You are here
Home > தலைப்புச்செய்தி > டெல்லி: மோடி பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3ல் பா.ஜ.க. தோல்வி!

டெல்லி: மோடி பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3ல் பா.ஜ.க. தோல்வி!

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3ல் பா.ஜ.க. தோல்வியை சந்தித்துள்ளது. கட்சியின் செல்வாக்கு மிகுந்த ரோஹிணி, துவாரகா, சுல்தான்பூர், மஜ்ரா, ஷஹ்தாரா, சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் துவாரகா மற்றும் ஷஹ்தாராவில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. சுல்தான்பூர், மஜ்ரா தொகுதிகளில் பா.ஜ.க. நான்காவது தடவையாக தோல்வியை தழுவியுள்ளது. ஷாலிமார் பாக், ரோஹிணி, கரோல்பாக், க்ரேட்டர் கைலாஷ், திலக் நகர், டெல்லிகாண்ட், ஷக்கூர் பஸ்தி ஆகிய கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை இழந்தது பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஷாலிமார் பாகில் நான்கு தடவை எம்.எல்.ஏ.வாக இருந்த ரவீந்தர் பன்ஸல், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். கரோல்பாகில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர் சுரேந்தர் பால் தாவலும் தோல்வியை தழுவினார்.

Leave a Reply

Top