You are here
Home > Uncategorized > அஸ்ஸாம் கலவரம்:மரண எண்ணிக்கை 50ஐ தாண்டியது!

அஸ்ஸாம் கலவரம்:மரண எண்ணிக்கை 50ஐ தாண்டியது!

கொக்ராஜர்:அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் வகுப்புவாத கலவரத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.

வன்முறை முற்றியுள்ள கொக்ராஜர் மாவட்டத்தில் ராணுவ கொடி அணிவகுப்பை நடத்தியது. சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்ரி மாவட்டத்தில் கவ்ரங்கா நதியில் இருந்து ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 11 பேரை காணவில்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மை குடியேற்றக்காரர்களுக்கும், போடோக்களுக்கும் இடையே வியாழக்கிழமை வகுப்புவாத வன்முறை துவங்கிய பாக்‌ஷா மாவட்டத்தில் மர்ம நபர்கள் 3 வீடுகளை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். ஆனால், உயிர் சேதம் குறித்து தகவல் இல்லை. கொக்ராஜர், துப்ரி, சிராக் மாவட்டங்களில்ஒரிரு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று கொக்ராஜரில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. துப்ரி மாவட்டத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. சிராகில் இரவு கால ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 250 அகதி முகாம்களில் அபயம் தேடி உள்ளனர். கலவரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கொக்ராஜர் மாவட்டத்தில் இன்று பிரதமர் பார்வையிடுகிறார். புதன்கிழமை மீண்டும் துவங்கிய ரெயில் போக்குவரத்து சாதாரண நிலையில் தொடர்கிறது.

துப்ரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் 2 வயது சிறுமியும், 60 வயது நபரும் இறந்துள்ளனர். உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என முகாமில் தங்கியிருப்போர் குற்றம் சாட்டுகின்றனர். முகாம்களில் மருந்து, உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Leave a Reply

Top