You are here
Home > இஸ்லாம் > கட்டுரை (Page 2)

“தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” ஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 72 விலை: 45/- இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பதுதான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாததே. இது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற

“ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” ஆசிரியர்:   B. ரியாஸ் அஹமது MBA வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 152 விலை: 100/- ஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் நயவஞ்சக யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது. யூதர்களின் குறுமதியால் ஃபலஸ்தீன மக்கள் கைசேதப்பட்டு நின்றார்கள். தொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை

கலை என்பது எதைக் குறிக்கிறது?

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில்

மரணத்தை நோக்கிய பயணம்!

சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மஸ்ஜிதில் வைத்து நடைபெற்ற அந்தத் திருமண நிகழ்ச்சியில், மவ்லவி குத்பா உரை நிகழ்த்தினார். திருமணம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், மணமகனுக்கும், மணமகளுக்கும் பயன்படக்கூடிய உபதேசங்கள், அறிவுரைகள் என்று சொல்லிக் கொண்டே வரும் போது முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறினார்: இன்று நாம் திருமண வைபவத்திற்காக ஒன்று கூடியுள்ளோம். திருமண வீட்டார் நமக்கு “கல்யாண அழைப்பு” தந்ததால் வந்துள்ளோம்.

எறும்பிடம் கற்க வேண்டிய பாடங்கள்!

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி), ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும், அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27) இந்த வசனத்தில் எறும்புக் கூட்டத்தின் தலைமை எறும்பு கீழுள்ள எறும்புகளுக்கு, “சுலைமான் நபியின் படை வருகின்றது. நாம் அனைவரும் புதருக்குள் சென்று விடுவோம்” என்று கூறியது. உடனே

‘ஹயா’வும் நம்பிக்கையும்!

இமாம் ஷீஃபாஹ் இப்னு ஹஜ்ஜாஜ் அவர்கள் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்துல்லாஹ் அவரை இடைமறித்தான். அப்துல்லாஹ் ஒரு விஷமக்காரன் என்று எல்லோருக்கும் தெரியும். அவன் பாவத்திலேயே ஊறித் திளைத்தவன். தனது வாழ்க்கையையே பாவத்தால் சமைத்துக் கொண்டவன். அது பற்றி நாணமோ, வெட்கமோ சிறிதும் இருந்ததில்லை. அப்துல்லாஹ் இடைமறித்ததும் இமாம் ஷீஃபாஹ்வுக்கு இப்பொழுது ஒரு பிரச்னை காத்திருக்கிறது என்று தெரிந்து விட்டது. இமாம் ஷீஃபாஹ் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீத்’

இஸ்லாம் சொல்லும் நீதி!

இஸ்லாமியச் சட்டங்கள் அனைத்திலும், இஸ்லாமியப் போதனைகள் அனைத்திலும் நாம் ஒரு வார்த்தையைக் காணலாம். அந்தப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் இஸ்லாமிய விழுமியங்களை அந்த வார்த்தைதான் விவரிக்கும். அதுதான் “நீதி” என்ற வார்த்தை! அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் கூறுகிறது: நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். (அல்குர்ஆன் 57:25) இறைத்தூதர்கள் இந்த உலகுக்கு அனுப்பப்பட்டதே நீதியை

மன அமைதியைப் பெறுவது எப்படி?

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. (அல்குர்ஆன் 13: 28) ஆம்! மேற்சொன்ன இறைவசனம் மனிதர்களுக்கு நிம்மதியைப் பெற வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது. இன்று மனிதர்கள் எவ்வளவோ வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பத்தின் மூலமும், பொருளாதாரத்தின் மூலமும் எவ்வளவோ முன்னேறி விட்டான். தங்களுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. இதையெல்லாம் வைத்து மனிதனால் எவ்வளவோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவுக்கு,

சமூகத்தை வழிகெடுக்க ஒரு திட்டம்!

இந்த உலகில் பல மதங்கள் தோன்றியது. ஆனால் அதன் பொய் நிலையைப் பார்த்து மக்கள் அதை விட்டு விலகி அந்த மதம் அழிந்து விட்டதை நாம் பார்த்து இருக்கிறோம். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கம் இன்றும் தனிச் சிறப்பும் புகழும் உடைய மார்க்கம். இன்றும் மக்கள் அணி அணியாக இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். காரணம், இஸ்லாத்தில் மட்டும்தான் அவர்களுக்கு சம உரிமையும், சகோதரத்துவமும் உண்டு என்று

நமக்கும் மீடியாவிற்கும் என்ன தொடர்பு?

கடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. செய்தி ஊடகங்களே இப்பொழுது நடப்பவற்றை விரிவாகச் சொல்கின்றன. பின்னால் நடக்கவிருப்பவற்றையும் யூகித்துக் கூறுகின்றன. முந்தைய காலங்களில் நடந்த போர்கள் சில வேளை மாதக் கணக்கில் கூட இழுக்கும், போர்த் தளபதிகளுக்கு செய்திகள் உரிய நேரத்தில் சென்று கிடைக்காததால். ஆனால் இன்று அப்படியல்ல. செய்தி ஊடகங்கள் இந்த உலகத்தையே நமது வாசற்படிகளில்,

Top