறந்த அவனது மனைவி ஷமீமாவின் முகத்தில் கோபத்தை கண்ட பொழுதுதான் ஜமாலுக்கு புரிந்தது, இன்றும் நாம் வாக்கு தவறிவிட்டோமே என்று. ஜமாலின் முகத்தை கூட ஷமீமா பார்க்கவில்லை. அவன் மீது அவளுக்கு அவ்வளவு கோபம்! துபாயிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தனது அக்கா மற்றும் குழந்தைகளை காண செல்லவேண்டும் என கடந்த 2 வாரமாக ஜமாலிடம் கோரிக்கை வைக்கிறாள். ம்ஹும்! நடந்தபாடில்லை! ஜமாலிற்கு [...]