கட்டுரைகள்
Thursday, May 17th, 2012
உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது. தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. மக்கள் கூடுதலாக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொண்டு, குறைவான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | No Comments »
Tuesday, May 15th, 2012
இந்திய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று முன்தினம்(மே 13) 60-வது ஆண்டை எட்டியது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த பாதையை தேர்வுச்செய்ய வேண்டும் என்ற வாத பிரதிவாதங்களின் இறுதியில் பாராளுமன்ற ஜனநாயகமே சிறந்தது என்று கான்ஸ்ட்யூவண்ட் அஸெம்ப்ளி தீர்ப்பை எழுதியது. மக்கள் பிரதிநிதிகளின் அவையாக மக்களவையும்(லோக்சபா), மாநிலங்களின் ஒருங்கிணைந்த அவை என்ற நிலையில் மாநிலங்களவையும்(ராஜ்யசபா) இந்திய கட்டமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி உருவான இந்தியாவின் முதல் பாராளுமன்றம் மே 13-ஆம் தேதி [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள் | No Comments »
Sunday, May 13th, 2012
அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும். அம்மா என்றழைக்காத உயிரில்லையே! தாயின் சிறந்ததோர் கோயிலுமில்லை! என தாய்மையின் பெருமையை உணர்த்துவதற்கு இவ்வுலகில் பல்வேறு வகையான சொல்லாடல்கள் எடுத்தாளப்படுகின்றன. பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | No Comments »
Thursday, May 10th, 2012
பாரிஸ்:பிரான்சில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு(International Agency for Research on Cancer in Lyon) நடத்திய ஆய்வில் உலக அளவில் புற்றுநோய் வரும் நபர்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய் கிருமித் தொற்றுக்களினால் (Bacteria, viruses and parasites) ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மக்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித் தொற்றுகளினால் ஏற்படுகிறது என இந்த ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறெனில்,கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு கிட்டத்தட்ட [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 1 Comment »
Wednesday, May 9th, 2012
“வீடுகள் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போக அனுமதிக்க வேண்டும்.” – இப்படி ஒரு கோரிக்கையோடு சிலர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகினார்கள். எதிரிகள் மதீனாவை ஆக்கிரமிப்பதற்காக வந்து கொண்டிருந்த சமயத்தில்தான் இந்தக் கோரிக்கை வந்தது. மதீனாவைச் சுற்றிலும் குழியைத் தோண்டி முஸ்லிம்கள் காவல் நின்றார்கள். குழிக்கு அந்தப் பக்கம் எதிரிகள் படையெடுத்து வந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுடன் போரிடுவதற்கு சவால் விடுத்தார்கள். இதற்கிடையில்தான் சிலருக்கு தங்கள் வீடுகளுக்குப் போக வேண்டும் என்று [...]
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | No Comments »
Wednesday, May 9th, 2012
இயற்கைச் சூழலை அனுபவிக்காத நகர்ப்புற வாழ்க்கை காரணமாகவே பலருக்கு அலர்ஜி(ஒவ்வாமை) ஏற்படுவதாக பின்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் நகர்ப்புறம் சாராத பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில் அதிகம் காணப்படுவதாகவும், அத்தகைய சூழலில் வாழும் மனிதர்களுக்கு ஒவ்வாமை குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், அப்படியான பசுமை சூழலற்ற நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பயன் கிடைப்பதில்லை என்பதால் அத்தகையவர்கள் மத்தியில் ஒவ்வாமை அதிகரித்து காணப்படுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | No Comments »
Saturday, May 5th, 2012
இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக நாடுகளின் அணிகள் இடமாறின, போரால் உண்டான பேரிழப்பால் எதனையாவது செய்து இழந்த பொருளாதரத்தை மீட்க அத்தனை நாடுகளும் எத்தனித்தன. உலகப் போருக்கு அமெரிக்கா (சரியாக சொல்வதென்றால் யூதர்கள் ) தலைமையில் உருவாகிய புதிய பொருளாதார நிபுணத்துவ வர்க்கம் “வளர்ச்சி” என்னும் சொல்லாடல் மூலம் மொத்த உலகையும் வசீகரிக்க ஆரம்பித்தது. அவ்வளர்ச்சியில் எல்லேருக்கும் எல்லா பொருட்களையும் கிடைக்க செய்வது, எல்லோரையும் எல்லா பொருட்களையும் நுகர செய்வது சித்தாந்தமாகும், அது அவசியம் இருந்தாலும் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 2 Comments »
Thursday, May 3rd, 2012
இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள். 1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும். “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை, வரலாறு | 8 Comments »
Tuesday, May 1st, 2012
நாம் என்னென்ன செய்யலாம்? இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் செய்திகளை அள்ளித் தரும் மீடியாக்களை எதிர்கொள்ளவும், நமது நிலையைத் தெளிவுபடுத்தவும் நமக்கென்று பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள் ஆரம்பிக்கலாம். நாம் அடிக்கடி இதுகுறித்து சிந்திக்கிறோம். அதிகமாகப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். பெரிய பெரிய திட்டங்களைப் போடுகிறோம். ஆனால் செயல் என்று வரும்பொழுது அங்கே ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகக் கொஞ்சமான வேலைகளே நடக்கின்றன. மாற்று ஊடகம் குறித்த நமது செயல்திட்டம் தேசிய அளவிலும் இருக்கவேண்டும். நமது பகுதியின் அளவிலும் இருக்கவேண்டும். [...]
Posted in தொடர்கள், மீடியா உலகில் முஸ்லிம்கள், முன்னையவை | 2 Comments »
Monday, April 30th, 2012
“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?” “உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள். “அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?” -மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர். இடம்: யர்முக் யுத்தம். அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று [...]
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | 1 Comment »
Sunday, April 29th, 2012
ராமராஜ்ஜியத்தை உருவாக்க படாத பாடுபடும் கட்சியை லட்சுமணன் பாடாய் படுத்தியது ஒரு பழைய கதை. இது புராணம் ஒன்றும் இல்லை. பத்து ஆண்டுகள் மட்டுமே பழமையான கதை. அந்த கதையை குறித்து சிந்தித்தாலே பா.ஜ.கவுக்கு தூக்கம் கெடும். ஊழலில் புரளாத கட்சி என்ற இமேஜை வளர்த்திக்கொண்டு வந்த காலம். அது ஒரு கனா காலம். ஆனால், எல்லாம் தகர்ந்து போனது ஒரு ரகசிய கேமரா ஆபரேசன் மூலம். சட்டைப் பையில் மறைத்து வைக்கும் அளவிலான கேமரா மூலம் [...]
Posted in கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 4 Comments »
Wednesday, April 25th, 2012
குடியரசு தலைவர் மாளிகையில் பிரதீபா பாட்டீலின் சுக வாழ்வு ஜூலை மாதம் முடிவுக்கு வருகிறது. அடுத்து யார்? என்பது தான் தற்போதைய அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் டாபிக். தங்களின் கட்டளைக்கு இணங்கும் நபர்தாம் குடியரசு தலைவராக வரவேண்டும் என்பதை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி விரும்பினாலும், சொந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றிப் பெறுவதற்கான பலம் அவர்களுக்கு இல்லை. எலக்டோரல் காலேஜில் மொத்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 10,98,882 [...]
Posted in கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 3 Comments »
Tuesday, April 17th, 2012
கடந்த முறை ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) என்றால் என்ன அதன் தீவிரம் என்ன என்பது பற்றிப் பார்த்தோம். இந்தவாரம் குறட்டை மற்றும் ‘ஸ்லீப் ஆப்னியா’வுக்கான சிகிச்சை முறைகள் பற்றி பார்ப்போம். குறட்டை சாதாரணமானதா அல்லது ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன. அதனால், குறட்டையின் தன்மையைக் கண்டுபிடிப்பதற்கு ‘ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரிசோதனை முறையை முதலில், மேற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால், மூச்சு ஓட்டம் [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Thursday, April 12th, 2012
2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் வேளையில் நிகழ்த்தப்பட்ட குல்பர்கா ஹவுஸிங் சொசைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டி மோடிக்கும் அவரது தோழர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. குஜராத் வீதிகளில் முஸ்லிம்களின் உயிர்களும், மானமும், சொத்துக்களும் சூறையாடப்பட்ட வேளியில் கர்ண கொடூரமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலைகளில் ஒன்றுதான் குல்பர்கா ஹவுஸிங் கூட்டுப் படுகொலை. இங்கு பெண்களும், குழந்தைகளும் உள்பட 69 பேரை மிருகத்தனமாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். [...]
Posted in விமர்சனங்கள் | Comments Off
Monday, April 9th, 2012
மனிதனை மனிதனாக வாழ வழிவகுப்பதற்கும், அவனது வாழ்வில் தரத்தை உயர்த்துவதற்கும் கல்வியினுடைய தேவை இன்றியமையாததாகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வியினை போதிப்பதற்கென்றே இன்று இலட்சக்கணக்கான கல்விக் கூடங்களும் பலகலைக் கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் யுகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய பாடத் திட்டங்களும் புதிய துறைகளும் மனிதனின் தேவைக்கேற்ப உருவாகிக்கொண்டே வருகின்றது. உதாரணமாக மருத்துவக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு காலத்தில் பொது மருத்துவம் என்ற தலைப்பில் இருந்த நிலையெல்லாம் நரம்பியல் [...]
Posted in தொடர்கள், முன்னையவை, வரலாற்றின் வேர்கள்! | 4 Comments »
Monday, April 9th, 2012
கட்சி செயல்பாடுகளை குறித்து இதர அரசியல் கட்சிகளில் இருந்து மாறுபட்டு உண்மையான தகவல்களின் அடிப்படையில் மீளாய்வு செய்து தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பண்பு இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும். பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் மாபெரும் மாநாடுகளை நடத்தும் வேளையில், நீண்ட நேர உரைகளை எதுகை, மோனையுடன் ஆற்றி, தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களை ஆவேசப்படுத்தி நாம் செய்வது அனைத்தும் நல்லதே! என்ற திருப்தியுடன் முடித்துக்கொள்வதுதான் வழக்கம். ஆனால், கம்யூனிஸ்டுகள் சற்று வித்தியாசமானவர்கள். [...]
Posted in கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 3 Comments »
Wednesday, April 4th, 2012
‘ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)’ இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடவே இரத்த அழுத்தம், சர்க்கரைப் பாதிப்புகளும் இருந்தால், அவர்கள் முதலில் ஸ்லீப் ஆப்னியா நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே அவர்களால் ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் கட்டுப்படுத்த முடியும்! அது என்ன ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)? தூக்கத்தின்போது மூச்சு நின்றுவிடுவது ஸ்லீப் ஆப்னியா(sleep apnea). ஸ்லீப் ஆப்னியா நோயின் முக்கிய அறிகுறி குறட்டை. ஆனால், குறட்டை பிரச்னை இருக்கும் எல்லோருக்கும் ‘ஸ்லீப் ஆப்னியா’ நோய் இருக்கிறது [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 1 Comment »
Tuesday, April 3rd, 2012
வழக்கத்திற்கு மாறாக அன்று நான் மிகவும் குழம்பிய நிலையில் என்னுடைய அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த குழப்பத்திற்கான காரணத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று என்னுடய மனம் எண்ணியது. மதிய இடைவேளை அப்போது. என்னுடைய நண்பன் அமீர் எனதருகில் வந்து “நீ ஏதோ குழம்பிய நிலையில் உள்ளாய். அதற்கான காரணம் என்ன?” என்று வினவினான். எனக்கோ ஒரு ஆறுதல் வந்தது போல, “ஆம். நானும் காலையில் தினசரிகளை புரட்டிய பிறகே என்னுடைய அலுவல்களை தொடங்கினேன். இன்றைய ஒரு [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 4 Comments »
Tuesday, April 3rd, 2012
தெற்காசியாவில் தூதரக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை வகிக்கும் தேசம் முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மர். உலகில் இரு பெரும் பொருளாதார சக்திகளாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மத்தியில் மியான்மரின் இடம் அமைந்துள்ளது. அதிகமான இயற்கை வளமும், மனித வளமும் மியான்மரின் சிறப்பாகும். அதன் வரலாறும், கலாச்சாரமும் தெற்காசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் இதர நாடுகளைப் போலவே வளமானதும், மிகவும் பழமையானதுமாகும். துரதிர்ஷ்டவசத்தால், ஆசியாவில் இந்தியா, சீனாவுடன் ஏன் மக்கள் தொகையிலும், புவியியல் [...]
Posted in கட்டுரைகள், பொது கட்டுரைகள், முன்னையவை | 1 Comment »
Sunday, April 1st, 2012
அணுமின் சக்தி துறை குறித்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல 2032-ஆம் ஆண்டு அணுமின்சக்தியின் உற்பத்தியை 62 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்படும் என்பதும் மன்மோகன்சிங்கின் பிரகடனத்தில் அடங்கிய முக்கிய வாக்குறுதியாகும். அணுகதிர் கசிவை தடுக்கும் உயர் தொழில்நுட்ப வசதிகளை குறித்தும் நமது பிரதமர் பேசுகிறார். அதைப் போலவே சுதந்திர பொறுப்பை வகிக்கும் ‘நியூக்ளியர் ஸேஃப்டி ரெகுலேட்டரி அதாரிட்டி’ அதாவது அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவும் [...]
Tags: விமர்சனங்கள்
Posted in கட்டுரைகள், முன்னையவை, விமர்சனங்கள் | 1 Comment »
Sunday, April 1st, 2012
புதுடெல்லி:கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் உடல் பருமன், நீரழிவு(சர்க்கரை வியாதி) நோய்களுக்கு(obesity and diabetes) காரணமான ட்ரான்ஸ் ஃபேட், இனிப்பு மற்றும் உப்பின்(rans-fats, salts and sugar) அளவு [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Friday, March 30th, 2012
“படைப்புகளிலே சிறந்த படைப்பாக நாம் மனிதனை படைத்திருக்கிறோம். ஆயினும் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.. இன்னும் தனக்குத் தானே தீங்கிழைத்தவனாகவே இருக்கிறான்.” இது இறைவனின் வாக்கு. இன்று வல்லரசை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவில் அமைந்துள்ள நீதித்துறை மாசுபடிந்து வருகிறது. நீதி என்பது இனம், நிறம்,குலம், சாதியை கடந்து அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் வழங்கப்படவேண்டும். கடந்த 27 மார்ச் அன்று வந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஓரினச் சேர்க்கை வேண்டும் என்கின்ற [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Friday, March 30th, 2012
சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின. நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!” தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர். [...]
Tags: மனதோடு மனதாய்
Posted in தொடர்கள், மனதோடு மனதாய், முன்னையவை | Comments Off
Friday, March 30th, 2012
கேள்விகள்… இன்று நாம் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக அழைப்பு பணியில் இருப்பவர்களுக்கு கேள்விகள் என்பது தவிர்க்க முடியாதது. பதில் சொல்வதும் ஒரு கலைதான் என்று சொல்ல வேண்டும். இன்று நம்மில் பலர் விளக்கமாக பதில் சொல்கிறோம் என்ற பெயரில் பல நிமிடங்கள் சுற்றி வருவதை கண்டு வருகிறோம். இவ்வாறு செய்யும் போது, சில சமயம் கேள்வி கேட்டவருக்கு தான் கேட்ட கேள்வி என்ன என்பதே மறந்து விடுகிறது. இல்லையென்றால் பதில் [...]
Posted in கட்டுரைகள், சிந்தனைக்கு, முன்னையவை | 3 Comments »
Thursday, March 29th, 2012
புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
விமர்சனங்கள்