You are here
Home > தொடர்கள்

வளர்பிறை – 3

வாழ்வின் பாதிநாள் அடுப்படியும், மீதி நாள் அடுப்புப் புகையுமே ஹாஜராம்மாக்கு கதி என்று ஆகி விட்டதால் கொஞ்சம் கொஞ்சமாய் வறட்டு இருமல் வந்து போனது. முஸ்தஃபா பல முறை டாக்டரிடம் போய் காண்பிக்கலாம் வாங்க என்று கூப்பிட்டும் ஹாஜராம்மா மறுத்து விட்டார். “சரியாகிடும்பா... இதுக்குலாமா ஆஸ்பத்திரி போவாங்க?” என்று சொல்லி நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போய்விட்டார். அன்றைக்கு ஒரு நாள் அதிகமாக இருமல் இருந்ததால் முஸ்தஃபா “வாங்க போகலாம்” என்று கையோடு

வளர்பிறை – 2

முஸ்தஃபா கொஞ்சம் கொஞ்சமாக குடும்பச் சூழ்நிலையையும், தனது பொறுப்பையும் அந்தச் சிறு வயதிலேயே உணர ஆரம்பித்தான். ஹாஜராம்மா வீட்டிலேயே காலையில் இட்லி, மாலையில் பலகாரம் போன்றவை தயார் செய்து கொடுப்பார். முஸ்தஃபா அதை தெருவில் விற்பனை செய்து வருவதும், விடுமுறை நாட்களில் ஊரில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை பார்ப்பவர்களுக்கு உதவியாகவும் சென்று வருவான். இப்படியே 12ம் வகுப்பும் முடிந்தது. முஸ்தஃபா : அம்மா... நான் மேற்கொண்டு படிக்கல. தினமும் வேலைக்கு போன என்னால

அபூபக்கரின் அறுதி நிலைப்பாடு!

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். இஸ்லாத்திலிருந்து பலர் வெளியேறும் செய்திகள் நாலாபுறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தன. முஸைலமாவைப் போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று

வளர் பிறை – 1

வாழ்வில் வரும் கஷ்டங்களிலும் புன்னகைக்க பக்குவப்பட்ட மனிதர் காதர் பாய். அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் ஆயிஷா. அடுத்தவன் முஸ்தஃபா. இளையவள் சுமையா. அழகான குடும்பம். குறைந்த வருமானத்திலும் சிறப்பாக குடும்பத்தைக் கொண்டு செல்லும் அறிவான மனைவி ஹாஜரா. அழையா விருந்தாளியாக அடிக்கடி வந்து போகும் கடன் சுமை. இதுதான் அவரது உலகம். அவரைப் போலவே அவரின் மனைவி ஹாஜராவும், மூத்த மகள் ஆயிஷாவும் ஏழ்மை வாழ்க்கையைப் பொருந்திக் கொண்டதுதான் அவர்களின்

பதவிகள் பறிக்கப்படும்பொழுது…

“நீங்கள் எனக்கு அமைத்துத் தந்த அதிகாரம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நீங்கள் என்னிடமிருந்து அந்த அதிகாரத்தைப் பறித்தெடுத்தது எனக்குத் துக்கத்தையும் தரவில்லை.” காலித் இப்னு ஸஈதின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்தது. படைத் தலைவர் பதவியிலிருந்து அவரை மாற்றியதற்கான காரணத்தை நேரில் விளக்குவதற்காக வீட்டுக்கு வந்திருந்த கலீஃபாவிடம்தான் அவர் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக அங்கீகரிக்க ஆரம்ப கட்டத்தில் தயக்கம் காட்டினார் காலித் இப்னு ஸஈத். ஹஸ்ரத்

சாம்ராஜ்யங்களின் சரிவு!

"உங்களை விட எண்ணிக்கையில் குறைந்தவர்களும், உள்ளுக்குள் அடித்துக் கொள்பவர்களும் உலகில் யாராவது இருப்பார்களா? நீங்களா என்னை பயமுறுத்துகிறீர்கள்?" ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரதிநிதிகளிடம் பாரசீகச் சக்கரவர்த்தி இவ்வாறு கூறினார். எல்லையில் இஸ்லாமியப் படை முகாமிட்டிருந்தது. போரைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சக்கரவர்த்தியைக் காண வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை அதிக வெறுப்புடன் பார்த்தார் பாரசீகச் சக்கரவர்த்தி. "வாழ்க்கைச் சிரமங்களும், கஷ்டங்களும் இருப்பதனால் ஏதாவது சாகசம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருந்தால்

வரலாற்றின் வேர்கள்: கல்வித்துறை​-2

கல்வித்துறை-2: இன்றைய கல்வித்துறையில் பள்ளிக் கூடங்களின்(School) பங்கு முக்கியமானது. தற்போதுள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் பள்ளிக் கல்வியே ஒருவருடைய கல்வி வாழ்க்கைக்கு அஸ்திவாரம் ஆகும். இதன் அடிப்படையிலேயே இன்று பள்ளி கல்வியானது தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டதோடு அல்லாமல் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையும் பல இலட்சமாக உயர்ந்துள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகூடங்களை காண்பது என்பதே பாலைவனத்தில் தண்ணீரை காண்பதற்கு சமமாக

அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்

ஹுனைன் யுத்தம் நடந்தபொழுது முஸ்லிம்களுக்கு நிறைய கனீமத் பொருட்கள் கிடைத்தன. அந்தப் பொருட்களைப் பங்கீடு செய்யாமல் அதனைப் பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு அண்ணலார் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாயிஃப் நோக்கி தங்கள் படையுடன் புறப்பட்டார்கள். திரும்பி வரும்பொழுது முஸ்லிம் படை ஜிஃரான் என்னும் இடத்தை அடைந்தது. போரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் அங்கேதான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பொருட்களைக் கணக்கெடுப்பதற்காக அண்ணலார் ஆளை நியமித்தார்கள். கணக்கெடுப்புக்குப் பின் அந்தப் பொருட்கள் அனைத்தும் ஐந்து பாகங்களாகப்

மீடியா உலகில் முஸ்லிம்கள்–35

ஒரு நாளிதழையோ, பருவகால இதழையோ தொடங்குவதற்கு சட்ட ரீதியாக என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் காண்போம். இந்தியாவில் நாளிதழ்களையும்,பருவகால இதழ்களையும் அச்சடிப்பதும், வெளியிடுவதும் "புத்தகங்களின் அச்சு மற்றும் பதிவுச்சட்டம், 1867" (Pressand Registration of Books Act, 1867), "நாளிதழ்களின் பதிவு (மத்திய) விதிகள், 1956" (Registration of Newspapers(Central) Rules, 1957) ஆகியவற்றின் கீழ் வருகின்றன. இந்தச் சட்டத்தின்படி, ஒரு மொழியில் அல்லது ஒரு மாநிலத்தில் எந்தப் பத்திரிகையின் பெயரும் ஏற்கனவே வெளிவரும்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –34

வானொலி நிலையங்கள் (Radio Stations) இன்று தனியார் நிறுவனங்கள் FM என்ற பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், பொருளாதாரத்துடனும் நாமும் பண்பலை நிலையங்களை பாங்காக நடத்தலாம். இன்று பெரும்பாலான பண்பலை வானொலிகள் பெரும்பாலும் சினிமா பாடல்களையும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையுமே நடத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்றி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை நாம் கொடுக்கலாம். அன்றாடச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அழகுற

Top