You are here
Home > இஸ்லாம் > கட்டுரை

காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு?

இளம் ஆண், பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ளவும், ஏற்கனவே அறிவித்த காதலர்கள் கடற்கரை, பூங்கா, சினிமா என்று சுதந்திரமாகச் சுற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட தினம்தான் இந்தக் காதலர் தினம். இந்தக் கலாச்சாரம் இன்று முஸ்லிம்களிடமும் பரவியிருப்பதுதான் ஆச்சரியம். இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அன்னியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றில் இந்தக் காதலர் தினத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ‘வேலன்டைன்ஸ் டே’ (Valentines Day) என்பதுதான் இதன் மூலப் பெயர். அதனை அப்படியே மொழிபெயர்த்தால் ‘வேலன்டைன் தினம்’ என்றுதான் வரும்.

வீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்கா?

ஓலை உலகம் எப்போதோ ஓடிப் போய் விட்டது! புத்தக உலகம் இன்னும் சில வருடங்களில் புதைந்து விட காத்திருகின்றது. இதோ,  இப்போது இன்டர்நெட் உலகம், நம் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு - மன்னிக்கவும் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது! இது நல்ல பழக்கம்தானா? காலையில் எழுந்ததும் face ஐ கழுவுவதற்கு பதில், facebook இல் கழுவி குடிக்கின்றோம். டிஃபன் பட்டர் ஐ அசை போடுவதற்கு முன் ட்விட்டெரை அரைக்கின்றோம்! அரைமணி நேரம் ரோட்டில்

“26/11 விசாரணை : நீதித்துறையும் தோற்றது ஏன்?” – நூல் அறிமுகம்

கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதம், மும்பையில் தாக்குல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் செய்தனர் என்றும், அவர்கள்தான் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தினர் என்றும் காவல்துறையும், உளவுத்துறையும் கூறின. ஆளும் அரசாங்கமும் அதற்கு தலையாட்டியது. அதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பு

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?

ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது. அவருடைய இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது. அது யாரை வேண்டுமானாலும் ஊடுருவும். நாளை இளயராஜாவே இஸ்லாத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. “இது ஏதோ திடீரென்று எடுத்த முடிவல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஆய்ந்தறிந்து, ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு” என்று டெக்கான்

பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல!

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (சூரா அத்தாரியாத் 51:56) அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் அவர்கள் அவனுக்கு வழிபட வேண்டும், ஷைத்தானிய வழியிலிருந்து விலக வேண்டும், அவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஆன்மீக வழித்தேடலில் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டிடவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே ஆத்மாவே கொடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. இரு பாலருக்கும் தன்னை வணங்குவதில் அல்லாஹ்

பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?

அன்றி, “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக!” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்) வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202) “பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்) இறைவனோடு பேசுவதுதான் பிரார்த்தனை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால்

இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை

“உறவுகள் மேம்பட… சமுதாயம் சீரடைய…!” – நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் 3ம் பரிசு பெற்ற கட்டுரை!

இது நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கட்டுரை. அபூதபியில் வசிக்கும் ஃபரினா அல்தாஃப் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். “உறவுகள் மேம்பட... சமுதாயம் சீரடைய...!” மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன்

ஜனநாயகம் ஓர் ஆய்வு!

ஜனநாயகம் என்றால் மக்களுக்காக மக்களால் மக்களே ஆள்வது. இந்தியா உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், இன்னும் பல மதத்தவர்கள் வாழுகின்றனர். அதில் பொரும்பான்மையாக இந்துக்கள்தான் உள்ளனர். முஸ்லிம்கள் இரண்டாவது  பெரும்பான்மையினர். அப்படிப்பட்ட முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுடைய முழு தியாகத்தை பதித்தனர். சுதந்திரம் கிடைத்து 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. சில இமாம்கள் ஜனநாயகம் ஹராம் என்று கூறுகின்றனர். இதைக் கேட்டு மக்கள் ஜனநாயகம் இஸ்லாதிற்கு

இரும்பு ஓர் உதாரணம்!

இரும்பு என்றால் அது மிகவும் வலிமையானது, உறுதியானது என்று அறிவோம். வலிமையான உடல்களை கொண்ட நபர்களை இரும்பு மனிதன் என்று உதாரணம் கூறுவார்கள். ஆனால் அந்த இரும்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று யாரும் அறிந்ததில்லை. இரும்பு என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டதும் அவனால் இந்த பூமிக்கு அனுப்பட்டதும் என்று கீழ்க்காணும் வசனம் உணர்த்துகிறது: நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும்

Top