You are here
Home > Uncategorized > ஈராக்:தொடர் குண்டுவெடிப்பில் 37 பேர் பலி!

ஈராக்:தொடர் குண்டுவெடிப்பில் 37 பேர் பலி!

பாக்தாத்:தலைநகரான பாக்தாத் உள்பட ஈராக்கின் பல்வேறு நகரங்களில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.  பாக்தாத், கிர்குக், ஸமாரா ஆகிய நகரங்களில் 20 கார் குண்டுகள் வெடித்துச் சிதறின.கண்ணி வெடித்தாக்குதலும் நடந்தது.

பாதுகாப்பு ராணுவத்தினரை குறிவைத்து பெரும்பாலான நகரங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹமத் அமீன் மற்றும் அவரது குழுவினர் அலுவலகம் வரும்வேளையில் பாக்தாதில் வைத்து அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஷியாக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பாலான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. தென்மேற்கு பாக்தாதில் அல் அமல், தாஜி ஆகிய இடங்களில் குண்டுவெடித்து 9 பேர் கொல்லப்பட்டனர். 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. அல் கஸலியாவில் இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். கிர்க்குக்கில் இரண்டு கார்க்குண்டுகள் வெடித்து 9 பேர் கொல்லப்பட்டனர். 24 பேருக்கு காயம் ஏற்பட்டது. சமாராவிலும் இரண்டு கார் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. வியாழக்கிழமை ஈராக்கில் பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Top