இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

டீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியை நோக்கி சென்று இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லி வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் காஷ்மீரில் கல்லெறியும் சமபாவங்கள் குறைந்திருப்பதாகவும், நாடு முழுவதும் விபச்சாரத் தொழில் சரிவை சந்தித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நவம்பர், 8 -ம் நாளை “Anti-Black Money Day” (கருப்பு பணத்திற்கு எதிரான தினமாக) கொண்டாடுவதற்கு பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதையொட்டி அவர் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் உடலை விற்கும் வியாபாரம் குறைந்துள்ளதாகவும் , கள்ளப்பணங்களின் மூலம் நேபாள் மற்றும் பங்களாதேஷிலிருந்து விபச்சாரத்திற்கு புழங்கிய கருப்பைப்புப்பணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கட்டுக்குள் வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்த கல்லெறியும் சம்பவங்கள் இந்த நடவடிக்கைக்கு பின்னர் நின்று போயுள்ளதாகவும், இதுவே இந்த நடவடிக்கை ஒரு தேசிய நலன் சார்ந்த நடவடிக்கை என்பதற்கு ஆதாரம் எனவும் அவர் கூறினார்.

இந்த நாளை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக முன்னாள் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது “திட்டமிட்டு சட்டப்போர்வமாக நடைபெற்ற ஊழல்” என்றும் இந்த நாள் இந்திய வரலாற்றில் கருப்பு நாள் என்றும் குற்றம் சாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


One comments on “டீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*