கட்டுரைகள் தலைப்புச்செய்தி

வருங்காலம் எங்களை விடுவிக்கும்!

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள், ஊதாரித்தனங்கள் மீது ஒன்றிய அரசு ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். எம். ஆர். ஸ்ரீநிவாசன், எஸ். கே. ஜெயின், காசிநாத் பாலாஜி, ஆர். எஸ். சுந்தர், மன்மோகன் சிங், நாராயணசாமி, (இறந்துபோன ரஷ்யத் தூதர்) அலெக்சாண்டர் கடாக்கின் ஆட்கள், விளாடிமிர் புடின் போன்றோரைப் பிடித்து விசாரிக்க வேண்டும்.

ஒரு மேற்கத்திய நாட்டில் இந்த ஊழல், ஊதாரித்தனம் நடைபெற்றிருந்தால், பொதுமக்கள் நலன்களை கருத்திற்கொண்டு அரசும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பெரும் பிரச்சினைகளை எழுப்பியிருப்பார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி நடத்தும் அணுக்காம அரசிடம், ராகுல் காந்தி, லல்லு, முல்லு, மாயாவதி உள்ளிட்ட அரைகுறைத் தலைவர்களிடம், தில்லியைக் கண்டு அஞ்சி நடுங்கும் தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளிடம் எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் ஒன்றைச் சொல்கிறேன், தோழர்களே!
எழுதி வைத்துக்கொள்ளுங்கள், கூடங்குளம் அணுஉலைகளிலிருந்து இன்னும் மோசமான செய்திகள் அவ்வப்போது வரும், நீண்டகாலத்துக்கு வந்துகொண்டேயிருக்கும்.

அவதூறுகளை அள்ளி வீசி, எளிய மக்களாகிய எங்களைக் கொச்சைப்படுத்தி, குற்றப்படுத்தியவர்கள்
இந்திய/தமிழ்க் குடிமைச் சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும். ஓடி ஒளிந்தவர்கள், ஊமையாக இருக்கிறவர்கள், எங்கள்மீது களங்கம் கற்பித்து தப்பிக்க முயல்கிறவர்கள் எல்லோரும் வரிசையாக குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கப்படுவார்கள். அந்த வருங்காலம் எங்களை விடுவிக்கும்.

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
நாகர்கோவில்,
டிசம்பர் 29, 2017.