You are here
Home > Uncategorized > கஞ்சா பாக்கெட்டுகளுடன் நர்ஸரிக்கு வந்த சிறுவன்!

கஞ்சா பாக்கெட்டுகளுடன் நர்ஸரிக்கு வந்த சிறுவன்!

மான்செஸ்டர்:மூன்று வயதான நர்ஸரி மாணவன் பாடம் படிக்க வகுப்பில் 3 கஞ்சா பாக்கெட்டுகளுடன் வந்துள்ளான். இது பிரிட்டனில் நடந்த சம்பவம்.

சக மாணவர்களுடன் விளையாடும் வேளையில் மாணவனின் சட்டைப்பையில் இருந்து கஞ்சா பாக்கெட் கீழே விழுந்தது. இது ஆசிரியையின் கண்ணில் பட்டது. உடனே அவர் மாணவனிடம் விசாரிக்கும் பொழுது தன்னிடம் இன்னும் 2 பாக்கெட் கஞ்சா இருப்பதாக தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸரி பள்ளிக்கூட பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

தனது தந்தை சிகரெட்டுடன் இதனையும் சேர்த்து புகைப்பார் என்று அச்சிறுவன் ஆசிரியையிடம் தெரிவித்தான். இச்சம்பவத்தை தொடர்ந்து சிறுவனின் தந்தையை போலீஸ் கைது செய்தது. இவர் அடுத்தமாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Leave a Reply

Top