You are here
Home > Uncategorized > வங்காளதேசம்:ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருக்கு 90 ஆண்டுகள் சிறை!

வங்காளதேசம்:ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருக்கு 90 ஆண்டுகள் சிறை!

டாக்கா:1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி 91 வயதான ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் குலாம் அஃஸமிற்கு வங்காளதேசத்தின் சர்ச்சைக்குரிய சர்வதேச தீர்ப்பாயம் 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. முன்னதாக அங்கு சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்துடன் ஜமாஅத்தே இஸ்லாமி கட்சி இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.. இந்தப் போரின்போது ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்தப் போர்க் குற்றம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம்-1 கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரித்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கி வருகிறது. நீதிபதி ஏ.டி.எம். பஸல் கபீரை தலைவராகக் கொண்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பாயம் தனது 5ஆவது தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: ஜமாஅத்தே இஸ்லாமி கட்சித் தலைவர் குலாம் அசம் (91) மீது கொலை மற்றும் துன்புறுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Top