You are here
Home > முன்னையவை (Page 2)

சபரிமலை போராட்டம் நடைபெறும் பத்தனம்திட்டாவில் சிபிஎம், பாஜகவை நிராகரித்த மக்கள்! – எஸ்.டி.பி.ஐ. வெற்றி!

கேரளாவில் 14 மாவட்டங்களில் 39 வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கூட்டணி 19 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களைக் கைப்பற்றியது. எஸ்.டி.பி.ஐ மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தலா இரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆலப்புழா புன்னபரா தெற்கு பஞ்சாயத்து 10வது வார்டு தேர்தலில், SDPI கட்சியின் வேட்பாளர் 440 வாக்குகளை பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் (காங்கிரஸ்+முஸ்லிம் லீக்) 308 வாக்குகளையும், இடது முன்னணியின் சிபிஎம் வேட்பாளர்

சிபிஐயின் அடுத்த குறி ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்!

ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா ஹரியானா மாநிலத்தின் மறுவாழ்வுத் திட்டத்தினை ஒதுக்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா, மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா மற்றும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) என்ற நிறுவனத்தின் மீதும் எதிராக குற்றபத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் ஒருபோதும் மோடியை மன்னிக்கவே மாட்டேன்! – ஜக்கியா ஜஃப்ரி!

குஜராத் கலவரத்தின் போது குல்பர்க் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜக்கியா ஜஃப்ரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கப்படுகிறது. குஜராத் 2002 கலவர வழக்கில், பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜக்கியா ஜஃப்ரி மற்றும் அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இந்த கலவரத்திற்கு பின் ஒரு பெரிய சதி

VHPயின் கூட்டத்தால் அயோத்தியில் பரபரப்பு! – காவல்துறை குவிப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பினர் சார்பில் நாளை தர்மசபை கூட்டம் நடைப்பெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூட்டத்தில்  கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிவசேனா கலந்துகொள்ளாமல் விலகி நிற்கிறது. இந்த இருகூட்டங்களினால் உபி போலீஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் சட்டம் ஒழுங்கை காப்பதுடன் தீவிரவாத தடுப்பு படை மற்றும் மத்திய அரசின் கூடுதல் பாதுகாப்பு படைகளும் அமர்த்தப்பட்டுள்ளன. கூட்டத்தினரை கண்காணிக்க ‘டிரோன்’ எனும்

டெல்லி ஜமா மசூதியை இடியுங்கள் ! – பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சர்ச்சைப் பேச்சு!

உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார். அதாவது டெல்லியில் உள்ள ஜமா மசூதியை இடித்தால் மாடிப்படியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலை இருக்கும் என்று பேசியுள்ளார். மேலும் இடித்துப் பார்த்து அங்கு சிலைகள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. “நான் அரசியலில் நுழைந்த போது நான் மதுராவில் என் முதல் அறிக்கையை வெளியிட்டேன். அயோத்தி, காசி, மதுராவை விட்டு

இந்துத்துவா அமைப்பின் சதிகளை தகர்த்த இசை கலைஞன்!

கர்நாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் என்ற பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் டி.எம். கிருஷ்ணா. கர்நாடக இசை என்பது அனைவருக்கும் உரிய இசை என்ற எண்ணத்தில் தீராத தீர்க்கமான பிடிப்பினை உடையவர் டி.எம். கிருஷ்ணா. மகசேசே விருது பெற்ற இந்த இசைக் கலைஞரின் சமூக செயல்பாடுகள் தொடர்ந்து வலதுசாரி அமைப்புகளையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் சற்று அச்சத்திற்கு உள்ளாக்கியது என்று தான் கூற வேண்டும். ஆகஸ்ட் மாதம் கர்நாடக இசைக் கலைஞர்

கஜா’ புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை திமுக அறிவிப்பு!

'கஜா' புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு, உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளால் அம்மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த கால பேரிடர்களில் இருந்து அதிமுக அரசு எவ்வித பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், 'கஜா' புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் முஸ்லிம் பெண் வேட்பாளர்!

எதிர்வரும் மாதங்களில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை காங்கிரஸ் முன்னதாக வெளியிட்டது. இதனையடுத்து பாஜக சார்ர்பில் பாத்திமா ரஸூல் சித்திக் என்ற முஸ்லிம் பெண் வேட்பாளரை வடக்கு போபால் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க தனது வேட்பாளராக களமிறக்கிறது. முன்னதாக அவரது தந்தை ரசுல் சித்திக் ஒரு மூத்த காங்கிரஸ்  கட்சி தலைவர். 1980 மற்றும் 1990களில் இரண்டு முறை மாநில அமைச்சகத்தில்

புதிதாக நியமிக்கபட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களே!

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மகளிர் ஆணையத்தின் ஆணையத்தலைவர் ரேகா ஷர்மா வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த சில வருடங்களாக காலியாக இருந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவிகள் மூன்று நபர்களை கொண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து தீர்வளிக்கும் வழிவகையில் உருவாக்கப்பட்டது தான் தேசிய மகளிர்

ட்விட்டர் நாட்டின் ஜனநாயகத்திற்கே கேடு! – மாணவி ராஷித் குற்றச்சாட்டு!

ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்திலிருந்து எல்லோரையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் தான் ஆய்வுபடிப்பு மாணவி ஷீஹ்லா ராஷித். இப்போது காஷ்மீர் அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார். சமீபத்தில் ட்விட்டரிலிருந்து வெளியேறியவர், “மதம், அரசியல் சிந்தனையின் அடிப்படையில் அத்துமீறி பின்னூட்டம் இடுவது ட்விட்டரில் அதிகரிக்கிறது” என்கிறார். மேலும் இதுமாதிரியான நடவடிக்கைகல் நாட்டின் ஜனநாயகத்துக்கே கெடுதலானது என்று ட்விட்டரைச் சாடியிருக்கிறார் ஷீஹ்லா ராஷீத். “ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது வெறுப்பைக் கக்கும் ட்வீட்டுகள், பின்னூட்டங்களைப் பார்க்க நேர்கையில் மனது சோர்ந்துவிடுகிறது. இது

Top